FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on November 20, 2016, 12:22:46 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: MysteRy on November 20, 2016, 12:22:46 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 125
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Paul Walker ( Dong Lee ) சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F125.jpg&hash=c94d001edd77ba16b0ffc0afc6fb0f55e2ec0f09)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: ! Viper ! on November 20, 2016, 12:39:12 AM
வாழ்க்கையில் என்னை தொலைத்த நேரத்தில்
நான் யார் என்று என்னை நானே தேடி கொண்டு இருந்த நிலையில்
எனது உலகம் சுற்றி இருள் அடைய
எனது கண்ணீர்  இருளில் காணாமல் போக
எனது உலகம் இப்படியே போய்விடுமோ நினைக்கும் பொழுது
ஒரு சிறு வெளிச்சம் என்னை பார்க்க செய்தது

அவள் என்னை தாங்கி பிடித்தாள்
இருளில் இருந்து என்னை தூக்கி காதல் உலகத்தில் தூக்கி சென்றாள்
என்னை சிரிக்க வைத்தாள் ரசிக்க வைத்தாள்
எனது கண்களில் இருந்து கண்ணீர் வராமல்
அதை தடுக்கும் விழிகளாய் அவள் இருந்தாள்

நானும் வாழ்வை ரசித்தேன் உணர்தேன்
இனி எனது வாழ்வில் இருள் இல்லை
என்னை தாங்கி பிடிக்கும் அவள் கைகளுக்கு
என்றும் நான் பூவாக அவளை சுற்றி அழகாய் காண்பேன்

வானத்தில் பறந்து கொண்டு இருந்த நேரத்தில்
வாழ்வின் இனி எனக்கும் அர்த்தம் இருக்கிறது
 என்று நினைக்கும் நொடியில்
எனக்காகவே பிறந்தவள் இவள் 
என்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நேரத்தில்

எனது காதலை அவள் இடம் சொல்ல வரும் அந்த ஒரு நொடியில்
எனது உலகம் உடைந்து போனது
இதயம் கிழிந்து அறுந்து போனது
ரத்தத்தில் என்னை வேர்க்க செய்தது
எனது சிரிப்புகள் அடங்கி போனது
கண்ணீர்  ரத்தமாய் வெளி வந்தது

அவள் என்னை விட வேறு ஒருவனை மனதில் நினைத்து இருக்கிறாள்
என்று தெரிந்த பின்பு நான் அங்கேயே அழிந்து போனேன்
இனி இவள் பேசும் பேச்சு காட்டும் அக்கறை எனக்கு சொந்தமானது
இல்லை என்று நினைக்கும் பொழுது எனது இதயம் வெடிக்கிறது

எந்த ஒருத்தி என்னை தாங்கி பிடித்து வெளிச்சம் கட்டினாலோ
அவளே என்னை மீண்டும் இருளில் தள்ளி விட்டாள்
உடைந்து போனேன் நொறுங்கி போனேன் சிதைந்து போனேன்
இனி எனக்கு என்ன இருக்கிறது இந்த உலகில் என்று எண்ணி துடித்தேன்

அவளிடம் நான் காதலிக்கிறேன் என்று காட்டிக்கொள்ளாமல்   
அவளிடம் இருந்து விலகி விட்டேன்
என்னவாக இருந்தாலும்  சிறிது  நாட்கள்
என்னை சிரிக்க வைத்தவள் என்னையும் தாங்கி பிடித்தவள்
அவள் வாழ்க்கையில் என்றும் எப்பொழுது சந்தோசமாக
இருக்க வேண்டும் என்று தினம் அந்த ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
இன்று வரை அவளை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து கொண்டு
எனது காதலை நான் என்னிடமே வைத்து கொண்டேன்

வளரட்டும் அவளது சந்தோசம்
உடைந்து போகட்டும் எனது உலகம்
அவளுக்காக உயிர் வாழும் எனது காதல்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: AnoTH on November 20, 2016, 02:06:00 PM
அன்புள்ள காதலிக்கு,

நிலவுதனில் என் விழிகள் நோக்கையில்
உன் முகமது எந்தன் கண்களை
உறையவைக்கும். உறைந்து போன
நொடிகளை உன் குரலோசை ஏந்தி
வந்த தென்றல் என்னைத் தீண்டி
விழிக்க வைக்கும்.


