FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on November 14, 2016, 12:35:11 PM
-
நிலவில் வாசல் ஏறி
கைபிடி களிமண் எடுத்து ..
கை நனனத்து வடித்து செய்த பதுமைகள் ..
விண்மழை தூவிநிற்க்க
வடிந்து வரும் அருவிபோல
தடையில்லா அழகிய சிரிப்பு ..
கண் சிவக்கும் கோவத்தோடு ..
உயர்ந்து நிற்க்கும் மனிதன் கூட ..
மலையை போல மௌனம் காப்பான் ..
உன் பயம் கலந்த முக பாவத்திற்க்கு ..
உன் கால் பதிந்த தடங்கள் எல்லாம் ..
எதிர் காலம் நீ வளர்ந்ததாய் சொல்லி அழித்துச்செல்ல ..
பென்சில் கிறுக்கிய பிஞ்சு கைகள் ..இறக்கை முளைத்து பறக்க நினைக்க ..
நீ வளர்வதை சற்றே நீறுத்தி விடு ..
நீ வளர்ந்தாள் உலகம் சுருங்கிவிடும் புரிந்துவிடு .
மழலை சிரிப்போடே இருந்துவிடு ..
இவன் ..
இரா. ஜகதீஷ் ..
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் ..
-
Alagane kavidhai sis ^_^
-
வணக்கம் JerrY,
அழகிய வரிகள்
ஏங்கி ஏங்கி அழினும்
கடவுளை இரந்து கொஞ்சினும்
கிட்டிடா பாக்கியம்
கடந்துபோன பிள்ளை
பருவம்.
பென்சில் கிறுக்கிய பிஞ்சு கைகள் ..
இறக்கை முளைத்து பறக்க நினைக்க ..
பறக்கும் வரைதான் ஆசை இருக்கும்
இளமையின் வலிகள் சொல்லும்
பிள்ளைப் பருவமே போதுமென்று!
தொடர்ந்து எழுதுங்கள்
எழுத்துக்களை கவனியுங்கள்
வாழ்த்துக்கள், நன்றி
வாழ்க வளமுடன்