FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on November 07, 2016, 10:31:46 AM
-
விழிகளோ நீரில் மூழ்கியது
கால்களோ நடக்கவும் மறந்தது
விடியலும் அன்றோ முற்றாய் தோன்றியது
இன்பமும் ஏனோ துன்பமாய் தெரிந்தது
பிரியத்தான் மனமில்லை
பிரியாமல் இருக்க இயலவும் இல்லை
என்பிரிவினில் வீடே கலைகட்ட
நானோ இங்கே கலங்கி நின்றேன்
இப்படிக்கு மணப்பெண்
-இணையத்தமிழன்
( மணிகண்டன் )
-
Very nice
-
நல்லாயிருக்கு !!
எழுத்துப்பிழைகளில் கூடுதல் கவனம் காட்டவும் !!
எனோ துன்பமே - ஏனோ துன்பமாய்
-
படித்தமையிக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி டப்பிபோடில்லிஸ்
-
ஆசைஅஜித் படித்தமையுக்கும் எழுத்துப்பிழை திருத்தவுதவியமைக்கும் மற்றும் உங்கள்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா
-
கல்யாணம் என்று வந்துவிட்டாலே
மணமகள் மணமகன் வீட்டில்
ஒரே பரபரப்பு கொண்டாட்டம் தான்.
தன் மகளை மாப்பிள்ளை வீட்டார்
கையில் ஒப்படைத்து நாட்கள் ஆக ஆக
உணரும் தனிமை என்னமோ பெற்றோருக்குத் தான்.
இருப்பினும் தான் செல்லமாக ஓடித் திரிந்த
வீட்டையும் பெற்றோரின் அரவணைப்பில்
வாழ்ந்த வாழ்க்கையும் எந்த ஒரு மணப்பெண்ணும்
கல்யாணம் என்று ஒன்று அமையும் போது
நினைத்து பாக்காமல் இருக்க முடியாது.
மிக அருமையாக அந்த உணர்வை கொடுத்து
விட்டீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்.
புகுந்த வீடு கூட கோவில் ஆகலாம்
துணைவன் தாயாக மாறிவிட்டால்.
-
சகோதரர்கள் இருவரும் மிகவும் அருமையாக ஏழுதி இருக்கீர்கள் என் வாழ்த்துக்கள்
-
ஆம் எனது அருமைத்தம்பி அனோத் திருமணம் அன்று தன் பெற்றோரை பிரிந்து
செல்லும் பெண்னின் உணர்வுகளை சொல்ல வார்தைகள் இல்லை.
ஆம் தம்பி அனோத் என்னதான் புகுந்தவீடு பிடித்தாற்போல்
அமைந்தாலும் தன் தாய் தந்தையை பிரிந்து செல்லும்
அந்த ஒரு நாள் எந்த ஒரு பெண்ணலையும்
மறக்கமுடியாத நாளாகவே அமையும்
மற்றும் உனது வாழ்த்துக்களுக்கு மிக நன்றி தம்பி
-
உங்கள் பொன்னான நேரத்தில் இச்சிறுவனின் படைப்பை படித்தமையாகும் வாழ்த்தியமையுக்கும் என்மனமர்ந்த நன்றிகள் எனது அருமை அக்கா சான்சா
-
Arumayane kavidhai bull na
-
நன்றி மா லொலிடா
-
அழகான கவிதை... வாழ்த்துக்கள் நண்பா.
-
எனது அருமை நண்பர் மாறன் அவர்களே வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல
-
en arumai nanban mani'yin innum oor azhaganan padaipu.. manapennin.. mananilaiyaiyum manadhil niruthi.. azhagana varigalal adhai uruvaga paduthiya my anbu nanba arumai arumai un kavidhai.. nan indha kavidhaiku.. comment potuvitadhagave dhan manam mulumai petrirundhadhu.. kavidhai mayakam konden pola undhan varigalil.. asathal kavidhai nanba.. anbu vazhthukal...
-
எனது அருமை நண்பா குரு இச்சிறுவனின் படைப்பினை படித்து அதற்கு உமது கருத்தையும் பகிர்ந்து வாழ்த்துக்களையும் தெரிவித்தமைக்கு நன்றி நண்பா
-
:)
-
சகோதரா அன்பின் வணக்கம்,
மணப்பெண் மனது கலங்கும் நாள்
மணநாள்!
மணப்பெண்கள் மனது மகிழ்ச்சியை
உணராது கலங்கி நிற்கும் கொடுமை
அதிகம் நிகழ்வது,
மணமகனை முன்னறியா, உள்ளங்களை
புரிந்திடா, திருமணங்களில்தான்
இந்த கொடுமை பெண்களின் பேரவலம்,
எப்போது தீருமோ?
பெண்களின் உள்ளங்களாய் எழுந்து பேசும்
ஆண்கள் என்றாலும் வலிகளை உணர்க.!
வாழ்க வளமுடன்.