FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 27, 2016, 10:04:11 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F96hKAMW.jpg&hash=b604bddc5a7e5d4c9c731f703714c243d5bfa8e1) (http://www.freeimagehosting.net/commercial-photography/)
களை பறிக்க நீ போகையிலே
களத்துமேட்டுக்கு நானும் வந்தேன்
காட்டுல தான் நீ தேன் எடுக்கையிலே
உன் உதட்டுல நானும் தேன் உறிஞ்சினேன்
நீ நாவற்பழம் ருசிக்கையிலே
உன் நாவையும் தான் நா ருசிச்சேன்
உன் மாராப்பு விலகையிலே
என் மனசு ஏனோ துடிச்சிச்சிடி
மாலை மாத்தி மல்லுக்கட்ட
மனச ஏனோ பூட்டிவைச்சேன்
ஆலமரத்துப்பொந்துக்குள்ள
ஆளுக்கொரு கிளி வளத்தோம்
ஆண் கிளிய நீவளக்க
பெண் கிளிய நா புடிக்க
ஆண் கிளியோ கடிச்சிச்சிடி
பெண் கிளியும் பறந்துச்சிடி
உங்கப்பன் சேதி சொல்ல
பதறி போய் நா நின்னேனே
பவுசா தான் வந்து நின்னான்
பட்டணத்து மாப்பிள்ள
பழசையெலாம் நெனச்சுக்கிட்டு
பழைய கஞ்சி நா குடிக்க
பந்தகாலு நட்டாச்சுன்னு
பத்திரிக்கைய நீ நீட்ட
கத்தியால குத்தினாலும்
கலங்காம நின்னவண்டி
நீ சொன்ன வார்த்தையிலே
என்ரெண்டு கண்ணும் கலங்கிச்சிடி
-இணையத்தமிழன்
( மணிகண்டன் )
-
சொல்ல மொழி இல்லை அசத்திட்ட மச்சி.. மணி...
-
நன்றி மச்சி குரு
-
வணக்கம்.
நீ சொன்ன வார்த்தையிலே
என்ரெண்டு கண்ணும் கலங்கிச்சிடி
கண்ணு மட்டுமா கலங்கும்?
உயிர் பிரியும் நேரமல்லவா!
கிராமத்தில் மிடுக்காய் வாழும்
வசதிபடைத்த குடும்பத்தார்
பொண்கள் வாழ்வை நிலைகுலைத்த
கொடுமை இவை!
கதைகள் அல்ல உண்மை.