FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: BlazinG BeautY on November 07, 2016, 06:51:06 PM

Title: இதயத்தின் வலி
Post by: BlazinG BeautY on November 07, 2016, 06:51:06 PM
என்னை ஈன்றெடுத்த தாயின்
அன்பென்ற  மழையிலே நனைந்தேன் 
என்னை தாலாட்டிய   தந்தை
அரவணைப்பில் ஐக்கியமானேன்
 
இருவரும் எனக்கு உயிராக
நான் அவர்களுக்கு சுவாசமாக
பாச பிணைப்பில் உடலாக
உடல் இரண்டு ஆனால் ஒன்றாக

எனக்கென ஒரு மடல் தவழ்ந்து
ஈன்றோர் அகம் மகிழ்ந்து   
நீ வெகுதூரம்   போய் சேர்ந்து 
போக வேண்டாம்  மனம் சோர்ந்து

என்னுள் சிறு மொட்டு  தளிர்த்திட
என்னை  ஓர்   இளங்காற்று தீண்டிட
அவரின் அன்பு என்னை மறக்க செய்திட
மறந்தேன் என்னையும் ஈன்றோரையும்

என்னை  கருவறையில் பெற்றெடுத்த
இதயங்களை நொறுக்கி சுக்கு நூறாக 
அனைவரையும் எதிர்த்து என்னவரை     
மணாளனாக கரம் பற்றினேன் 

அவர் எனக்கு தேவனாக
நான் அவருக்கு தேவதையாக   
எங்கள் அழகிய வாழ்க்கைக்கு
ஓர் ஜீவன் சேயாக..   

வாழ்வில் காலங்கள் கடந்தோடின
சில காலமாய் அவரில் ஓர் மாற்றம்
அவரின் சுயரூபம் தெரிய வர
நரகத்தின் வாயிலில் நான்..

ஒவ்வொரு நொடியும் யுகங்களாய்..
உணர்ந்தேன் அந்த நொடிப் பொழுது
பெற்றோர்களின் அலறல் கதறல்
வருத்தத்தில் விழிகளில் கண்ணீர்துளிகள்
 
இதயமே  ஈன்றவர்களின்  இதயமே
நான்  உடைத்த இதயத்தை
ஒன்று  சேர்க்கவா இத்தனை
காலம் ஆகிற்று எனக்கு..

என் முயற்சிகள் வீணாய் போக
நான் ஈன்றெடுத்தவளோ
தொப்புள்கொடி உறவாய்
கட்டி விட்டாள் உடைந்து போன
என் பெற்றோரின் இதயத்தை.. 

Title: Re: இதயத்தின் வலி
Post by: Maran on November 07, 2016, 07:52:22 PM



மிக அழகான கவிதை, அருமையான வரிகள் தோழி.

வாழ்வியலின் எதார்த்த உணர்வை அழகாக கவிதையாக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழி.




Title: Re: இதயத்தின் வலி
Post by: GuruTN on November 07, 2016, 07:53:44 PM
Blazing ma.. indha kavidhaila kooda. sila edit panirkeenga pole.. nice nice.. update.. blazing ma.. anbu vazhthukal.. (flowers)...
Title: Re: இதயத்தின் வலி
Post by: Mohamed Azam on November 12, 2016, 06:30:33 AM
Hi Blazing Beauty Unga poem la Azhagavum Thaai Thandhai iruvarin paasathayum Kaattirukkinga,, Enakku ennamo Intha poem a oru paatta paadininganna romba nalla irukkum, time iruntha mic eduthu apdiye paadunga
 

(https://s-media-cache-ak0.pinimg.com/originals/11/08/67/11086767e3d1e13c4a0f12643b75fabe.png)
Title: Re: இதயத்தின் வலி
Post by: BlazinG BeautY on November 12, 2016, 06:41:05 AM
  :) "என்னை சிரிக்க  சாம் சாம்" படிக்கலாம் பாட்டா . நன்றி சாம் . மகிழ்ந்தென் உங்கள் வாழ்த்தில்.. 
Title: Re: இதயத்தின் வலி
Post by: thamilan on November 12, 2016, 08:31:09 AM
கவிதை அருமை  BLAZING BEAUTY வாழ்த்துக்கள்
Title: Re: இதயத்தின் வலி
Post by: BlazinG BeautY on November 12, 2016, 08:54:43 AM
 :) நன்றி தோழா,  உங்கள் வாழ்த்துக்கு.
Title: Re: இதயத்தின் வலி
Post by: SweeTie on November 12, 2016, 09:37:01 PM
அழகா  எழுதி   இருக்கீங்க தோழி.  தொடர வாழ்த்துக்கள்
Title: Re: இதயத்தின் வலி
Post by: SarithaN on December 10, 2016, 09:52:59 PM
சகோதரிக்கு அன்பின் வணக்கம்,

இது யார் வாழ்வோ! மிக மிக
கொடுமையானது, ஆனால்
கவிதை உங்களுடையது

கவியினுள் ஆழப்புகுந்தால்
கண்ணீர் தடங்கள் ஏராளம்
தாராளம், அத்தனை வலிகள்.

பொருள் உணர்ந்தால்
படிக்கையில் கண்களில்
நீர் சொரியவே செய்யும்
இதயம் உள்ள அனைவருக்கும்.

உங்கள் கவிதை
கல்லையும் கரக்கும் திரவம்.

வாழ்த்துக்கள் சகோதரி, நன்றி.

வாழ்க வளமுடன்.
Title: Re: இதயத்தின் வலி
Post by: ரித்திகா on December 11, 2016, 06:20:30 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-Jy8pnaQbge4%2FT3cIK9jljsI%2FAAAAAAAAE_E%2FmOZNXfP_CHc%2Fs1600%2F2ib2edv.gif&hash=a32497343535e48ac5e576a461f25315d7174262)
(https://s-media-cache-ak0.pinimg.com/originals/17/d9/41/17d941ab9cd6fd135d46afaa074bc44f.png)
வணக்கம் பேபி ....

  அழகான கவிதை .....
   படிக்கையில் கட்டாயம் இதயத்தில்
  வலி உண்டாகும்....
  கண்களில் கண்ணீர் பெருகும் ....

  தொடரட்டும் கவிப்பயணம் ....
  வாழ்த்துக்கள் அக்கா  ....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-Jy8pnaQbge4%2FT3cIK9jljsI%2FAAAAAAAAE_E%2FmOZNXfP_CHc%2Fs1600%2F2ib2edv.gif&hash=a32497343535e48ac5e576a461f25315d7174262)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwallwindow.com%2Fwp-content%2Fuploads%2F2014%2F09%2F3d-Purple-Love-Heart-Transparent-Background.png&hash=99f40c2d40b921ad222e5236af2d5013d694ff94)
~ !! ரித்திகா !! ~