FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on November 06, 2016, 10:49:54 AM

Title: நான்...
Post by: Maran on November 06, 2016, 10:49:54 AM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FPoem%2FNaan_zpsbk50bmmu.png&hash=580a73e0724c43f57b225e64879f8a83a441887d)

Title: Re: நான்...
Post by: GuruTN on November 06, 2016, 05:06:37 PM
கவிஞர்களின் பலமே அவர் முகம் மறைத்து சூழலுக்கு ஏற்றார் போல் கவிதைகள் படைப்பதில் தானே இருக்கின்றது.. இருந்தும் அவர் உள்ளம் மறைத்து வைத்து எழுதும்போது எழும் அனுபவத்தை அருமையாக பதிவு செய்துளீர்கள் மாறன்.. அன்பு வாழ்த்துக்கள்.. அசத்துங்கள்.. இனிதே தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்...
Title: Re: நான்...
Post by: LoLiTa on November 06, 2016, 05:08:52 PM
Kavinyare arumayane kavidha!i
Title: Re: நான்...
Post by: SweeTie on November 06, 2016, 08:06:18 PM
இது  என்ன புதிதாய்  ஒரு குழப்பம்??   ஒவொருத்தருக்கும்   ஒரு தனித்துவம்  இருக்கத்தானே   செய்கிறது.    உங்கள் சிந்தனைக்கு  ஈடு  இல்லையே.!!!
வாழ்த்துக்கள்.
Title: Re: நான்...
Post by: AnoTH on November 07, 2016, 01:29:25 PM

நான் யார் என்ற தேடுதலில்
பிறக்கிறது ஓர் கவிஞனின்
படைப்புகள்.

அதற்கு விடை, இயற்கை
படைப்பில் நம் கண்முன்னே
காட்சி தருகிற தாவரங்கள்,
மரங்கள் பேசவா முடியும்?
அதன் குரலாக கவிஞர்களின்
சிந்தனைகள் வரிகளால்
ஒலிக்கிறது.

மனிதர்களின் உணர்வை
வார்த்தைகளால் சொல்லிவிடத்தான்
முடியுமா? அதன் வெளிப்பாடாக பிறக்கிறது
கவிஞர்களின் வரிகளால் அமைந்த குரல்.

ஆகவே கவிஞன் என்பவன்
இயற்கையோடும் மனிதமோடும்
பயணித்து செல்கிற ஓர் வழிப்போக்கன்.

மிக மிக அழகான படைப்பு
சகோதரன் மாறன்.
ஒவ்வொரு படைப்பும்
தனி சிறப்பு.
Title: Re: நான்...
Post by: Maran on November 07, 2016, 08:09:14 PM



என் கவிதையை ரசித்து விவாதித்து வாழ்த்துக் கூறிய  என் அன்பு தோழமை குரு, லலிதா, இனியா, அனோத் அனைவருக்கும் நன்றிகள் பல... மகிழ்ச்சி அடைகிறேன்.


கம்பன்கழகத்தில் மாட்டிக்கொண்ட கவிதையை போலவே அலசி விவாதித்துள்ளீர்கள்... உங்கள் வாழ்த்துக்களில் ஒரு உத்வேகம் வந்துள்ளது எனக்கு. நன்றி என் தோழமைகளே.

கவிதையுடன் இதயத்தின் அதிர்வும், மௌனமும் இணைந்தே பிறக்கிறது. பிற உலகக் காட்சிகளையும் மனம் உருவாக்கிக்கொண்ட காட்சிகளையும் கவிதையில் இரசிக்கிறோம். இக்கவிதையில் என் அகத்தில் நான் என்ற நுண்ணிய உணர்வின் மௌன பேச்சையே கவிதையாக்கி இருந்தேன். நல்லது... மகிழ்ச்சி....




Title: Re: நான்...
Post by: ரித்திகா on November 15, 2016, 10:08:38 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.gifmania.co.uk%2FPlants-Animated-Gifs%2FAnimated-Flowers%2FFlower-Lines%2FRoses-Web-Divider-89658.gif&hash=53bd2ea50fdd5fe417918122e58af24c5b500837)

வணக்கம் தோழர் மாறன் ....

 அருமையான படைப்பு ...
 புதியச் சிந்தனை ....
 தொடரட்டும் கவிப்பயணமும் ....
 வாழ்த்துக்கள் ....!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.gifmania.co.uk%2FPlants-Animated-Gifs%2FAnimated-Flowers%2FFlower-Lines%2FRoses-Web-Divider-89658.gif&hash=53bd2ea50fdd5fe417918122e58af24c5b500837)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.gifszone.com%2Fcontent%2Fimage%2Fcartoon%2Fcartoon_8.gif&hash=211ef146c93d22639134c79e9d20dc3fdb692094)
~ !! தோழி ரித்திகா !! ~
Title: Re: நான்...
Post by: Maran on November 17, 2016, 06:01:23 PM



மிக்க மகிழ்ச்சி தோழி ரித்திகா !!  :)
அழகான வருகைக்கும்...
நேசமான ரசிப்புக்கும்...
நட்பான விமர்சனத்திற்கும்...




Title: Re: நான்...
Post by: SarithaN on December 10, 2016, 04:54:46 PM
தோழா மாறா வணக்கம்,
முதலில் தலை சாய்த்து ஒரு வாழ்த்தும்
நன்றியும் உங்கள் தமிழ் பெருமைக்கு
கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாம்

கவிதைக்கு
பொய்யழகா ?
பொய்யும் அழகா ?
பொய்தான் அழகா ?

உங்கள் கவியில் உண்மைகளை
மறைக்க முடியாமலும்
உண்மைகள் என்ன நீங்களே மறைய
முடியவில்லையே
உண்மைகளை உணர்வுடன்
பேசியுள்ளீர்கள்.

வாழ்க தமிழ், உயர்க நீங்கள்! நன்றி
Title: Re: நான்...
Post by: Maran on December 10, 2016, 06:39:52 PM



தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!