FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 17, 2016, 09:48:56 PM
-
கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2Fgttt.jpg&hash=c05560e9e3484ea4312820df77be67b2e61c40bf)
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 1 கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் – 1 கப்
கேரட் – 1
பீன்ஸ் – 10
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிது
மிளகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை :
* பீன்ஸ், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
* நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மாவில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர், சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரம் புளிக்க வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து பாதியளவு வேகும் வரை வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* கரைத்த மாவை இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
* சுவையான சத்தான கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி ரெடி.