ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 123
இந்த களத்தின்இந்த நிழல் படம் Sweetie ( Jo ) சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F123.gif&hash=50c3058dbbaaa738476ee06d07868d3f5c5363a9)
இரு மொட்டு தளிர்க
நட்பில் இணைய துடிக்க
ஓவ்வொரு மலராய் முளைக்க
நட்பென்ற ஒன்று துளிர்க்க
இணைபிரியா தோழமை நிலைக்க
விஷக்காற்று அவர்களுக்குள் இருக்க
கங்கணம் பார்த்து நிற்க
பிரித்தது அவர்களின் நட்பை உடைக்க
இரு மலரில் ஒன்று நினைக்க
பழைய நினைவுகளை எண்ணி சுவைக்க
நட்பென்ற சங்கிலியில் போட்டு இனிக்க
இன்னொரு மலர் எண்ணி மறக்க
முடியவே முடியாது என்று முறைக்க
இன்னோர் இதயம் வெடிக்க
அதை பார்த்து இன்பம் களிக்க
நட்பென்ற சங்கிலி முறிக்க
இதை பார்த்த வேறு மலர் வருந்த
வாடிய மனதின் வேதனையை குறைக்க
என் மனதில் அவளின் மனம் ஏங்க
வருத்திய மனதில் புது நட்பு நுழைய
காலங்கள் வலிகளை மறைத்தது
அவள் முகத்தில் புது வெளிச்சமானது
சிறு சிறு நட்பு கிடைத்தது
அவள் நட்பு எனக்கு வரமாகியது
இன்னோர் நட்பில் இணைய
இன்பமாய் இதயம் மகிழ
இன்னொரு துரோகி நுழையாமல் துரத்த
நன்பரென்ற சங்கிலியில் உறுதியாக
"நட்பு உண்மையானது , மறுக்கவும் மறைக்கவும் முடியாத ஒன்று"
~ எனது நட்பும் அப்படியே ~
பின்குறிப்பு :இதயம் உண்மையா காதலுக்கு மட்டும் அல்ல ; உண்மையான நட்பிற்கும் அதை விட வலிமை உண்டு . உடைந்தால் மரணித்து போகும் இரண்டுமே..
"சிதறுதடி என் இதயம்"
கல்லில் செய்த இதயமென என்னில் ஒன்று கொண்டிருந்தேன்,
சுமைகள் பல வந்தபோதும், மலைகள் போல நின்றிருந்தேன்,
இன்பமான வாழ்வு ஒன்றை எனக்கு நானே அமைத்திருந்தேன்,
உள்ளம் எல்லாம் உளைச்சல் இன்றி நிம்மதியாய் வாழ்த்திருந்தேன்.
கண்கள் என்ற ஆயுதத்தால் என் இதயம் பணிய வைத்தாய்,
உந்தன் பேச்சின் இனிமையிலே கதிரவனை குளிர வைத்தாய்,
வாழ்வின் சுவைகள் இன்னவென்று தெரியாமல் இருந்த என்னில்,
விடியல் ஒன்றை தோற்றுவித்து, பளிச்சென்று மிளிர வைத்தாய்.
நதிகள் போல ஓய்வின்றி தொடர்ந்து நீயும் பேசும்போது,
நேரம் என்ற ஒரு வார்த்தை இருக்கும்தடம் மறந்து போனேன்,
தாய்மை, நட்பு, உறவு யாவும் உன்னிடத்தில் கண்டபோது,
புத்துயிரை நானும் பெற்று, மீண்டும் உன்னால் பிறந்துவந்தேன்.
உனையே நான் உலகமென்று உள்ளத்தில் பதித்து வைத்தேன்,
தவிப்புகள் தள்ளிவிட உன்னிடத்தில் காதல் சொன்னேன்,
தடைகள் பல உண்டு வீட்டில் என்று சொல்லி விலகி நின்றாய்,
தேடி வந்த காலம் போக, தேட வைத்து மறைந்து போனாய்.
எந்தன் வாழ்வில் கனவு போல வந்து போன என்னவளே,
என்னுயிரில் இன்பம் தன்னை, உணர வைத்த பூமகளே,
உள்ளம் எல்லாம் உருகுதடி, உன்னை எண்ணி ஏங்குதடி,
இரும்பென்று இருந்த போதும், இந்த காதல் கொல்லுதடி.
சங்கிலிகள் சுத்தி எந்தன் இதயம் காக்க வேலி போட்டேன்,
இதுவும் இன்று கடந்து போகும் என்று நானும் பொறுமை காத்தேன்,
அவைகள் மீறி என் இதயம் துண்டு துண்டாய் சிதறிப்போக,
காதல் போல ஒரு சக்தி இல்லை என்று உருகி போனேன்.
-குரு-
மென்மையான இதயம் ஒன்று
சங்கிலி சிறையில் அடைப்பட்டது இன்று
வெகுநாளாய் தனிமையில் போரடி நின்று
புதைத்தது நிம்மதியை வேரோடு கொன்று
பாசத்தால் கட்டி அணைப்பான் என்று
அவன் அருகில் நெருங்கி சென்று
வாளால் வெட்டி எறிந்தான் நன்று
வாடி துடித்ததே இந்த இளங்கன்று
என்னை கொன்ற எழுத்துக்கள் மூன்று
அதுவே என் துயருக்கு சான்று
இனி வேண்டாம் எந்த மாதுவும் என் போன்று
போரடி வென்று சிகரமாய் தோன்று
ஆணோ பெண்ணோ இதயம் அனவைருக்கும் ஒன்று
காயப்படுத்திவிட்டு சரி செய்ய முயலாதீர்கள் ..
அது நெருங்கி வருவதை விட
விலகி செல்வதையே அதிகம் விரும்பும் ..
~ தமிழ் பிரியை மைனா ~