FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 10, 2016, 10:26:43 PM
-
கத்திரிக்காய் ஃப்ரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2Fpis.jpg&hash=b6cedcc63822b846ca9d0bb2694d919fd9359a20)
தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் – 1
சிக்கன் 65 மசாலா – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
* கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.
* நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.
* சாம்பார், தயிர், ரசம் சாதமுடன் சாப்பிட மிகவும் நன்றாகயிருக்கும்