FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 05, 2016, 05:49:53 PM
-
அறுவடை
மானிடரே
மண்ணுக்கு நீரை பாய்ச்சியுங்கள்
குருதி வேண்டாம்
கனி தரும் விதைகளை விதையுங்கள்
உயிர்களையும் உடல்களையும் வேண்டாம்
ஏனெனில்
நீங்கள் விதைத்ததை தான்
அறுவடை செய்யப் போகிறீர்கள்
விலைமகன்
கல்யாணச் சந்தையிலே
சீதனம் வாங்கும் ஆண்மகனே
நீயும் ஒரு விலைமகனே
பணம் வாங்கி கொண்டு தானே
வாழ்க்கை எனும் இன்பத்தை
ஒரு பெண்ணுக்கு கொடுக்கிறாய்
பனி
பகலில் நடக்கும் அக்கிரமங்களை
மனிதனே கண்டும் காணாதது போல
இருக்கும் போது - இரவே
நீ மட்டும் ஏன் அழுகிறாய்
பனி
திரௌபதியின் மானம் காத்த
கண்ணனாக
மலைஅரசிக்கு பனி
அங்கே துகில் உரியும் துரியோதனாக
சூரியன்
குள்ளநரிகள்
பெண்ணினமே
முறத்தால் அடித்து புலியை துரத்தினோம் என
மார்த்தட்டிக் கொள்ளாதீர்கள்
இன்று புலிகள் இல்லை
குள்ளநரிக் கூட்டமே
உலகில் உலவுகின்றன
திருடர்கள்
எனக்கு உறங்குவதத்திற்கு
நல்ல இடமில்லை
தூங்கும் போதே என்னை விற்று விடுவார்கள்
இந்த மனிதர்கள்
உன் இதயத்தை கொஞ்சம் திறந்து விடடி
அதில் நான் உறங்கி கொள்கிறேன்
-
தங்கள் சிந்தனையில் சிதறிய நட்சத்திரங்கள் யாவும், கதிர்களுக்கு பதில் ஆழமான கருத்துகள் கொண்டு பிரகாசமாய் மிளிர்கின்றது தமிழன்.. அருமையான கவிதைக்கதம்பம்.. அன்பு வாழ்த்துக்கள்.. அசத்தல் தொடரட்டும்...
-
புலியையே முறத்தால் அடித்து துரத்திய பெண்கள் நாங்கள், குள்ளநரிக்கூட்டத்தை
விட்டுவிடுவோமா ? சிதறிய நட்சத்திரங்கள் அருமை.
-
வணக்கம்.
நீதியான தத்துவங்கள்
உள்ளத்தின் குமுறல்கள்
மனிதருக்கான கற்கைநெறி
சமூக நீதி தேடும் புரட்சி
உங்கள் கவி.
வாழ்த்துக்கள், நன்றி.