FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Niru on November 21, 2016, 01:08:13 AM
-
காதல்
காதல் !! காதலுக்கு நீ துரோகம் செய்தது இல்லை
அப்படி என்றால் யாருக்கு தோல்வி
காதலில் நீ தோற்று விட்டாய் என்று நினைக்காதே
காதல் உன்னிடம் தோற்று விட்டதை உணர்ந்து கொள்.,
உன்னை மறந்தவள் ஒரு நாள்
உன்னை நினைப்பாள்
உன்னை தேடுவாள்
அன்று சொல் நான் உன்னை மறக்கவில்லை!!
என்னை காதல் மறந்து விட்டது என்று
வாழ்வில் எனக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்
உன் நினைவுகள் மட்டுமே
நினைவுகளோடு என் வாழ்க்கை
பயணம் தொடர்கிறேன்!! ஏனெனில்
என்னை காதல் நினைக்கவில்லை
காதலில் நான் கற்ற பாடம்
என் வாழ்க்கையை மாற்றி விட்டது
வாழ மறுக்கிறேன்
வாழ நினைக்கிறேன்
வாழ்ந்து நிரூபிப்பேன்
என்னிடம் காதல் தோற்று விட்டது
நான் தோற்க்கவில்லை !! ஏனெனில்
( என் இதயத்துள் இன்னும் காதல் நீயெனவே )
உண்மையில் சிறந்த உறவு நட்பு நன்பர்களுக்கு என் நன்றி உரித்தாகட்டும்!
-அன்புடன் நிருபன் !!
-
வாழ்த்துக்கள் !!
தொடர்ந்து எழுதவும் !!