FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Yousuf on February 04, 2012, 09:39:03 PM

Title: தாய் பற்றி இஸ்லாம்!
Post by: Yousuf on February 04, 2012, 09:39:03 PM
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல்குர்ஆன் 31:14

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244
Title: Re: தாய் பற்றி இஸ்லாம்!
Post by: செல்வன் on February 07, 2012, 12:17:38 PM
எல்லா மதங்களும் தாயை பற்றி உயர்வாகவே சொல்லி இருக்கிறது. கிட்டத்தட்ட தெய்வத்திற்கு நிகராக நிறைய அம்சங்கள் தாயிடம் இருக்கின்றன. அன்பு ,கருணை ,பாசம், பாதுகாப்பு,அக்கறை என தன குழந்தைமீது மட்டும் காட்ட கூடிய விஷயங்கள் நிறையவே இருப்பதால், ஒவ்வொரு குழந்தையும் தன் தாயை கடவுளுக்கு நிகராக பார்க்கிறது.

ஆனால் கடவுள் எல்லா படைப்புகள் மீதும் அன்பு செலுத்துகிறார் , ஒரு தாய் தன் குழந்தை மீது மட்டுமே இத்தகைய அன்பை செலுத்துகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் வல்லவன் இறைவன். தன்னால் முடிந்ததை எல்லாம் குழந்தைக்கு செய்பவள் தாய்