தேசம் கடந்து பாரினிலே பாதகனாய்
நாட்கள் தொடர.
கடல் தாண்டி பதுமை உந்தன்  குரலோசை
கேட்க எந்தன் மனது விரைய.


நினைவாய் தொடரும் நாட்களை
நிழலாய்த்  தொடர  யதார்த்தம் மறுக்கும்.

அதையிறுத்து  இதயம் வெதும்பும்
தருணத்தில், என் கண்ணீர்த்துளிகள் கொதித்து
வடிந்தோடும். காற்றில் நீராவியாய் கலந்து போன
கண்ணீர்த்  துளிகள் நின்னை சரணடையும்.


அனுதினம் உந்தன் அழகை எந்தன்
ஞாபகங்கள் எடுத்துரைக்கும்.
அவள் அழகை வெல்ல யாருண்டு 
இப்புவிதனில் என என் உள்ளம்
பெருமை கொள்ளும்.


பேச்சிழந்த ஊமையாய் இந்நொடிகள்
யுகமென எனது  புத்தி உரைக்கும்.
எந்தன் உணர்வை சொல்ல என் விரல்கள்
சில வரிகள் கிறுக்க முனையும்.


நாடத்துடிக்கும் இதயம் நிஜமறிந்து
துடிக்க மறுக்கும்.
ஆனவன் என் உணர்வின் பதற்றம்
எரிமலையாய் வெடிக்கும்.
உணவது என் வயிற்றை நிரப்ப
என் மனது  தடுக்கும்.
சினம் கொண்ட என் மனம்
இந்த வாழ்வை ஏற்க மறுக்கும்.


இந்நிலையில் எனது பேனாவின்
கிறுக்கல் காகிதத்தில் பரவும்.
வார்த்தை நிரம்பாது கண்ணீர்
மொழியை மறைக்கும்
அதையும் கடந்து உணர்வு பெருக்கும்.
பேனாவும் வேகமாய் பல வரிகள்
கிறுக்கும். அதை ஏற்க உன் விலாசம்
கதவைத் திறக்கும். 
உன் கையில் என் மனம் வரிகளாகத்   
தவழும்.


இப்படிக்கு
காதலன்


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: DaffoDillieS on November 20, 2016, 02:41:00 PM
மங்கிய நிலவொளியில்..
பால் பொழிந்த அவ்வேளையில்..
என் கைக்கெட்டாத் தொலைவில்..
நட்சத்திரம் ஒன்று மினுமினுக்கக் கண்டேனே..!

சுவாசிப்பதையும் மறந்து..
தன்னிலையும் மறந்து..
வெப்பம் பட்ட பனியாய் நானும் உருக..
சிறகுகள் எனக்கே முளைக்க ..
பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் பறக்க..
என்னையே வியந்தேனே..!

திக்குத்தெறியாக் கப்பலுக்கு..
கலங்கரை வெளிச்சம் புலப்பட்டது போல..
வாழ்வின் அர்த்தம் புலப்பட..
நானோ ஆனந்தத்தில் மிதந்தேனே..!

தொலைதூரத்து விண்மீனாய் நீ..
அந்த விண்மீனையே அடைய நினைக்கும் மின்மினியாய் நான்..!
கானல் நீராகத்தான் போவாயோ!
காட்டாற்று வெள்ளமாகத்தான் எனை அடித்துச் செல்வாயோ!

ஆசைகளனைத்தும் சில பக்கங்களிலடக்கி..
என் மூச்சுக்காற்றினால் தூதனுப்பினேனே!..
ஆம்..என்ற ஒற்றைச் சொல்லில் என்னை வென்றே போனாயே..
என் மணாளனே!

