FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on October 24, 2016, 04:50:51 PM
-
போதி மரத்தை
வெட்டிக் கொண்டிருந்த
புத்தனிடத்தில்
போதனை கேட்கவில்லை யாரும் ...
காரணம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்
அவனோ
மௌனமாய் மரம் வெட்டிக்கொண்டிருந்தான்..! ;D
-
புத்தன் போதி மரத்தின் கீழ்தான் ஞானம் பெற்றான். எப்படி அவன் போதிமரத்தை வெட்ட முடியும். காரணம் என்னவோ ....தப்பாச்சே ...
-
எனக்கும் இதே சந்தேகம் தான்.அதன் எப்படினு கேட்க தோணிற்று . பொதி மரத்தில் கீழே தான் போதனை செய்தற். அவர் எப்படி வெவெவேத்தி இருக்க முடியும். சந்தேகத்துடன் தோழி ?
-
காரணம் கேட்டால்தானே
காரியம் விளங்கும்
-
இப்பிடி பூச்சாண்டி காட்டி எங்களை ஏமாத்த பார்க்காதீங்க.
-
சித்தார்த்த கௌதமரை ஏன்? இங்கே உள்ளே இழுகிறீர்கள் தோழி SweeTie and BlazinG BeautY...!!
புத்தியை உபயோகப்படுத்துபவன்தான் புத்தன் என்பதாகும். புத்தியை ஆதாரமாகக் கொண்டதால் புத்தன் எனப் பெயர் வந்தது.
அனைவரும் புத்தன் ஆகிவிட்டால் யாரும் வாழ்க்கை நடத்த முடியாது இன்றைய நடைமுறை வாழ்க்கையில் என்றெண்ணி இருக்கலாம்..! அதனால் நண்பர் பிரபா கவி புனைந்திருக்கலாம்!!
வலிகள் நிறைந்தது வாழ்க்கை என்றான் புத்தன்.
சுற்றி நின்று கைதட்டி இசைந்தனர் வேடிக்கை மாந்தர்.
மக்களிடையே "வியத்தல்" குணம் குறைந்துகொண்டே வருகிறது.
புத்தன் எதிரில் வந்தாலும் சாதாரணமாய் கடந்து செல்கிறார்கள்.
-
மாறன் உங்கள் அருமையான விளக்கத்துக்கு நன்றிகள்.
-
விவரமான விளக்கம் மாறன்
நன்றிகள் பல