FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 31, 2016, 09:41:41 PM
-
தீபாவளி ரெசிபி கோதுமை அல்வா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2Fhfhfvh.jpg&hash=647215103d62413c329ada8b032bc828582ca0c4)
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் + 1/4 கப் நெய் – 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை பாதாம் – 4 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது,சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி!!!