FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 31, 2016, 08:40:36 PM
-
கறிவேப்பிலை நண்டு வறுவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2Fnand.jpg&hash=6a1be59b2851c1ecfb31417cfa17392e9dee8f57)
தேவையான பொருட்கள் :
நண்டு – 750 கிராம்
சின்ன வெங்காயம்- 100 கிராம்
தக்காளி- 2
இஞ்சி- 50கிராம்
பூண்டு- 50 கிராம்
எலுமிச்சை – 1/2 பூண்டு
மிளகு- 2ஸ்பூன்
சோம்பு- 1 1/4 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை உப்பு- தேவையான அளவு
செய்முறை:
மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து லைட்டாக நிறம் மாறும் வரை வறுத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து மொறு மொறுவென கறிவேப்பிலை வரும் வரை வறுக்கவும். மிக்ஜரில் போட்டு மாவாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி சிறிய வெங்காயம் சேர்க்கவும் கலர் மாற ஆரம்பித்ததும் தக்காளி சேர்த்து தொக்கு பதத்திற்கு தயார் செய்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்க்கவும்.
அதில் மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். நண்டில் தண்ணீர் ஊறுவதால் சிம்மில் வைத்து நன்றாக வேகவிடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை கலந்து நன்றாக கிளறவும். எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கினால் சூப்பரான கறிவேப்பிலை நண்டு வறுவல் தயார்.