FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 01, 2016, 06:46:26 AM
-
வாழ்க்கை
உழைத்தால்
உன் வியர்வைத் துளி
மண்ணில் விழும்
விழுந்தால்
வாழ்க்கை செழித்து
வானுயர எழும்
நிலா
விதவைப் பெண்ணுக்கு
நெற்றியில் பொட்டில்லை
ஆகாயமே
உனக்கு மட்டும் ஏன்
இத்தனைப் பெரிய பொட்டு!!!!
எய்ட்ஸ்
விலை கொடுத்தேன்
விலைமாது அவளுக்கு
இன்பத்துடன் தந்தாள் - ஓரு
இலவச இணைப்புடன்
இமைகள்
மேல் இமையே
பகல் முழுவதும் என்னை அடிக்கிறாய்
இரவு வந்ததும்
இறங்கி வந்து அணைத்துக் கொள்கிறாய்
அடிக்கிற கை தான் அணைக்கும்
என்பது காதலிக்கு மட்டும் அல்ல
உனக்கும் பொருந்தும்
மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தியை
யாருக்காக உன்னை நீயே எரித்துக்கொள்கிறாய்
உன் ஒளியில் கூட
உலகத்தை சூறையாடும்
மனிதனுக்காகவா!!!!!!
உலகம்
மிருகங்களை வெளியேயும்
மனிதர்கள் உள்ளேயும் உலாவும்
மிருகக்காட்சி சாலை
கணக்கு
ஒன்றும் ஒன்றும் சேர்த்தால்
இரண்டு - கணிதம்
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால்
மூன்று - வாழ்க்கை
அம்பு
ஏகலைவன் விட்ட அம்பு மட்டும் தானா
பல துளைகள் இட்டன
இந்த பெண்கள் விடும்
பார்வை அம்பும் தான்
எத்தனையோ இதயங்களை துளைக்கின்றனவே
சமஉரிமை
சமஉரிமை பெண்கள் கேட்கட்டும்
ஆண்களான எங்களுக்கு வேண்டாம்
குழந்தை பெற எங்களால் முடியாது
ஆண்கள்
மான் வேட்டைக்கு வந்து
மானிடமே மாட்டிக் கொள்ளும்
வேடர்கள்
பெண்கள்
இரும்பிடமே உருகிப் போகும்
நெருப்பு
ராசிபலன்
என்றும் இல்லாமல்
என்மனைவி சிரித்தாள்
உச்சி குளிர பார்த்தேன் - ராசிபலன்
உன் பர்ஸ் இன்று காலி
என வந்தது சீட்டு
சிரிப்பு
ஏழைகள் சிரிப்பில்
இறைவனைக் காணலாமாம் - முதலில்
ஏழைகள் சிரித்தே நான் பார்த்ததிலேயே
பின்பு இறைவனை காண்பதெப்படி
பணம்
நம் நாட்டில்
பணம் இரண்டு பகுதிகளாக பதுக்கப்படுகின்றன
பணக்காரன்
நோட்டுகளை பதுக்குகிறான்
பிச்சைக்காரன்
சில்லறைகளை பதுக்குகிறான்
பிறகெப்படி நடுத்தரவர்க்கத்திடம்
பணமிருக்கும்
-
வணக்கம் தோழரே. அருமையான கவிதை, உங்கள் வரிகளில் எனக்கு மிக பிடித்தது
நிலா
விதவைப் பெண்ணுக்கு
நெற்றியில் பொட்டில்லை
ஆகாயமே
உனக்கு மட்டும் ஏன்
இத்தனைப் பெரிய பொட்டு!!!!
நன்றி தோழா.. உங்கள் கவி பயணத்தில் நான் உலா வர அனைவரையும் அழைத்து வருகிறேன்.. வாழ்த்துக்கள் தோழா.
-
வரிகளின் எண்ணிக்கை
குறைந்தாலும் சிந்தனையின்
பார்வை தொலைதூரம்
கடந்து நிற்கிறது.
அருமையான வரிகளால்
சொற்களுக்கு அழகு சேர்த்து விட்டீர்கள்.
அருமை சகோதரா.
நான் அதிகம் இரசித்த வரித்துளிகள்
வாழ்க்கை
உழைத்தால்
உன் வியர்வைத் துளி
மண்ணில் விழும்
விழுந்தால்
வாழ்க்கை செழித்து
வானுயர எழும்
-
உங்கள் மனமாலையில் உதிர்த்த முத்துக்கள் ஒவ்வொன்றும் சிந்தனையை சீர்தூக்கி நிறுத்தி வைக்கும் அருமையான விடிவெள்ளி நட்சத்திரங்கள்... ஒவ்வொரு கவிதையையும் ரசித்தேன்.. என் கண்ணோட்டத்தில் முதல் மூன்று இடங்கள் இவைகளுக்கு
1 . மெழுகுவர்த்தி, உலகம்
2. ஆண்கள்
3. பெண்கள்
இனிதே தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்... அன்பு வாழ்த்துக்கள்...
-
நன்றிகள் ANOTH, BLAZING BEAUTY, GURU
உங்கள் விமரிசனங்கள் எனக்கு உடற்சாகத்தை அளிக்கிறத்து
-
வணக்கம்.
சிறுக
தெளிவாய்
அழகிய
பொருளாய்
உணரதகும்
உண்மைகள்.
வாழ்த்துக்கள்.
நன்றி.