FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: RemO on February 04, 2012, 03:40:17 PM

Title: தித்திக்கும் கேரட் அல்வா!
Post by: RemO on February 04, 2012, 03:40:17 PM
காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். எண்ணற்ற சத்து நிறைந்த கேரட்டில் இருந்து சுவையான அல்வா தயாரிக்கலாம். குழந்தைகள் இதனை விரும்பி உண்ணுவதோடு உடல் நலத்திற்கும் ஏற்றது. குறைந்த கொழுப்பு சத்து கொண்டது.

கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்

கேரட் – கால் கிலோ
சர்க்கரை – 300 கிராம்
பால் – கால் லிட்டர்
நெய் – 50 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
கேசரி பவுடர் – கலருக்கு ஏற்ப

அல்வா செய்முறை

முதலில் கேரட்டின் தோலினை நன்றாக சீவி வைத்துக்கொள்ளவேண்டும். அது மண், கண்ணுக்கு தெரியாத பூச்சி ஆகியவற்றை நீக்க உதவும். பின்னர் நன்றாக துருவி வைத்துக்கொண்டு பாலில் வேகவிடவேண்டும். நன்றாக குழைய வெந்து கெட்டியான உடன் அதில் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். அது அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவேண்டும்.

பின்னர் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். கலருக்கு ஏற்ப கேசரி பவுடர் ஃப்ளேவர்களை வாங்கி தேவையான அளவு உபயோகிக்கலாம். இறக்குவதற்கு முன் நெய் சேர்க்க வேண்டும்.

இப்பொழுது சுவையான சத்தான கேரட் அல்வா தயார். இதற்கு அரை மணி நேரம் போதுமானது. திடீரென விருந்தினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் இந்த கேரட் அல்வாவை உடனடியாக செய்து அசத்தலாம்.