FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on November 04, 2016, 01:03:02 PM

Title: இன்றைய காதல்
Post by: இணையத்தமிழன் on November 04, 2016, 01:03:02 PM


அவளைக்கண்ட மறுநொடியே
கண்கள் விரிந்தது 
மறுகனமோ என்னிதயம்
சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து
மறுதினமே  கல்லுக்குள்ளும்     
காதல் மலர்ந்தது
மறுதிங்கள் என் வங்கி
கணக்கும் கரைந்தது

மாதங்கள் பறந்ததது
வருடங்கள் உருண்டது
இருமனம் சேர்ந்தது 
திருமணமும் முடிந்தது
இரவும் வந்தது

அவளோ கையில் பாற்செம்பேந்திட
நானோ கையில் அவளைஏந்திட
நாணமும் பிறந்திட நடுக்கம்கொண்டது  ( அவளுக்கு )
விளக்கை அணைத்திட விடியலும்  பிறந்தது
ஈரைந்து திங்களில் முத்தாய்
ஒரு பிள்ளையும் பிறந்திட
தத்தாய் ஒரு பிள்ளையையும் வளர்த்திட
ஆளுக்குஒரு பிள்ளை என இருக்க
ஆனந்தத்தில் அவள்மீது நானோ '
சாய்ந்து கண் அயர்ந்தேன்

எந்தலையில் எதோ மோதிட
கண்திறந்தால்  பேருந்திலிருந்தேன்
என்கையில் எதோ மெத்தென்று பட்டிட
என்னவென்று பார்த்தால் அருகிலோ
அவள் தங்கை (தற்போதிய காதலி )
அவளோ என்னவென்று கேட்டிட
எதோ கெட்டக்கனா என்றேன்
முகத்தில் கள்ளச்சிரிப்புடன்   
                           -இணையத்தமிழன்
                            ( மணிகண்டன் )
                             
Title: Re: இன்றைய காதல்
Post by: ரித்திகா on November 04, 2016, 01:35:26 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs2.e-monsite.com%2F2010%2F06%2F01%2F02%2Fresize_550_550%2Fdyn005_original_400_83_gif_2629745_3895e5abf3.gif&hash=831f362f38e219b3e16582e60e3f20cce326d0a0)


வணக்கம் அன்பு அண்ணா .....

இன்றைய காதலை வெகு சிறப்பாக
கூறியுள்ளீர்கள் ....
அழகாக வர்ணித்து உள்ளீர் .....
 அன்பு அண்ணனுக்கு ....
இந்த தங்கையின் வாழ்த்துக்கள் ....

கவிப்பயணம் மென்மேலும் தொடரட்டும் .....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs2.e-monsite.com%2F2010%2F06%2F01%2F02%2Fresize_550_550%2Fdyn005_original_400_83_gif_2629745_3895e5abf3.gif&hash=831f362f38e219b3e16582e60e3f20cce326d0a0)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-racXqMsOZVg%2FVkBAUJ5gd-I%2FAAAAAAAAGQc%2FSVGgxRkdG6E%2Fs1600%2F47.png&hash=610523142e6fe74bf07c841f8bad2f36189453c5)
~ !!! ரித்திகா !!! ~
Title: Re: இன்றைய காதல்
Post by: PraBa on November 04, 2016, 01:39:02 PM
சிறப்பான சிந்தனை நண்பா வாழ்த்துக்கள்
Title: Re: இன்றைய காதல்
Post by: இணையத்தமிழன் on November 04, 2016, 02:24:11 PM
நன்றி எனதுஅருமை நண்பா பிரபா
Title: Re: இன்றைய காதல்
Post by: இணையத்தமிழன் on November 04, 2016, 05:08:58 PM
படித்தமைக்கும் உமது கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி எனது அருமை தங்கையே
Title: Re: இன்றைய காதல்
Post by: BlazinG BeautY on November 05, 2016, 06:09:00 AM
வணக்கம் பிபி , அழகான வரிகள் பிபி. அந்த கவிதையில் நான் மூழ்கினேன் பிபி.அழகான நாட்கள்  முத்து முத்தான வரிகள். ரொம்ப பிடிச்சிருக்கு.வாழ்த்துக்கள் பிபி. தொடரட்டும் கவி பயணம்.
Title: Re: இன்றைய காதல்
Post by: இணையத்தமிழன் on November 05, 2016, 08:31:54 AM
நன்றி அக்கா
Title: Re: இன்றைய காதல்
Post by: DaffoDillieS on November 05, 2016, 08:49:35 AM
Superb poem manii
Title: Re: இன்றைய காதல்
Post by: இணையத்தமிழன் on November 05, 2016, 09:33:21 AM
:D tnx charm
Title: Re: இன்றைய காதல்
Post by: SweeTie on November 06, 2016, 06:52:24 AM
எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து எழுதினால் கவிதை இன்னும் நன்றாக அமையும்.
வாழ்த்துக்கள்