அண்டங்கள் அழிந்தாலும்..
கண்டங்கள் பிளந்தாலும்..
இப்பூமியே பாண்டோராக் கிரகமாய் மிதந்தாலும்..
வானமே இடிந்து வீழ்ந்தாலும்..
உனை நானும் எனை நீயும் கைப்பிடிக்கக் காத்திருப்போமே!

காதலில் பிரிவென்பதும்..
சுகமான துன்பம் தானே!
நானும் உனதருகில்..
தோள் சாய்ந்து...
உன் இதயத்துடிப்பைச் செவிமடுக்கும் தினம் தொலைவில் இல்லையே!
நம் இதயங்களும் நினைவுகளும் தூது போகட்டுமே அதுவரை!!

~~நன்றி~~
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: DoRa on November 20, 2016, 11:25:39 PM
என் அன்பே
நீ இருக்கிறாய்  தொலைவில்
நான் இருக்கிறேன் உன் நினைவில்

பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியாத பந்தம்
தவிர்க்க முடியாது நம் உறவு

எனக்குள் நீ
உனக்குள் நான்
நமக்குள் காதல்

என்னுயிர் அழியாமல்
உன் நினைவு அழியாது
என்றும் என்னிடமிருந்து

காலங்கள் கடந்து போகிறது
வருவாய் நேரத்தோடு 
நான் இருக்கிறேன் கண்ணீரோடு

உனக்காக காத்துக்கொண்டிருக்கும்
என் உண்மை காதல்
உன் வருகையை பார்த்திருக்கும்
     என்றும்
     இன்றும் 
     எப்பொழுதும்
           -உன் டோரா

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: Niru on November 21, 2016, 01:07:14 AM
தோல்வி இல்லா காதல்!!

காதல் !! காதலுக்கு நீ துரோகம் செய்தது இல்லை
அப்படி என்றால் யாருக்கு தோல்வி

காதலில்  நீ தோற்று விட்டாய் என்று நினைக்காதே 
காதல் உன்னிடம் தோற்று விட்டதை உணர்ந்து கொள்.,

உன்னை மறந்தவள் ஒரு நாள்
உன்னை நினைப்பாள்
உன்னை தேடுவாள்
அன்று சொல் நான் உன்னை மறக்கவில்லை!! 
என்னை காதல் மறந்து விட்டது என்று

வாழ்வில் எனக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்
உன் நினைவுகள் மட்டுமே
நினைவுகளோடு என் வாழ்க்கை
பயணம் தொடர்கிறேன்!! ஏனெனில்
என்னை காதல் நினைக்கவில்லை

காதலில் நான் கற்ற பாடம்
என் வாழ்க்கையை மாற்றி விட்டது
வாழ மறுக்கிறேன்
வாழ  நினைக்கிறேன்
வாழ்ந்து நிரூபிப்பேன்
என்னிடம் காதல் தோற்று விட்டது

நான் தோற்க்கவில்லை !! ஏனெனில்
( என் இதயத்துள் இன்னும் காதல் நீயெனவே  )

உண்மையில் சிறந்த உறவு நட்பு நன்பர்களுக்கு என் நன்றி உரித்தாகட்டும்!

                                                                                           -அன்புடன் நிருபன் !! 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: SweeTie on November 21, 2016, 02:44:45 AM
அழகிய நிலா காலமது
பட்டுத் தெறிக்கும் நிலவொளியில்
வெள்ளி முலாம்  பூசிய வெண்பஞ்சு முகில்கள்
நகரும்  வெண்பஞ்சு  நுரையில்,  தனிமையில்   
நானும் அவனும்   எதிரும் புதிருமாய்
இரு  துருவ நட்சத்திரங்கள் 

வெள்ளை காகிதத்தில் விழுந்த
கரும்புள்ளி போல் தெரிந்தான் அவன்
என் கண்கள்  அவனை உள்வாங்க 
இதயம்  பருந்துபோல் அவனை வேட்டையாடியது
அவன் இதயத்தின் சுடும் காற்றை சுமந்து வரும்
பலூன்  என்னை நோக்கி வேகமாய் வருகிறது.

