(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F003.jpg&hash=aab7cbcae7ab85b20365fea89587c9e27bdbedbf)
என்னவரும் நானும் காதலித்தோம்
இரு வீட்டாரையும் எதிர்த்து..
இன்பமான காதல் திருமணத்தில் முடிவுற்றது
திருமணமாகி பல வருடங்கள் ஆகிற்று
எங்கள் அன்பிற்கு ஒரு ஜீவன் வரவில்லை
பல மருத்துவ மனை சென்றும்
சில பிரார்த்தனை செய்தும் பலனில்லை
ஒவ்வொரு நாளும் கண்களில் கண்ணீர்
எனக்குள் ஏதோ புதிதாய் ஒன்று
மெலிதாய் வருட நுண்ணாய்வு செய்ததில்!
துன்பம் மறைந்தோட இன்பம் தலை தூக்க
அவர் கண்ணீரில் நான்...
இருவரிடையே ஆனந்தம் திளைத்திருக்க!!
ஈர நிலத்தில் சிறுவிதை
செடியானதைப் போல்
சிறுமேடும் பெரிதான பிரமை...
மீளாத் துயிலை நம்ப மறுக்கும் மனம்!!
ஈன்றேடுதேன் ஒரு அழகிய தாமரை
பார்த்து மகிழ்த்தோம் இருவரும்
வந்து சேர்த்தனர் இரு வீட்டாரும்
பிரிந்திருந்தவர்கள் சேர்த்தாள் என் தேவதை
அம்மா என்று கூப்பிட ஒரு மழலை
அந்த சொல்லுக்கு எத்தனை சக்தி
அவளை மார்போடு அனைத்து கொண்டேன்
என் அழகிய தேவதை..
அள்ளி அணைத்தேன் இன்பமாய்
என் கன்னத்தை கிள்ளினாள்
எனக்கு வலிக்காமலே
துன்பமான வலி இன்பத்தில் மறைந்தது என் தேவதையால்