FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on November 13, 2016, 12:33:32 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: MysteRy on November 13, 2016, 12:33:32 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 124
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Charm ( Daffodillies ) சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F124.jpg&hash=9e19e733ed2d523c0d2c134d3cec3b3199aeff12)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: BlazinG BeautY on November 13, 2016, 07:41:58 AM

பிறந்த போது குழந்தை
தவழ்ந்தபோது மழலை
பருவம் வந்தபோது கன்னி
மாலை இட்டபோது   மனைவி
கருத்தரித்தபோது  தாய்..

அன்பிக்கோர் தாய்மை
அவள் எண்ணமெல்லாம்
அவள் சிசுவில் 
ஆனந்தமாய் இருந்தாள்

இதயம் அவளது உயிர்
இணைந்தால் ஓர் இசையில்
ஈகையில்  ஓர் அழகு
ஈசனின் அருளில்

உணர்கிறேன் நான் 
உறக்கம் இன்றி மாதா
ஊன் இன்றி உயிர்
ஊர்ஜிதமான  நம்பிக்கை

எதிர்காலம் அவள் முன்
எழில் பொங்கும் புவி
ஏராளம் கனவுகள்
ஏக்கத்தோடு  கருவுற்றாள்

ஐம்பூதங்கள் ஆசிர்வதிக்க
ஐப்பசியில் ஓர் சிசு
ஒவ்வொரு நொடியும்
ஒளி  இவள் அகத்தில்

ஓசையில் இதயத்தின் துடிப்பு 
ஓர் அணுவும் இல்லை
உவகையில்  தந்தை
பௌவியமானது  பெண்மை

தாய்மைக்குள்ளும் இன்னொரு
தாய்மையை உணர்தேன்
அதுவே நம் பூமிமாதா
உயிருக்கு மேலான அம்மா
அவள் ஆயுள் காலம் வரை

பிறப்பிட்கும் இறப்பிற்கும்
நம் இதழ்களில் "அம்மா"
ஏழேழு ஜென்மங்களிலும்
அதன் தாய்மை மாறாது
நம் தாய் நம் பூமிமாதா

நன்றி 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: AnoTH on November 13, 2016, 08:55:12 PM
அச்சம் கண்டு அஞ்சினாய்
மடம் என்று மௌனித்தாய்
நாணம் எழுந்து தலை குனிந்தாய்
பயிர்ப்படைந்து விலகிச் சென்றாய்


ஓர்கையில் அவமானம் பெற்று
மறுகையால் அன்பை உலகுக்கு 
உணர்த்திய அன்னையோ?
உலகைக் கடந்து விண்ணைக் காக்க
பயணித்த சவால் முயற்சியோ?
எண் அறிவை இயந்திரமாய்
விடையிறுத்த தேவி குலத்தவளோ?

கள்ளிப்பால் பருகி மேனி மண்ணில்
புதையுண்ட வரலாறு கடந்ததோ?
உயிரைப் பெற்றெடுத்து உலகை
வென்ற காவியம் பிறந்ததோ?


மென்மை மேனியாள் என்றெண்ணி
நியாயம்  காற்றில் பறந்ததோ?
அதையிறுத்து அவள்  உடலின்
கொந்தளிப்பில்  மதுரை மாநகரும் 
தீக்கிரையானதோ?


வலிமை பெற்றவன் ஆண்தானோ ?
அவன் பிறப்பின் அர்த்தம்
பெண்ணை ஆழ்வது தானோ ?

இதன் உண்மை அவன் அறிவானோ?
பெண் எனும் உன்னத சக்தியை
காக்கத்தான் வலிமை பெற்றானோ?


உலகின் வலிமை சக்தி
வாழ்வின் உன்னத பிறவி
உருவாக்கத்தின் நிகரில்லாப் படைப்பாளி
என்றும் பெண்ணின் அரசாட்சி.


சிவனில்லா சக்தி ஏது?
சக்தியில்லா உலகம் தான் நிலையாது.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: ReeNa on November 15, 2016, 12:10:58 AM
சிறைக்குள் எத்தனை நாள் - நீ 
கம்பளிப்பூச்சியாய்..!
சிறகு முளைத்து பறந்தே  விடு - இனி
வண்ணத்துப்பூச்சியாய் ...!!   

காலம்  காலமாய்  உன்னில்
புதைக்கப்பட்ட அடிமை  உணர்வை
காற்றில் வீசி சிறகடித்தே பற  சுதந்திரமாய்.

உன்  முதல்  எதிரி  நீ  என்று   உணரந்தே விடு
தூசியை  உதறிவிட்டு  பயணத்தை  தொடர்ந்தே விடு
புரட்சிப் பெண்ணே நீ  எழும்பி  வா...   
தேசத்திற்கே நீ பெருமை சேர்க்க  வா...
 
