FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on October 26, 2016, 10:19:08 PM
-
ஜன்னல் வெளியே
விழிகளின் வழியாய்
மழை விழுங்கிக்கொண்டிருக்கிறோம்
நீயும் நானும் ..!
மனசுக்குள்ளிருந்து
மழையென வழியத்துவங்குகிறது
மழைக்கான கவிதையொன்று....
அப்பா
அப்பா என்னும்
உன் அழைப்பை புறக்கணித்தபடி...
வழிந்த கவிதையை
வரைந்து முடிக்கிறேன்
வெள்ளைத்தாளில்..
மழை விட்டது ...
நீ விடவில்லை ...
கவனித்த கணத்தில்
கவிதையைக்கிழித்துக்கொண்டே
கப்பல் விடும்
கோரிக்கையை
முன் வைக்கிறாய் நீ...
மழையே கப்பலாகி
மழைநீரில் பயணம் துவக்குகிறது....
கைகளை தட்டிக்கொண்டே
சின்னதாயொரு குதி போட்டு
அப்பாவுக்கு ஒரு
முத்தம் பரிசளிக்கிறாய்....
இருவர் மனதும்
ஆனந்தமாய் பயணிக்கிறது
அம்மழைக்கப்பலில்....
மீண்டும்
துளிக்கிறது மழை...
இம்மழை நின்றுவிடட்டும்....
இப்பயணம் மட்டும்
நிற்காமல் நீளட்டுமென
ஏங்குகிறது
அப்பாவின் மனது....
எ�ன்ன புரிந்ததோ
உன் பிஞ்சு மனதுக்கு....
இன்னொரு முத்தம்
தந்து கொண்டிருக்கிறாய் எனக்கு ....!
Miss ♡ U baby
-
தோழா ,அழகியதாய் ஒரு கவிதை, அப்பா பிள்ளைக்கும் ஒரு பந்தம்.சொல்லி தெரிய வார்த்தை இல்லை. தொடரட்டும் தோழா ..வாழ்த்துக்கள்
-
மழையை இராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
ஆனால் இப்படியும் இரசிக்கலாமா என்ற ஒரு சிறந்த
படைப்பை உருவாக்கிவிட்டீர்கள்.
மகள்களைப்பெற்ற தந்தையின் உணர்வோடு
கலந்து விடுகிறது இன்னும் எவ்வளவு நாட்கள்
எனும் சாமர்த்தியமான கேள்வி.
வாழ்த்துக்கள்.
-
அன்பை துளிர்க்க வைக்கும் மிக அழகான கவிதை பிரபா.. அசத்துங்கள்.. அன்பு வாழ்த்துக்கள்...