FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 25, 2016, 11:40:00 AM

Title: நவீன தமிழன்
Post by: இணையத்தமிழன் on October 25, 2016, 11:40:00 AM


கண்ணுக்கு மைதீட்டி
கவிதைக்கு பொய் தீட்டி
அழகுக்கு மெருகேற்றி
இயற்கைக்கு கைகாட்டி
செயற்கைக்கு செருக்கூடி
ஆடைக்கோ அழுக்கேற்றி
உணவிலோ உப்பேற்றி (நச்சு உப்புக்கள்)
நம் தாய்மொழியாம்
தமிழுக்கு தீமூட்டி
ஆங்கிலத்தை பாராட்டி
நாகூசாமல் நாள்தோறும்
சொல்வோம் நவநாகரிக
தமிழர் என்று
                               - இணைய தமிழன்
                                  ( மணிகண்டன் )

Title: Re: நவீன தமிழன்
Post by: AnoTH on October 25, 2016, 12:23:54 PM
கலப்படம் உணவில் தொடங்கி
அனைத்து உற்பத்தி பொருட்களிலும்
கலந்துவிட்ட இந்தக்காலத்தில்.
மொழியில் கலப்படம்
கலந்துவிடும் நிலையை
அழகாக உணர்த்தியுள்ளீர்கள்
அன்பு அண்ணா வாழ்த்துக்கள்
Title: Re: நவீன தமிழன்
Post by: இணையத்தமிழன் on October 25, 2016, 12:49:27 PM

எனது அருமை தம்பி அனோத் மிக்க நன்றி உமது வாழ்த்துக்களுக்கு
ஆம் தம்பி தற்போதைய காலத்தில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவதே காண்பதே  அரிதாய் உள்ளது இனி வரும் தலைமுறையாவது நன்றாக தமிழ் பேசுவதை கண்டிட ஆசை   
Title: Re: நவீன தமிழன்
Post by: GuruTN on October 25, 2016, 01:25:58 PM
வீரமும் பண்பும் புகழும் கொண்ட வீரத்தமிழனின் அடையாளம் காக்காமல் அயல் நாட்டவர் அடையாளத்தை நமக்கானதாக சொந்தம் கொண்டாடி, நம்மை நாமே இழந்து கொண்டிருக்கின்றோம்.. அருமையான கவிதை, அற்புதம் என் அன்பு தோழா.. மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Title: Re: நவீன தமிழன்
Post by: இணையத்தமிழன் on October 25, 2016, 01:40:06 PM
எனது அருமை நண்பா குரு உன் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல
 ஆம் நமது அடையாளங்கள் சிறிது சிறிதாக அழிந்து கொண்டே வருகின்றன இனிவரும் காலத்திலாவது இந்நிலைமை மாறும் என்று எண்ணுகிறேன்