FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on November 11, 2016, 10:58:31 AM

Title: காதலியிடம் தோற்றவன்
Post by: இணையத்தமிழன் on November 11, 2016, 10:58:31 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1378.photobucket.com%2Falbums%2Fah107%2Fmkbull%2Fmaxresdefault_zpsswfc5aqo.jpg&hash=84aa982027ddf6a34f6df48dca5b3bad7fa194fc) (http://s1378.photobucket.com/user/mkbull/media/maxresdefault_zpsswfc5aqo.jpg.html)

அவனோ புறஅழகைக்  கண்டு காதலித்தான்
அவளோ காசு இருக்கும் வரை காதலித்தாள்
காலம்போவது தெரியாமல் கதைத்தார்கள்
அவளோ சிலதினத்தில் திருமணம் என்றாள்
அவனோ தாடிவளர்த்தான் தத்துவம் பேசினான்
தண்ணியடித்தான் தனிமையில் கிடந்தான்
கேட்டால் காதல் தோல்வி என்றான்
காதலியால் தோற்கடிக்கப்பட்ட அவன்
காதல் தோல்வி என்றான்
                                       - இணையத்தமிழன்
                                          ( மணிகண்டன் )
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: ராம் on November 11, 2016, 11:01:34 AM
nice bull machi
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: இணையத்தமிழன் on November 11, 2016, 11:21:16 AM
tnx machi ram
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: ரித்திகா on November 11, 2016, 11:49:59 AM
இடம் பிடிச்சிட்டேன் .... ;) ;) ;) ;) ;)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.i2clipart.com%2Fcliparts%2Fe%2Fe%2Fc%2F6%2Fclipart-two-thumbs-up-happy-smiley-emoticon-512x512-eec6.png&hash=13d08eb26e573418f529d313738804a36eb91b5d)

அருமையான கவிதை அண்ணா வாழ்த்துக்கள்
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: இணையத்தமிழன் on November 11, 2016, 12:05:31 PM
எனது அருமை தங்கை ரித்திகா மிக்க நன்றி மா உன் வாழ்த்துக்களுக்கு
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: AnoTH on November 11, 2016, 12:38:49 PM
அண்ணா அவன் காதலியிடம் தோற்றான்.
அவளோ காதலில் தோற்றாள்.
அருமையான கவிதை அண்ணா
வாழ்த்துக்கள்.
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: GuruTN on November 12, 2016, 11:08:35 AM
காதலின் தூய்மை தன்னை அறியாத பொழுது போக்கு காதலர்களின் காதல் இலக்கணம் நண்பா இது... இந்த கால காதலர்கள் முட்டாள்களாக இல்லை, அனால் நான் முட்டாள் ஆகிவிட்டேன் என்று கூறி தப்பிக்கவே பார்க்கின்றனர். அழகை கண்டு ஈர்க்கப்பட்டிருந்தாலும், ஒரு சமயம் அவள் மனதை உணரும் தருணம் அவனுக்கும் கண்டிப்பாக வந்திருக்கும்.. இருந்தும் அதை உணர மறுப்பான்.. அவனுக்கு அவள் தேவை, அவளுக்கு அவன் தேவை.. ஈர்ப்பு கரைய கரைய.. பிரிந்து போன பின்பு.. இவனோ காதலில் தோற்றவன் என்ற ஒரு அனுதாபம் கொண்டு அடுத்த வழக்கை வாழ தொடர்வான்.. அவளோ என்னை இத்தனை பேர் காதலித்திருக்கிறார்கள் என்று கணக்கு சேகரிப்பால் அடுத்து வந்தவரிடம் சொல்ல.. இதில் இருவருக்குமே அனுதாபப்பட கூடாது.. நாம் தான் பாவமாக நிற்போம் கடைசியில்.. அருமையான கவிதை தோழா.. அன்பு வாழ்த்துக்கள்..
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: SweeTie on November 12, 2016, 09:35:04 PM
எவன் காதலியிடம் தோற்கிறானோ  அவன்தான் உண்மையான காதலன்.   தொடர வாழ்த்துக்கள்
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: இணையத்தமிழன் on November 13, 2016, 06:34:10 PM
எனது அருமை நண்பா குரு உனது கருத்தை படிக்கவேய கவிதை எழுதிட ஆசை அவ்வளவு ஆழமான  கருத்துக்கள்  நன்றி நண்பா உனது வாழ்த்துகளுக்கும் உமது கருத்துக்களுக்கும்
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: இணையத்தமிழன் on November 13, 2016, 06:35:12 PM
நன்றி தம்பி அனோத் நீ கூறுவது முற்றிலும் உண்மையே
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: இணையத்தமிழன் on November 13, 2016, 06:36:37 PM
உமது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்விட்டீ
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: LoLiTa on November 15, 2016, 04:32:49 PM
Nice one na
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: இணையத்தமிழன் on November 15, 2016, 04:56:26 PM
 thanks ma lolita
Title: Re: காதலியிடம் தோற்றவன்
Post by: SarithaN on December 10, 2016, 08:25:39 PM
வணக்கம் சகோதரா,

சிறிய கவிதை பெரிய கருத்து
காதலின் நடைமுறை தத்துவம்

இன்றைய பொய்யர்கள் காதலெனும்
போர்வைக்குள் போடும் வஞ்சனை
நாடகம் இவை!

நண்பா குரு,
அனுபவம் உண்மைகள் சொல்லும்.
நிதானம் கொண்ட கருத்துரை. நன்றி

அனைவரது கருத்தும் தத்துவங்கள்.

சகோதரா உங்கள் கவிதை
பொய் காதலர் முகத்தில் சாட்டை.

வாழ்க வளமுடன்