FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 31, 2016, 08:20:20 PM
-
கருப்பட்டி ஜாமூன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2Fkru.jpg&hash=cacfa58c43bbca4fb864e556e6ec638cb55a5a2c)
தேவையானவை:
பிரெட் – 12 துண்டு,
கருப்பட்டி – 500 கிராம்,
பால் – அரை லிட்டர்,
கண்டென்ஸ்டு மில்க் – 100 கிராம்,
நறுக்கிய பாதாம், முந்திரி – சிறிதளவு,
நெய் – தேவையான அளவு
செய்முறை:
ஓரங்களை நீக்கி பிரெட் துண்டுகளை உதிரியாக எடுத்துப் பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த பிரெட் மாவில் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கோதுமை மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வாணலியில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி, அதில் ஏலக்காய்த்தூளை தூவவும். பொரித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து, இறுதியாக நறுக்கி வைத்த பாதாம் மற்றும் முந்திரியை மேலே தூவவும். கருப்பட்டி பாகில் இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு எடுத்துச் சாப்பிட்டால் மிருதுவாக, சுவையாக இருக்கும்