FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 26, 2016, 03:22:21 PM

Title: படித்ததில் பிடித்தது
Post by: இணையத்தமிழன் on October 26, 2016, 03:22:21 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FkZWbYdb.jpg&hash=55445e3fd047a16753e75a800972143dd82322b7) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


நான் இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்....

அம்மா அப்பா என்னை கடைசியாக மடியில் வைத்துக்கொள்ள நினைக்கலாம்..!!!

அக்கா தங்கை என் கை பிடித்து அழ நினைக்கலாம்..!!

துனைவியாரோ கடைசி நிமிடத்திலாவது அருகில் இருக்க நினைக்கலாம்..!!

பெற்ற குழந்தை என்னை தட்டி எழப்ப நினைக்கலாம்..!!

தொலைந்த தோழியொருத்தி
கடைசியாய் என் கரம் கோர்க்க வரலாம்..!!

கூட பழகிய நண்பர்கள்
கடைசியாய் கட்டித்தழுவி கதறி அழுதிட விரும்பலாம்..!!

அன்பைக் காட்டத் தெரியா நான் விரும்பியோர்
கடைசியாய் என் தலைக் கோத ஆசைப்படலாம்..!!

உறவற்ற பெயரற்ற செய் நன்றி மறவா யாரோ
கடைசியாய் என் பாதம் தொட விரும்பலாம்..!!

உயிரற்று போனால்தானென்ன...
கடைசியாய் எனக்கும் தேவையாய் சில வருடல்கள்
இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்...!!

எல்லாம் அந்த ஒரே ஒரு நாள் மட்டுமே..!!

கண்ணீருடன்....
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: BlazinG BeautY on October 31, 2016, 10:32:20 PM
பிபி , சொல்ல வார்த்தை இல்ல மா. பிறப்பும் இறப்பும் சேர்த்தே வரும் நம் வாழ்வில்.. இன்பம் துன்பம்  கடக்காத நாட்கள் இல்லை .. எனக்கும் இப்படி ஓர் ஆசை உண்டு.. இப்போதும் உங்கள் வரிகளில் உணர்தேன் என் தவறுகளில். நன்றி  தம்பி.
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: DaffoDillieS on November 01, 2016, 10:45:35 AM
Very nice.. n touching..
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: இணையத்தமிழன் on November 01, 2016, 11:03:08 AM
Ama ka arumaiyana kavithai ka

Akka itha na eluthalai ka facebook la padichen ka oru kavithaiya athan nalla irunthuchi nu Inga share panen ka

Yes charm sema lines
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: GuruTN on November 02, 2016, 06:29:35 AM
படத்தை பார்த்ததும் கவிதையை படிக்கச் தயங்கினேன்... படித்தவுடன் நல்ல வேலை விடுபடவில்லை என்று எண்ணுகிறேன்.. அருமையான கவிதை மச்சி...
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: இணையத்தமிழன் on November 02, 2016, 08:20:51 AM
ஆம் மச்சி குரு நன் முகப்புத்தகத்தில் படித்த கவிதை படத்தவுடனே என் மனதை தொட்டே கவிதைகளுல் ஒன்று என்றும் சொல்லலாம் ஒவொரு வரியிலும் உணர்வுகளை மறைத்துவைத்துள்ளார் அக்கவிஞர்