FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 04, 2016, 09:47:55 PM
-
கெளுத்தி கபாப் ஃப்ரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2Fkeluthi-meen-fry.jpg&hash=3c24ba8a4ea4e7f0bac363159dd9a988124f8e02)
கெளுத்தி மீன் வறுப்பதற்கு உகந்த மீன் வகையாகும். கெளுத்தி மீனை இங்கே குறிப்பிட்டிருக்கும் முறையில் சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.
தேவையானவை:
கெளுத்தி மீன் – 1 கிலோ
மசித்த இஞ்சி – 2 ஸ்பூன்
நசுக்கிய பூண்டு – 3 ஸ்பூன்
தனியாதூள் – 4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தயிர் – 1 கப்
முட்டை – 1
எண்ணெய், உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த இஞ்சி, நசுக்கிய பூண்டு, தனியாதூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தயிர், முட்டை மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து அதில் மீன் துண்டுகளை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
மசாலாவுடன் கலந்த மீனை தவாவில் எண்ணெய் விட்டு பொரித்தால் சுவையான கெளுத்தி கபாப் ஃப்ரை ரெடி.]