FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 08, 2016, 08:50:13 AM

Title: முத்தத்தின் வாசனை
Post by: thamilan on November 08, 2016, 08:50:13 AM
முத்தத்தின் வாசனையை
முகர்வது மூக்கு அல்ல
கண்கள்
 
பூவையரயும் பூவையும்
முகரும் போது
பிறங்குவது கண்கள் தான்
மூக்கல்ல

முத்தங்கள் வாசனை நிரம்பியவை
எனினும்
முத்தமிடும் போது நாம் உணர்வது
உதடுகளின் வாசனையை அல்ல
மனதின் நறுமணம்

தாயின் முத்தத்தில்
இரத்தத்தின் சுகந்தம்
மனைவின் முத்தத்தில்
காமத்தின் திராட்சை மணம்

பருவத்தைப் பொறுத்து மாறுபவை
முத்தத்தின் வாசனைகள்

ஏராளமான முத்தத்தின் வாசனையை
முகர்ந்திருந்தாலும்
எனக்குள் ஒரு சந்தேகம்

எனக்கு கிடைத்த  முதல் முத்தமும்
நான் கொடுத்த முதல் முத்தமும்
என்ன வாசனை 
Title: Re: முத்தத்தின் வாசனை
Post by: GuruTN on November 08, 2016, 10:44:54 AM
முத்தத்தின் வாசனைகளை மிக அழகாக முன்னிறுத்தி காட்டியுள்ளீர்கள்  தமிழன் அன்பு வாழ்த்துக்கள்.. மனைவியின் முத்தத்தை சுட்டும்போது காதலை முன்னிறுத்தி காமத்தை அதன்  அங்கமாக நிறுத்தி காட்டி இருக்கலாம் என்பது எந்தன் தாழ்வான கருத்தது... மன்னியுங்கள் தவறிருந்தால்... இனிமையான கவிதை தமிழன்.. அருமையான வரிகள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இனிதே தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்....
Title: Re: முத்தத்தின் வாசனை
Post by: thamilan on November 10, 2016, 08:58:38 AM
நண்பா குரு உங்கள் கருத்து உண்மையானதே.
நலத்தை சொல்ல  தயக்கம் தேவை இல்லை.
மற்றவர்கள் கருத்தை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்வேன் .
நன்றி குரு
Title: Re: முத்தத்தின் வாசனை
Post by: SweeTie on November 12, 2016, 09:40:34 PM
முத்தம்  வாசனை பற்றி நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க தமிழன்.  வாழ்த்துக்கள்.
Title: Re: முத்தத்தின் வாசனை
Post by: Maran on November 17, 2016, 07:02:45 PM


அழகான சிந்தனை தமிழன் நண்பா... கண்களால் பார்க்க மட்டுமல்ல, முகர்ந்து பார்க்கவும் முடியும்! என கவிதை புனைந்திருக்கிறீகள் பாராட்டுக்கள்.

நிறுத்தக்குறிகளை மட்டும் பயன்படுத்தியிருந்தால் இன்னும் அழகாயிருக்கும்.

(கவிதையில் அரைப்புள்ளி, காற்புள்ளி, முற்றுப்புள்ளி, உணர்ச்சிக்குறி, வினாக்குறி எதுவுமில்லை.)

மூக்கள்ள - மூக்கல்ல



Title: Re: முத்தத்தின் வாசனை
Post by: ரித்திகா on November 19, 2016, 07:53:03 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Faigleange.a.i.pic.centerblog.net%2F2d969794.gif&hash=b35d4d28e43042244afba547bd1597b1fb1716cd)

வணக்கம் தோழர் தமிழன் ....

அழகான கவிதை தோழா ....
முத்தம் உதட்டோடு மட்டுமல்ல
மனதோடும் சார்ந்தது  என மிக
அழகாக கூறியுள்ளீர் ....

''ஏராளமான முத்தத்தின் வாசனையை
முகர்ந்திருந்தாலும்
எனக்குள் ஒரு சந்தேகம்

எனக்கு கிடைத்த  முதல் முத்தமும்
நான் கொடுத்த முதல் முத்தமும்
என்ன வாசனை  ''

யாம் புரிந்துக்கொண்டதில் ....
சந்தேகத்திற்கு எமக்கு தோன்றிய விடை ...

பிறக்கும் ஒவ்வொரு உயிர்க்கும்
கிடைக்க பெரும் முதல் முத்தம் ....
 பெற்றோர்மிடமிருந்தான் ....
அந்த முத்தத்தின் வாசனை என்ன வென்று
எனக்கு சொல்ல தெரியவில்லை ....
ஆனால் இந்த முத்தத்திற்கு இவ்வுலகில்
எதுவும் ஈடுயில்லை.....

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் ....
கவிப்பயணம் மென்மேலும் தொடரட்டும் ....
மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே ....!!!! 

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Faigleange.a.i.pic.centerblog.net%2F2d969794.gif&hash=b35d4d28e43042244afba547bd1597b1fb1716cd)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Fw%2Fwinnie-the-pooh%2Fpicgifs-winnie-the-pooh-8372901.gif&hash=aef720e82cf7a16ac9e09c2d52ea255c0da98d17)
~ !!ரித்திகா!! ~