பூமியை  உருமாற்றும்  தன்மை  உன்  கருவில்
ஒளிந்தே  போராடாதே  இன்று  தனிமையில்
மகளிர் பெருமை  உன்  மக்களுக்கே  சொல்லி  வா
புதுமைப் பெண் என்ற உணர்வை ஊற்றி  வா

உடைந்த  எலும்புகள் தான்  உயிர் போராட  எழவேண்டும்
உன்னத  படைப்பு  என்றும் பெண்ணாக  வேண்டும் 

பூமி  பந்து  உன்  கட்டுக்குள்  கொண்டுவிடு
அன்பை  ஊற்றி  உன்  பிடிக்குள்  அடைக்கிவிட்டே
தீயாய்  இன்று  தீண்டிவிடு
தயக்கம்  வேண்டாம்  எழும்பிவிடு
புதியதோர்  உலகம்  இன்று படைத்துவிட
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: DaffoDillieS on November 16, 2016, 10:03:41 AM
சிறகுகள் இன்றியே..
வின்னைத் தொட்டு..
செங்கோலின்றியே..
இப்பூவலகை ஆழும் பெண்ணினமே..

எத்தனை எத்தனை தடைகள்..
எத்தனை எத்தனை வலிகள்..
அத்துனையையும் உடைத்தெறியும்..
வல்லமை கொண்ட பெண்ணினமே..

தாய்மையின் மென்மையோடும்..
தேவதையின் இயல்போடும்..
கனல் கக்கும் காளி மாதாவின் தைரியத்தோடும்..
தினம்தினம் போராடும் பெண்ணினமே..

அதிகாரம்..ஆனவம்.. பொறாமை..
யாதுமின்றியே..
கர்வக்காரியெனும் பட்டம் பெற்றும்..
வாழ்வாதாரம் உயர..ஓயாதுழைக்கும் பெண்ணினமே..

மகனைப் பெற்றால் போதும்..
என எண்ணும் பெற்றோட்கும் உற்றார்க்கும்..
மகளைப் பெற்றாலும் போதும்..
எனும் பாடத்தைக் கற்பித்த பெண்ணினமே..

தனித்துவத்தை இழந்து..
அடிமையாய்க் கிடந்து..
பலநூறாண்டுகள் அடுப்படியில் முடங்கிக் கிடந்தது போதும்..
என விஸ்வரூபமெடுத்த பெண்ணினமே..

என்றும் ஆசை மகளாய்..
அருமைத் தோழியாய்..
அழகு காதலியாய்..
பொருப்பான மனைவியாய்..
அன்புத் தாயாய்..
இன்று...
திறமையைக் காட்ட புதிய அவதாரமெடுத்த பெண்ணினமே..

நீயின்றி இவ்வுலகில் ஜீவனேது..
சக்தியின்றி சிவமேது..

உமாதேவியின் அம்சமாய்..
பூமிக்கின்னொரு தாயாய்..
சீர்குலைந்த இப்பூமிப்பந்தினை..
உன் அரவணைப்பால்..
சுவர்கபூமியாய் மாற்றி விடு..!!!
உலகம் உன் கையில்!!

--நன்றி--



 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: இணையத்தமிழன் on November 16, 2016, 10:47:48 AM


பெண் முதலில் தாயாய் வந்தால்
பிறகு தமக்கையாய் வந்தால்
பின்பு தாரமாக  வந்தால்
கடைசியில் தான்பெற்றேடுத்த
பிள்ளையாய் வந்தால் 
இப்படி ஒரு பெண்ணானவள்
ஆணின் வாழ்க்கையின்
ஒவ்வொரு நிலையிலும் இருக்க

பெண்ணுக்குப் பெருமை பொறுமை
அப்பொறுமைக்குப் பெருமைசேர்க்கவே
நதிகளுக்கும் பாரததேசத்திற்கும்
பெண்ணின் பெயரை இட்டோம் 

அதனினும் பெருமை இறைவன் 
பெண்களுக்கு மட்டுமே கொடுத்த தாய்மை
ஆண்களுக்கு கிட்டாத வரமே
பெண்களுக்கே கிடைத்த சுகமே

ஒருபிடி சோறுகூட அதிகம்
பிடிக்காத ஒரு ஜான் வயிறு
ஒரு உயிரையும் உள்ளே வளர்த்ததே
பத்து நாழிகை கூட
சுமையைச் சுமக்க  முடியாமல்
தோள்கள் இருக்க
பத்து திங்கள் பிள்ளையைச்
சுமந்ததே கருவறை 

காய்ச்சலே வந்தாலும் கஷாயம்கூட
தேவையில்லை கனிவோடு தாயின்
கைபட்டாலே காய்ச்சலும்  பறந்து போகும்

உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
பெற்ற  தாயிற்கு ஈடுஇல்லை
                                 -இணையத்தமிழன்
                                   ( மணிகண்டன் )
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: Karthi on November 16, 2016, 12:33:16 PM

எனக்கு உயிர் கொடுத்து
               இருட்டறையில் இருந்து என்னை
வெளிச்சம் என்னும் உலகத்திற்கு
               கொண்டுவந்த தெய்வம் மா  நீ !

