FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: BlazinG BeautY on November 05, 2016, 06:57:08 AM

Title: இதயத்தின் வேலி
Post by: BlazinG BeautY on November 05, 2016, 06:57:08 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F004.jpg&hash=a40014e8e960b6c03a667ae43ba993801540bdd4)

என் இதயத்தை
அன்பெனும் வேலியில்
அடைத்து வைத்தேன்..
ஆருயிர் பெற்றோர்களுக்கு
இன்பத்தை  அளித்தேன் 

ஈன்றெடுத்த அன்னைக்கு   
உன்னதமா எண்ணத்தை
ஊழி மறைத்தாலும்
என்னை ஈன்றெடுத்தவர்களை

ஏகாதிபதியாக தந்தை
ஐக்கியமான குடும்பம்
ஒருமத்தே வார்த்தைகள்
ஓவியமானது இதயம்
ஔதாரியத்துக்கு நானாக

அவர்களிடம் என்
ஆயிலை குடுத்தேன்
இடைவிடாத மகிழ்ச்சி
ஈசன் அருளில்

உடன்பிறந்தோர் திளைத்தனர்
ஊக்கானோர் வந்திட
எந்தை வரவேட்க்க
ஏமத்தில் திருமணம்

ஐசுவரிசமாக என்னை
ஒருவர் கரம் பற்ற
ஓதுவார்  பாட
ஔட்டில் முடிந்தது..   
 
Title: Re: இதயத்தின் வேலி
Post by: ரித்திகா on November 05, 2016, 07:48:29 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fednevnik.si%2Fuploads%2Fz%2FZavestnaSamost%2F235465.gif&hash=1261e5bdaf43642c1ec5e352c89802b2dd6cac76)

அக்கா வணக்கம் .....

அழகான படைப்பு ....
வேலியை விட்டு வெளிவந்து ....
இன்னும் இன்னும் நிறையப் படைப்புகளைப் படைக்க
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

நன்றி
~ !!! ரித்திகா !!! ~ 

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fednevnik.si%2Fuploads%2Fz%2FZavestnaSamost%2F235465.gif&hash=1261e5bdaf43642c1ec5e352c89802b2dd6cac76)
Title: Re: இதயத்தின் வேலி
Post by: GuruTN on November 05, 2016, 10:28:15 AM
இயல்பான சொற்கள் கொண்டே என் கவிதைகள் அமையும் என்று சொல்லி கொண்டிருந்த தோழி ப்ளேஸிங் மா.. இயல்பான சொற்களா இவை.. சில சொற்கள் எனக்கு விளங்க வில்லை என்றாலும்,  கவிதையின் சாரம் தன்னை உணர்ந்து கொள்ள முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.. அருமையான கவிதை அன்புத்தோழி.. அசத்துங்கள் தோழி.. அன்பு வாழ்த்துக்கள் ப்ளேஸிங் மா...
Title: Re: இதயத்தின் வேலி
Post by: BlazinG BeautY on November 05, 2016, 11:49:50 AM
நன்றி ரீதி செல்லம் . முயற்சிக்கிறேன்.   
Title: Re: இதயத்தின் வேலி
Post by: AnoTH on November 05, 2016, 12:19:26 PM
மிமி அருமையான கவிதை.
இதயம் அன்பால் சிறைப்பட்டுவிட்டது
என தங்கள் குடும்பத்தின் அன்பை
வெளிப்படுத்தி இருக்கும்
கருத்து மிக அழகாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் மிமி.
Title: Re: இதயத்தின் வேலி
Post by: BlazinG BeautY on November 05, 2016, 02:33:16 PM
வணக்கம் தோழா, மிக்க நன்றி குரு ஜி . எப்போதும் ஒரு மாதிரியான சொற்களை பயன்படுத்துவேன் . கொஞ்ச மாறுதலுக்கு நமக்கெல்லாம் ஒரு நண்பர் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். குரு ஜி நீங்க சொன்னிங்க நான் 2 கவிதை மட்டும்தான் எழுதிருக்கேன் னு சொன்னிங்க. அந்த ரெண்டு கவிதையும் அருமை ஜி.

உன்னதமா - உயர்வான
ஊழி - யூகம்
ஏகாதிபதியாக - சக்ரவர்த்தி
ஐக்கியமான- ஒற்றுமை
ஒருமத்தே - ஒரு மிக்க 
ஓவியமானது - சித்திரமானது
ஔதாரியத்துக்கு- உதாரணத்துக்கு
ஊக்கானோர் -  முன்னோர்
எந்தை  - என் தந்தை
ஏமத்தில்  -மகிழ்ச்சி
ஐசுவரிசமாக  - செல்வம்
ஔட்டில் - ஒரு வகை வன வேடிக்கை


மீண்டும்  நன்றி தோழா.


Title: Re: இதயத்தின் வேலி
Post by: BlazinG BeautY on November 05, 2016, 02:42:18 PM
என் ஆருயிர் குட்டியின் வாழ்த்துக்கு  மகிழ்ச்சி. இன்னும் சரியாய் , அழகானதை படைக்க முயற்சிக்கிறேன். அணைத்து நண்பர்களின் கவிதைகள் தனித்துவம், அதில் நான் சிறு புள்ளி . மகிழ்ந்தென் உங்கள் வாழ்த்துகளில்
Title: Re: இதயத்தின் வேலி
Post by: SarithaN on January 04, 2017, 12:06:49 AM
வணக்கம்.

கவிதையின் கட்டமைப்பு
அதனுள்ளே காணகிடைத்த
உணர்வுகள் துடிப்புக்கள்
அருமை அகோதரி.
வாழ்த்துக்கள்.
நன்றி