FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 31, 2016, 11:00:59 PM

Title: ஒரு ரயில் பயணத்தில்
Post by: thamilan on October 31, 2016, 11:00:59 PM
சிலநாட்கள் நட்பாய் இருந்து
பிரிந்த அவளை
பல வருடங்களுக்குப் பிறகு
சந்தித்த ஒரு ரயில் பயணத்தில் ......

என்னுடைய வானத்தில்
என்றோ தொலைந்து போன
ஒரு வின்நட்சத்திரம்  இன்று
ரயிலின் ஜன்னலோரத்தில் ........

என் வாழ்க்கைப் பயணத்தில்
ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
இறங்கிப் போய் விட்ட
அவள் எழில் முகத்தை
என் இதயத்தில் பதிந்திருந்த
அவளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன் ......

உதடுகளோடு சேர்ந்து
கண்களும் சிரிக்கும் அந்த
ஊமை சிரிப்பு
அவள் சந்தோசமாக இருப்பதை
பிரகடப்படுத்தியது   

அன்று  என்னுடன்
நட்பாய் கோத்திருந்த கைகள்
காதலோடு காத்திருக்கும்
அவள் கணவனைக் கண்டு  களிப்படைகிறேன்………

 
அவள் என்னை கவனிக்காது போனாலும்
அவள் பிஞ்சுக் குழந்தை
எனைப் பார்த்து நட்பாய் சிரிக்கிறது
ஓ....... உன் ரத்தமல்லவா !!!!!

தடதடவென உருண்டோடும்
ரயிலின் சத்தத்தையும் தாண்டி
என்று அவள் சொன்ன வார்த்தைகள்
என்னுள்ளே ......
ஒலித்துக் கொண்டிருந்தது……..

வேகமாக வீசும் காற்றின் அழுத்தமோ
அவள் நினைவுகள் தந்த வலியோ
என் கண்களில் கொஞ்சம்
கண்ணீர் துளி விடுகிறது ............

என் பிரியமான தோழியே
இதோ ரயில் நிற்கப் போகிறது
நாம் பிரிய போகிறோம்
மறுபடியும் சந்திக்காமலே......

என்றாவது ஒரு நாள் மீண்டும்
எங்காவது மறுபடியும் சந்திப்போம்
என்ற சந்தோஷத்துடனும்   
அவள் நினைவுகள் ஏற்றிவைத்த
மனச் சுமையுடனும்
இறங்கப் போன எனக்கு
அவள் குழந்தை சிரித்துக் கொண்டே
பறக்கவிட்ட முத்தத்தை
நெஞ்சில் நிரப்பிக் கொண்டு
இறங்கிப் போகிறேன்  மனமலர்ச்சியோடு !!!!!!!

Title: Re: ஒரு ரயில் பயணத்தில்
Post by: BlazinG BeautY on November 01, 2016, 08:07:15 AM
வணக்கம் தமிழன், அழகான வரிகள்.கடந்த காலா  நட்பை உணர்த்தும் வரிகள். மற்றொருவனுக்கு உரியவனாதும்  புன்னகைத்து அருமை. பிஞ்சு குழந்தையின் சிரிப்பில் எத்தனை சந்தோசம்..அவள் சிரித்தாள் என்று நினைப்போம் .. சொன்னது சரியா என்று தெரியவில்லை, எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் கவி..
Title: Re: ஒரு ரயில் பயணத்தில்
Post by: AnoTH on November 01, 2016, 01:36:46 PM
கவிதையின் அழகே வர்ணனையில் அமைவது.
தங்களுடைய கவியில் நான் அதனை
உணர்கிறேன். கடந்த காலத்தில் இரசித்த
விடயங்களை இன்று வெகு நாட்கள் கடந்தும்
ஒப்பிட்டு பார்க்கும் அந்த முகத்தின் அழகை
அழகாக வரிகளால் அலங்கரித்துவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள் இனிய சகோதரன் தமிழன்
Title: Re: ஒரு ரயில் பயணத்தில்
Post by: GuruTN on November 02, 2016, 07:10:32 AM
அதுபோன்ற ஒரு தோழி எனக்கில்லை என்றபோதும், மனதை செல்லமாக ஒரு சீண்டல் செய்கிறது உங்கள் இனிமையான கவிதை... கடந்த கால நட்பும், அன்பும் கொடுக்கும் வலிகளுக்கும் நிகர் இல்லை, சுகங்களுக்கும் நிகர் இல்லை.. அருமையான கவிதை தமிழன்.. அன்பு வாழ்த்துக்கள்.. அசத்தல் தொடரட்டும்..
Title: Re: ஒரு ரயில் பயணத்தில்
Post by: thamilan on November 03, 2016, 07:51:34 AM
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ANOTH, BLAZING BEAUTY,GURU
Title: Re: ஒரு ரயில் பயணத்தில்
Post by: SarithaN on January 03, 2017, 11:52:37 PM
வணக்கம் ஐயா தமிழ்!

ஆழ வேரூன்றிய ஓர்
ஆல விருட்சம் போன்ற - நட்பு

படிக்கையில் நரம்புகள்
புடைக்க நினைவுகள் - மீழ்கிறது

ஆணாதிக்க உலகில்-பெண்கள்
ஆணிடம் கொண்ட
ஆன்ம நட்பைகூட
அடிமைசெய் உலகு.

ஆண்மகன் சொல்லிவிட்டான்
கவிதையில் விலியை!
கோதையர் பாவம் கவியில்
சொல்லவும் சுதந்திரமில்லை!

தையலாள் நட்பை கணவனிடம்
புரிவிக்க முடியுமோ?
இல்லை புரிந்துதான் கொள்வானோ?

பாவம் பேதையர் ஆலம்போல்
ஆழ்மனதில் கொண்ட நட்பை-கூட
ஆண்டுகள் கடந்து கிழப்பரும்
எய்தினும் வெளிப்படுத்த முடியா-உலகு

நம்மால் சொல்ல முடிகிறது
சொல்லையில் சுமையும் தணிகிறது
பெண்கள் அழமட்டுமே முடியும்
ஆணாதிக்க உலகில்.

நாம் மட்டும் மனைவியர் நட்பை
அனுமதிக்கும் ஆண்மக்களோ?

வாழ்த்துக்கள். கவிதை சுமை!

நன்றி