தன் நகலாக என்னை
               மாற்றியவள் மா நீ !
என் நிழலாய் என்றும்
              தொடருபவள்  மா நீ !

தோல்விகளை தகர்த்தெறியும்
              தைரியம் கொடுத்தவள் மா நீ!
நட்பின் அறிமுகத்தை எனக்கு
              கொடுத்தவள் மா நீ !

அன்பை எனக்கு என்றும்
              அளவின்றி அளிப்பவள் மா நீ !
பசி என்ற கேள்விக்கு
              பதிலை தந்தவள் மா நீ !

இவ்வுலகம் காண எனக்கு
              இன்னொரு உயிர் கொடுத்த தெய்வம் மா நீ !
நீ இன்றி நான் இல்லை மா
              லவ் யூ மா...!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: SweeTie on November 16, 2016, 06:02:41 PM
நாட்டின் தாய்மை பெண்மை
மென்மையின்   பிறப்பிடம் பெண்மை 
பொறுமையின் சிகரம் பெண்மை
வன்முறையின்  எதிரி பெண்மை
ஈகையின்  தோழி பெண்மை

அவள்  சிந்தையில்  விவேகம் 
செய்கையில்  செயல் திறன்
பார்வையில் துல்லியம்
நேர்மையில் கண்ணியம்
 எதிலும்  தேவை முழுநிறைவு .

வீட்டை ஆளுகையில் அன்னை
நாட்டை  ஆளுகையில் தலைவி
எண்ணை  போதிக்கையில்  ஆசான்
விண்ணில்  உலாவரும் வீராங்கனை 
அவள் மனித நேயத்துக்கே  தாதி

தொழில் நுட்பம் தெரிந்தவள்
சிறு தொழில்  பெரும் பங்கு சந்தைகளில்
சாதுர்யமாய்  வாடிக்கையாளரை வசீகரிப்பாள்
போருக்கும்  அஞ்சாது  முன்னின்று
ஏவுகணை  தொடுக்கும்  வீரமங்கை

எட்டு திக்கும்   அவள் சேவை
என்றும் அது எமக்கு தேவை 
வாய்மை வல்லமை கொண்டு
உலகை  ஆள்வாள் வீட்டிலிருந்து
பெண் என்னும் உலக  மகா சக்தி…



 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 124
Post by: Explorer on November 16, 2016, 07:48:05 PM

உலகம் ஆரம்பித்ததும்.. பிரம்மன் செய்த வைரமே..
பெண்ணே ஓ பெண்ணே.. நீ தான் இந்த பிரம்மாண்டத்தின் வரமே..
உன்னிடத்தில் தான் உயிரினங்களின் ஆரம்பமே..
நீயன்றி அசையாது அகிலமே..

நீதான் இயற்கையின் மறு ரூபமே..
நீர்..நிலம்..ஆகாயம்..காற்று..தீ..அனைத்தும் உன் சின்னமே..

மனித வாழ்க்கையில் வந்த பொக்கிஷமே..
உன்னால் தான் மனித குலமே சுகமே..

உன் வடிவமெத்தனை.. வேடங்கள் தாம் எத்தனை..
மகளாக தந்தையை மகிழ்விக்கிறாய்..
நல்ல தோழியாக நண்பர்களுக்குத் தோள் கொடுக்கிறாய்..
காதலியாக மாறி இன்பக் கடலில் கொண்டு செல்கிறாய்..
பிறகு தாரமாக குடும்ப பாரத்தைச் சுமக்கிறாய்..
தாயாக வடிவம் கொண்டு..சிற்பங்களைச் செதுக்குகிறாய்..
மக்களை நல்ல குடிமக்களாக மாற்றுகிறாய்..
தோல்வியுற்ற போது தைரியத்தை ஊட்டுகிறாய்..
தவறு செய்தால் நல்ல வழிகாட்டியாக மாறுகிறாய்..
மற்றவர்களுக்காக மெழுகாய் உருகுகிறாய்..
உருகியும் வெளிச்சம் தருகிறாய்..

ஓ..பெண்ணே..நீ தாழ்ந்தவள் என்பது உண்மை தான்..
நீ தாழ்ந்து போவதால் தானே ஏணி போல உன் மீதேறி செல்கிறோம்..

உன் பாசமென்பது கடல் போல..வற்றிப் போகாது..
உன் குணத்தை வர்ணிப்பதை என்னால் நிறுத்த இயலாது..