FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on November 18, 2016, 01:20:43 AM

Title: காதல் ரோஜாக்கள்
Post by: SweeTie on November 18, 2016, 01:20:43 AM
விடியாத காலைப்பொழுது என் கண்முன்னே
காதல் மலர்கள் மொட்டவிழ்ந்து போகும் நேரம்
வீணையில் இருந்து வரும்  நாதமது
மீட்டுபவன் அவனாக இருக்கக்கூடாதா?
பேராசையுடன்  மனசு பேதலித்து அலைகிறது
காதலில் ஊடல்  என்று   என்னை  பாராமல் இருப்பானா?
என்று  முடியும்  இந்த கண்ணாமூச்சி விளையாட்டு?
காத்திருந்து  காலங்கள்  போய்விடுமா?

மீண்டும்  உன்னை எப்போது பார்ப்பேன்
என ஏங்கித்தவிக்கிறது  பாழாய்ப்போன இதயம்
தினமும் நீ கொடுத்த ரோஜா மலர்களை
பொக்கிஷமாய் என் கைப்பையில் வைத்துள்ளேன்
நீ இருக்கும் என் இதயம் ஒருவேளை நின்றுபோனால்
அந்த உதிர்ந்த ரோஜா இதழ்களால்  என்னை  அலங்கரித்துவிடு
அத்தனையும் உன் விரல்களின்  உணர்வுகளைக் கொண்டவை
என்னுடனேயே  அவை பயணம் செய்யட்டும்...
 
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: GuruTN on November 18, 2016, 01:37:37 AM
சூப்பர் கவிதை ஜோ மா.. அசத்துங்க.. .அன்பு வாழ்த்துக்கள்...
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: AnoTH on November 18, 2016, 02:07:26 PM
அன்புத்தமக்கை sweetie

காதலன் கொடுத்த ரோஜாக்கள்
உடலில் இருந்து உயிர் பிரிந்தாலும்
உடலை போர்வையாக அலங்கரித்து
காதலனின் விரல்களின் உணர்வாய்
தொடரும் என்ற சிந்தனை அதி சிறப்பு
வாழ்த்துக்கள்.


அருமை
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: Maran on November 18, 2016, 06:29:53 PM



அழகான கவிதை தோழி, நல்ல கவிவளமை வாழ்த்துக்கள். கவிதையின் முதல் இரண்டு வரிகளை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் அழகான சிந்தனை!.

இன்று உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளிலும் காதல் வாக்கியம் கேட்கும் பாக்கியம் பெற்றவை ரோஜாக்கள்!

கவிஞர் தபுசங்கரின்  கவிதைகள் எனக்கு நிரம்பவே பிடிக்கும். அவரது காதல் துளிகள் படிக்க படிக்க திகட்டாதவை. எளிமையான சில வரிகளிலே அழகான கற்பனைகளைக் கோர்த்துச் செல்வது அவருக்கு கைவந்த கலை... அத்தகைய திறமையை உங்கள் கவிதைகளிலும் பார்கிறேன், பாராட்டுக்கள்.




Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: SweeTie on November 18, 2016, 07:50:59 PM
நன்றிகள்  தோழர்கள்  குரு,  அனோத்,  மாறன்.   
மாறன்  இதுவரை நான்  அவர் கவிதைகளை  படிக்கவில்லை.  இன்று நீங்கள் சொன்னதுக்கு பிறகு படிக்கவேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது.
உங்கள்  ஆசிகள் எனக்கு பெருமை சேர்க்கின்றன.
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: ரித்திகா on November 19, 2016, 06:57:06 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg3.dreamies.de%2Fimg%2F240%2Fb%2Fpwivw8o64q3.gif&hash=0fcd027cc3a7e410bbb86bf98c2e0a9debfaf7f4)

வணக்கம் ஸ்வீட்டி பேபி ....

மிக அழகான கவிதை .....
படித்தேன் ரசித்தேன் மெய்சிலிர்ந்தேன் ....

