FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: LoLiTa on November 06, 2016, 03:34:58 PM

Title: என் சிலையழகே
Post by: LoLiTa on November 06, 2016, 03:34:58 PM
கண்மணி திரும்பிவிட்டாள்
இனி ஒரு நொடி பேச்சும்
சொர்கமாய் தெரியும்..
மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே!
ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே!
மின்னல் கொடி போலாடும் அழகே!
கன்னல் மொழி பாடும் குயிலே!
அலைக்கடலாய் ஆர்ப்பரித்த இதயத்தை
சங்கிலி போட்டு கட்டிவிட்டாய்.
வியக்கும் வண்ணப் சிரிப்பழகே,
உதயமாகும் சிலை அழகே...
சிரிப்பொன்றே போதுமடி
என்னை கவிழ்க்க!!
Title: Re: என் சிலையழகே
Post by: GuruTN on November 06, 2016, 05:00:59 PM
லொலிடா மா, சில்லென்ற கவிதை ஒன்றை சில வரிகளில் கொடுத்து விட்டீர்கள்.. அருமை தோழி அன்பு வாழ்த்துக்கள்.. இனிதே தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்...
Title: Re: என் சிலையழகே
Post by: ரித்திகா on November 06, 2016, 05:07:49 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Flemondedegaiaetthemis.l.e.pic.centerblog.net%2FImage12_2.png&hash=030243306cc9443935cb215f98ffa10e03aab158)


~ !!!! லொலி பேபி !!!! ~
~ !!! அழகா எழுத்திருக்கிங்க செல்லம் !!! ~
~ !!! இனி ஒருநொடி பேச்சும்  சொர்கமாய் தெரியும் !!! ~
~ !!! அன்பெனும் சங்கிளி போட்டு கட்டிவிட்டாள் என்னவள் !!! ~
~ !!! மிக அருமை பேபி !!! ~
~ !!! தொடர்ந்து எழுதுங்கள் !!! ~
~ !!! இனிதே தொடரட்டும் கவிப்பயணம் !!! ~
~ !!! வாழ்த்துக்கள் !!! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Flemondedegaiaetthemis.l.e.pic.centerblog.net%2FImage12_2.png&hash=030243306cc9443935cb215f98ffa10e03aab158)



லொலி பேபி ....
இவளோ அழகா கவிதை எழுதினனாலே  ....
லொலி பேபிக்கு என்னுடைய பரிசு .....
இந்தாங்கோ லொலிபொப் ....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmsmcclure.com%2Fwp-content%2Fuploads%2F2010%2F10%2Flollipop.gif&hash=1fb04a7de6fa18dc214a93fd3af6ad3bf916565b)

~ !! Apa Lagi Enjoy Lah !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Falphabets%2Falphabets%2Fcinderella-glitter%2Falphabets-cinderella-glitter-435352.gif&hash=ffa0e094ea522c98103d158314b422da6f301b25)
~ !! ரித்திகா !! ~
Title: Re: என் சிலையழகே
Post by: இணையத்தமிழன் on November 06, 2016, 08:51:18 PM
லொலிடா கவிதை அருமை மா இன்னும் பல கவிதைகள் எழுதிட வாழ்த்துக்கள் மா
Title: Re: என் சிலையழகே
Post by: aasaiajiith on November 07, 2016, 11:31:43 AM
நிரம்ப அழகு !!

தொடர்ந்து எழுதவும் !!
Title: Re: என் சிலையழகே
Post by: AnoTH on November 07, 2016, 01:19:48 PM
அன்புத்தங்கை Lolita ,

சண்டைபோட்டு பிரிந்த காதலி
மீண்டும் காதலனுடன் இணைந்து
விடுகின்ற உணர்வின் வெளிப்பாடாக
எனக்கு இந்தக்கவிதை விளங்குகின்றது.
மிக மிக அருமையாக எழுதிவிட்டீர்கள்.


மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே!
ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே!
மின்னல் கொடி போலாடும் அழகே!
கன்னல் மொழி பாடும் குயிலே!
அலைக்கடலாய் ஆர்ப்பரித்த இதயத்தை
சங்கிலி போட்டு கட்டிவிட்டாய்.


கவி நயமும் வரிகளின் அழகும்
மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள்.

இக்கவிதையின் முடிவில் ஓய்ந்துவிட்ட
உங்கள் பேனா மீண்டும் அடுத்த படைப்பை
தொடர வாழ்த்துகிறேன்.
Title: Re: என் சிலையழகே
Post by: LoLiTa on November 07, 2016, 01:42:25 PM
Nandri Guru na, Ritu cyg, bull na, Ajiith, anoth na ;)
Title: Re: என் சிலையழகே
Post by: Maran on November 07, 2016, 07:45:31 PM



மிக அழகான கவிதை தோழி லலிதா...

வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்.




Title: Re: என் சிலையழகே
Post by: SarithaN on December 11, 2016, 06:27:17 PM
வணக்கம் சகோதரி,

நயமான வர்ணணைகள்
அழகிய சொல்லாடல்!
சிரிப்பிலே கவுண்டதில்
மீண்டவர் சிலரே!
சிறிய கவியில் கொட்டிய
பேராசைகள்!
கட்டிய சங்கிலிகள் கட்டிய
பின்னும் கட்டியே இருக்கட்டும்!

தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
நன்றி

வாழ்க வளமுடன்