FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 10, 2016, 09:26:30 PM

Title: ~ கால் பாயா மிளகு சால்னா ~
Post by: MysteRy on November 10, 2016, 09:26:30 PM
கால் பாயா மிளகு சால்னா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2Ffre-5.jpg&hash=fbfed48fba239ee3c72d5e7fbdf90d2b224299fa)

தேவையான பொருள்கள்:

ஆட்டு கால் = ஒரு செட் முழுவ‌தும்
த‌க்காளி = 3
வெங்காய‌ம் = 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 3 தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிளகாய் = 2
மிள‌கு தூள் = 2+1 தேக்க‌ர‌ண்டி
த‌னியா தூள் = ஒன்ன‌றை மேசை க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு தேவைக்கு
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது

]அரைத்து கொள்ள

தேங்காய் ப‌வுட‌ர் – முன்று தேக்க‌ர‌ண்டி
முந்திரி = எட்டு
பாத‌ம் = முன்று
க‌ச‌க‌சா = ஒரு தேக்க‌ர‌ண்டி

தாளிக்க

எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ட்ட‌ர் = கால்
ப‌ட்டை = இர‌ண்டு அங்குல‌ துண்டு
ஏல‌ம் = 2
கிராம்பு = 2
சின்ன‌ வெங்காய‌ம் = 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது
புதினா = நான்கு இத‌ழ்

செய்முறை:

ஆட்டு காலை சேர்த்து நன்கு உறைத்து கழுவி வைக்கவும்.
2. அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வைக்கவும்
3. வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்
4. அதில் கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக விடவும்.
கால் வேக ரொம்ப நேரம் எடுக்கும், குறைந்து அரைமணி நேரமாவது ஆகும்
5. வெந்ததும் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்
6. மற்றொரு அடுப்பில தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
சுவையான ஆட்டுகால் மிளகு குழம்பு ரெடி.