அன்னம் போன்ற அந்த பலூன் ஆடி அசைந்து
காலில்  ஒரு மடலும் சுமந்து வருகிறதே
தமயந்தி போல் நானும் சுதாகரித்துக்கொண்டேன்
என் காதலன்  நளன்  பற்றிய  நினைவுகள் 
நிலத்தில் படரும் வெள்ளரிபோல் 
என்னை சுற்றி  படர  ஆரம்பித்தது.

காதலியே!  காரிகையே ! என் கார்மேககுழலியே !!
தேவைதையே!  தெவிட்டா அமுதே!  என் தேம்பாவணியே!!
வானத்து  வெள்ளிகள் எல்லாம் சேர்த்துவந்த என் கோமகளே!!
நிலவுக்கு தங்கையாய்  வரம்பெற்று வந்தவளே! கண்மணியே!!
பொய்கையில் புரண்டுவந்த மீனவளே!   பவித்திரமே !!
வல்லினத்தைக் கவரவந்த மெல்லினமே!  என் உயிரே !!


காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுத்தவள் நீ !
என் உடலின் நாடி நரம்பெல்லாம் குடிகொண்டவளும் நீ !
நாம் இருவரில்லை  ஒருவர் என்று என்னை வேரோடு சாய்த்தவளும் நீ !
இரவு  பகலின்றி என்னை  ஆட்டிப் படைத்தவளும்  நீ !
உனைப் பிரிந்த  கணங்கள்  என்னை  ஊசிபோல்  குத்துதடி
 இனியும் உனைப் பிரியேன்   வந்துவிடு சீக்கிரமே

என்  மனசின் எதிரொலி
மடலில்  இருக்கும் அவன்  காதலை  எடை போட்டபடி
என் கைகள்  காற்றில் அசைந்துவரும்  பலூனை 
தாவிப்  பிடிக்க  பாய்ந்து செல்கிறது.
என் துரதிர்ஷ்டம்  டாப்...... என்ற சத்தத்துடன்
பலூன் உடைகிறது.... என் கனவும் கலைகிறது.......
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: இணையத்தமிழன் on November 21, 2016, 10:05:29 AM

ரம்மியமான ராத்திரி வேளையிலே
ரீங்காரமிடும் கொசுக்கள் இடையே
மங்கிய நிலவொளியில்
மதிமயங்கி காத்திருந்தேன்
என் மன்னவன் வருகைக்காக

கறுப்போ சிவப்போ தெரியவில்லை
கனவிலே கண்டவனை
கண்ணெதிரே கண்டதும் இல்லை
கப்பலிலே வருவானோ அல்லது
கட்டைவண்டியில் வருவானோ
அதும் நான் அறியேன்

என்மனதைக் களவாட வருவானோ
அல்லது என்னைக் கட்டிப்பிடிக்க வருவானோ
அதும் நான் அறியேன்
எத்திசையில் வருவானோ
என்றைக்கு தான் வருவானோ
காதல் சொல்ல வருவானோ
இல்லை கைப்பிடிக்க வருவானோ
அதும் நான் அறிந்ததில்லை
 
காத்திருப்பதும் சுகம் தான்
காதலனுக்காக இல்லை உண்மை காதலுக்காக
மணாளனின் வருகையை எதிர்நோக்கி
மனமுருகிக் காத்திருப்பேன் என்றென்றும்

                                              -இணையத்தமிழன்
                                                 ( மணிகண்டன் )
                                                   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: ReeNa on November 21, 2016, 11:35:47 AM
தேசம் விட்டு  தேசம் போனேன்
தேவியே என் நினைவுகளோ உன்னோடு ….

காதலி நீ அருகில் இல்லை - அதை
விவரிக்க என் மனதிலோ வார்த்தைகள் இல்லை ....

தொலைவில் நீ இருந்தாலும் - என்
நினைவிலும் நீ இருப்பாய் எப்பொழுதும்!
 
உன்னையே நினைத்து நினைத்து - நான்
உருகி கொண்டிருப்பேன் முப்பொழுதும் !!
 
