FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Explorer on November 15, 2016, 05:35:28 PM

Title: நட்பா காதலா
Post by: Explorer on November 15, 2016, 05:35:28 PM
அவள் என்னை பார்த்தாள்..
நானும் அவளைப்  பார்த்தேன்..
அவள் சிரித்தாள்.. அவள்
புன்னகையைக் கண்டு நானும் ரசித்தேன்..
தோழி என்று நினைத்தேன்..
தோளில்சாய்ந்து காதலைச் சொன்னாள்..
நானோ மோதலில் முடியும் என்றேன்..
அவளோ மாலை மாத்து என்றாள்..
அவளை நினைத்தேன்.. கண்களைக் கண்டேன்..
அதில் காதலும் தெரிந்தது.. 
சிலதினத்தில் காதலைச் சொன்னேன்..
அவள் ஆனந்தத்தில் மிதந்தாள் ..
நானோ காதலில் சிறகடித்துப் பறந்தேன் ..
நாட்களும் கடந்தன.. அன்பே ஆருயிரே என்றாள்..
அழிவே அரக்கனே என்றுக்கேட்டது..
காதல் வளர நட்பும் குறைந்தது..
நட்பு மாண்டது, நட்பு இல்லாமல் அன்பும் குறைந்தது..
விரிசலும் விழுந்தது ..காதலும் உடைந்தது ..
மாதங்கள் உருண்டது.. இருவரும் சந்தித்தோம்
ஒருவரை ஒருவர் தெரியாதது போல்..

நண்பரகளே நட்பு என்பது விருச்சம் போல !
என்றுமே நிழலைத் தரும்.. ஆனால் காதல் என்பது
அதன் கிளை போல.. கிளையை அடைய
ஆசைப்பட்டால் மரத்தையும் இழப்போம் ..

நட்பால் என்றும் காதல் அழிந்ததில்லை ..ஆனால்
காதலால் நிறைய நட்பு  முறிந்து உள்ளது!
Title: Re: Natpa Kadhala
Post by: DaffoDillieS on November 15, 2016, 05:38:42 PM
Valarum vairamutthu.. keep writing :D
Title: Re: நட்பா காதலா
Post by: இணையத்தமிழன் on November 15, 2016, 05:40:56 PM
muthal kavithaiye arumai explorer menmelum pala kavithaigal eluthida valthukal
Title: Re: நட்பா காதலா
Post by: AnoTH on November 15, 2016, 06:50:16 PM
இனிய சகோதரன் Space,

ஆரம்பமே அசத்தல்.
மென்மேலும் தங்கள்
படைப்புகளை
எதிர்பார்க்கிறேன் .


வாழ்த்துக்கள்
Title: Re: நட்பா காதலா
Post by: SweeTie on November 16, 2016, 03:38:17 AM
நல்ல  முயற்சி.    மென்மேலும் உங்கள்  கவிதை மலர்கள் இங்கு மலரட்டும்.   வாழ்த்துக்கள்
Title: Re: நட்பா காதலா
Post by: ரித்திகா on November 19, 2016, 01:03:10 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fblogs.c.yimg.jp%2Fres%2Fblog-4e-c1%2Fkayoko150825%2Ffolder%2F222287%2F98%2F13153198%2Fimg_4%3F1409135065&hash=1980cc0d8fb923f7156746e82fd3d8986638da28)

Exxuuuu....வணக்கம் வணக்கம் வணக்கம் ....

கவிதை பூங்காவிற்கு  தங்களை அன்புடன்
வருக வருக என வரவேற்கிறேன் .....

முதல் கவிதையிலே அசத்திட்டீங்க தோழா ....
நட்பின் ஆழத்தை உணர்த்துகின்றது இக்கவிதை ...

பதிவுகள் நிறைய பதிக்கப்படட்டும்...
சிறந்த சிந்தனைகள் மேலோங்கட்டும் ....
கவிப்பயணம் மென்மேலும் தொடரட்டும் ....

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fblogs.c.yimg.jp%2Fres%2Fblog-4e-c1%2Fkayoko150825%2Ffolder%2F222287%2F98%2F13153198%2Fimg_4%3F1409135065&hash=1980cc0d8fb923f7156746e82fd3d8986638da28)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdarmowegify.blox.pl%2Fresource%2F62_20140924000216.gif&hash=2b6f1c0ad1365d17078ff41922bd9136539e98a3)
~ !!ரித்திகா!! ~
Title: Re: நட்பா காதலா
Post by: SarithaN on December 10, 2016, 01:21:24 PM
வணக்கம் சகோதரா,

ஆழமான கருத்துக்கள்
முத்தை கண்டைவது போல்
நட்பை கொண்டாடுவோம்

முதல் கவியா இது?
எங்கே விழுந்தது அடி?

அழகான கருத்தாழம் மிக்க
வரிகள், தொடர்ந்து பயணிக்க
வாழ்த்துகின்றேன், நன்றி

வாழ்க வளமுடன்