FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 31, 2016, 06:57:58 PM

Title: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: இணையத்தமிழன் on October 31, 2016, 06:57:58 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fm5KQREj.jpg&hash=fcc1afe047ec63f87f4a7fe2e8ac4d6f9ceb72ed) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


உன் தமிழில் பிழை உள்ளது
என்று கலங்கிவிடாதே
தமிழுக்கு நீ  பிழை இல்லை
உன்னெழுத்தில் தான் பிழை
உள்ளதே தவிர
உன் உள்ளத்தில் பிழை இல்லை
வீறுகொண்டு எழு  வீரத்தமிழைத் தொடு
விண்ணையும்  தொட்ட தமிழ்
இம்மண்ணை  ஆளும் நாளோ
வெகுதூரம் இல்லை
                      -இணையத்தமிழன்
                       ( மணிகண்டன் )
                       
Title: Re: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: BlazinG BeautY on October 31, 2016, 10:24:13 PM
வணக்கம் பிபி..உண்மைதான் நம் தமிழில் பிழை இருந்தும்..அழகான வரிகள்

உன் உள்ளத்தில் பிழை இல்லை
வீறுகொண்டு எழு  வீரத்தமிழைத் தொடு
விண்ணையும்  தொட்ட தமிழ்
இம்மண்ணை  ஆளும் நாளோ
வெகுதூரம் இல்லை...
வெகு தொலைவில் இல்லை பிபி .வாழ்த்துக்கள்.
Title: Re: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: DaffoDillieS on November 01, 2016, 10:46:12 AM
Super bull motivating
Title: Re: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: இணையத்தமிழன் on November 01, 2016, 11:35:07 AM
படித்து ரசித்தமைக்கும் உங்களது வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பிளேசிங் பியூட்டி அக்கா மற்றும் எனது அருமை தோழி  டாபோடில்ல்ஸ்   
Title: Re: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: AnoTH on November 01, 2016, 01:41:20 PM
தமிழனுக்கே உரித்தான
கர்வத்தில் வடிந்த சில வரித்துளிகள்.
தமிழ் மொழியை பிழையாக பேசுவது
அவமானமல்ல பேசாமல் விடுவதே
அவமானம் எனும் ஆழ்ந்த கருத்தை முன்
வைத்துவிட்டீர்கள் அண்ணா.


வீறுகொண்டு எழு  வீரத்தமிழைத் தொடு
விண்ணையும்  தொட்ட தமிழ்
இம்மண்ணை  ஆளும் நாளோ
வெகுதூரம் இல்லை.


இந்த வரிகளை கடன் வாங்குகிறேன்.
ஒரு நேரத்தில் எனக்கு உபயோகிக்கப்பயன்படும்.

நன்றி.
Title: Re: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: இணையத்தமிழன் on November 01, 2016, 01:51:06 PM
அன்பு தம்பி அனோத் படித்தமைக்கும்  உட்க்கருத்தை எளிதாய் அனைவர்க்கும் விளக்கியமைக்கும்  நன்றி
Title: Re: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: GuruTN on November 02, 2016, 07:36:13 AM
மச்சி நீ நடந்து மச்சி நீ நடந்து.. நான் இருக்கேன் உன் பக்கம்.. லொள்ஸ்.. அன்பு வாழ்த்துக்கள் மச்சி.. மணி...
Title: Re: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: இணையத்தமிழன் on November 02, 2016, 08:13:10 AM
ஹாஹா மச்சி
Title: Re: விண்ணைத்தொட்ட தமிழ்
Post by: SarithaN on January 03, 2017, 10:44:10 PM
வணக்கம்.

தமிழ் வளர்த்தோர்
தமிழ் வளர்ப்போர்
இடையே நம்மை
வளர்க்கும் தமிழ்.

எழுக உணர்வு
வாழ்க வாழ்க
வாழியவே தாய்.