தெரியாத முகங்கள், அறியாத இடங்கள் !
அதிலும் வாழவைப்பது அன்பேயுன் நினைவு தடங்கள் !!
 
தினம் தினம் தவிப்போடு பார்த்திருப்பேன்!
தித்திக்கும் உன் கடிதத்திற்காக காத்திருப்பேன் !!

உன் கடிதமோ தூரம் குறைக்கிறது - அதுயென்
கஷ்டங்களை எல்லாம் மெல்ல  மறக்க வைக்கிறது!!

மழைத்துளி மேகத்தையும் பூமியையும் சேர்த்திடும்...
மாறாத உன்அன்பு  உன்னையும் என்னையும் சேர்த்திடும்...
 
தொடு வானம்  தூரம் இருந்தாலும்
துள்ளும் என் மனம்  ஏங்குதே  உன்னிடம் சேர்ந்திடவே !

உண்மையான நேசம் கொண்டு - மகிழ்வுடன்
இருவரும் ஒன்றாய்  இணைந்து வாழ்ந்திடவே !!
 
தென்றல் வந்து மெல்ல என்னை  தீண்டுகின்ற நேரம்
தெவிட்டா உன் வார்த்தை அன்பை தூண்டுகின்ற நேரம்.
 
நீ என் வருகைக்காக, கடிதத்திற்காக
காத்துக்கொண்டிருக்கிறாய்  !..
நேரம்போவது தெரியாமல் பாதையினை விழியால்
பார்த்து கொண்டிருக்கிறாய் !!
 
நானோ உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்கே தெரியாமல்!...
உன்னுள் முழுதாய் கலந்து விட்டேன்
என்னையும் அறியாமல்!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 125
Post by: JEE on November 21, 2016, 03:36:51 PM
கனவிலே  ஆகாயத்திலே
புல்லும் மரமும் வளரலாம்
கனவிலே  ஆகாயத்திலே
காரும் பைக்கும் ஓட்டலாம்............

கனவிலே  ஆகாயத்திலே 
சந்திரனை தொட்டது யார்?
சந்திரனை தொட்டது போல
சைகையால் டாட்டா காண்பிக்கிறாள்............

கனவிலே  ஆகாயத்திலே
கற்றூணை நட்டவர் யார்?
கற்றூணில் இருவரும் நிற்பது போல
மேகங்கள் நடுவில் நிற்கின்றனரே............

கனவிலே  ஆகாயத்திலே 
பலூனை பறக்கவிட்டது யார்?
பலூனோடு இணைத்து மடலை
இருவரிலொருவர்  பறக்கவிட்டனரே...........

கனவிலே ஆகாயத்திலே
மேகத்திலே சந்திக்கவிட்டது யார்?
கற்றூணிலே நின்று பிரிவை
சைகையால் தெரிவிக்கின்றனரே...........


கனவிலே ஆகாயத்திலே
பிரிந்து செல்லும் காட்சி
எத்தகைய பிரிவோ?
இன்பமோ? து
ன்பமோ?..........


திருமணம் நிச்சயிக்கப்பட்டது
கன்னியின் வயிற்றினிலே கரு.......

மணமகனோ ரகசி
மாய்
மணமகளை  தள்ளிவிட
ஆலோசணையாயிருந்தான்..........


இறைவன் கனவிலே தோன்றி
கரு என்னால் உண்டானது என்றார்..........

கனவு கடவுளின் செயல்பாடு.....

குழம்பிய இரு மனதிற்கும் தீர்வு
திருமணமும் நடந்தது......

இன்று  மனுகுலத்தை
மீட்கவந்த
நம்பியோர் நம்பிக்கைக்கு பலன்
கொடுக்க வந்த

மீட்பர் பிறந்தார்............

யாவரின் கனவுகளும் சிறக்க
கண்ட கனவுகட்கும் மேலாய் 
காரியங்களனைத்தும் சிறக்க
இறையருள் தருவானாக..........

வாழ்க வளமுடன்..........