''நீ இருக்கும் என் இதயம்
ஒருவேளை நின்றுபோனால்
அந்த உதிர்ந்த ரோஜா இதழ்களால் 
என்னை  அலங்கரித்துவிடு ''

அழகான வரிகள் ...அருமை அருமை தோழி ....
தொடரட்டும் கவிப்பயணம் .....
வாழ்த்துக்கள் .........

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg3.dreamies.de%2Fimg%2F240%2Fb%2Fpwivw8o64q3.gif&hash=0fcd027cc3a7e410bbb86bf98c2e0a9debfaf7f4)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picturesanimations.com%2Fw%2Fwinnie_the_pooh%2Fpooh026.gif&hash=07b510a684fb0d60f6ed297c7467f7ea43e48abf)
~!!ரித்திகா!!~
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: Karthi on November 20, 2016, 04:18:06 AM
அன்பு தோழியே உங்கள் பெயரை போலவே உங்க கவிதையும் ரொம்ப ஸ்வீட் ஆஹ் இருக்கு .....இந்த கவிதையா படிச்சா யாரா இருந்தாலும் கொஞ்ச நேரம் மெய் மறந்துடுவாங்க ....அவ்ளோ அருமையாக இருக்கு ....ஸ்வீட்டி கு என் வாழ்த்துக்கள்  :)
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: SweeTie on November 20, 2016, 06:32:29 AM
நன்றி தோழி  ரித்திகா.    கார்த்தி  நன்றி ...ரொம்பத்தான்...... :) :) :)
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: aasaiajiith on November 22, 2016, 11:45:00 AM
நல்ல வரிகள் !!

கூடுமானவரை உரைநடை சாயலை தவிர்க்கப்பார்க்கவும் !!
மாறன் அவர்கள் கூறியதை போல நிறைய நிறைய வாசியுங்கள்
படிக்க படிக்க  நல்ல கவித்துவம் இயல்பிலேயே கைகூடும் .

வாழ்த்துக்கள் !!
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: பொய்கை on December 03, 2016, 12:44:52 AM
அருமையான கவிதை ..
எளிய நடை ..கவிதை..

உங்கள் கவிதை படிக்க
தொல்காப்பியம் தெரியாத
கவிதை ரசிகன் . நான் ..

காதல் ரோஜாக்கள்
படித்த
காதல் ராஜாக்கள் ..

எத்தனை பேர் ?

அடேங்கப்பா !
என்ன ஒரு கற்பனை!
உங்கள் வரிகளில் !

உங்கள் கவி ஊற்று
பெருகட்டும் .. நாளும்.
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: SweeTie on December 03, 2016, 04:14:15 AM
நன்றி  தோழர் பொய்கை .    காதல் ராஜாக்களுக்காகத் தானே காதல் ரோஜாக்கள்   பூக்கின்றன.   எளிய நடையும்  கற்பனையும்  எனது அடையாளம்.   அனைவர்க்கும்  கவிதை புரிந்தால் அதுவே என் சந்தோசம் .   

நன்றி  ஆசை அஜித் .  மாறனின்  கருத்தை நீங்கள்  சரியாக விளங்கிக்  கொள்ளவில்லை போலும். 

"'கவிஞர் தபுசங்கரின்  கவிதைகள் எனக்கு நிரம்பவே பிடிக்கும். அவரது காதல் துளிகள் படிக்க படிக்க திகட்டாதவை.எளிமையான சில வரிகளிலே அழகான கற்பனைகளைக் கோர்த்துச் செல்வது அவருக்கு கைவந்த கலை... அத்தகைய திறமையை உங்கள் கவிதைகளிலும் பார்கிறேன் , பாராட்டுக்கள்:"
   
மாற்றான் தோட்டத்து மல்லிகையின் வாசத்தை மணக்க விரும்பாதவள்  நான்.   எனது தனித்துவத்தை இழக்க விரும்பாதவளுங்கூட…
Title: Re: காதல் ரோஜாக்கள்
Post by: SarithaN on December 10, 2016, 02:52:48 AM
வணக்கம் சகோதரி, அனைவரும் அனைத்தையும் சொல்லியாகிற்று,
உண்மை அன்பைதேடி அலையும் உயிர்களின் ஏக்கம் உங்கள் கவிதை!
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், நன்றி