(https://s11.postimg.org/hgu1iywjn/imageedit_5_3765739638.jpg)
ஏக்கத்துடன் நான்
காரின் உள்ளே சோகமாய் பார்த்திட ...
ஏளனமாய் என்னைபோல் ஓர் சிறுமி
காரின் வெளியே பார்த்து சிரித்திட...
என் பிஞ்சு கரங்களில் ரோஜா மலர்கள் ஏந்திட...
என்னை ஒரு சொகுசு காரில் உள்ள சிறுமி திட்டிடா..
கபடமே இல்லாமல் திரும்பவும் கேட்டிட ..
கருணையே இல்லாமல் துரத்திட..
சுடும் வெயிலில் நான் பசியால் வாடிட..
சொகுசுக்காரில் அந்த சிறுமி சந்தோஷமாகிட..
அவஸ்தையில் நான் கண்ணீர்விட ...
அவள் அம்மா என்னைப் பார்த்து மனம் உருகிட..
மலர்களை அவர்கள் வாங்கிட ..
மலர்களைப் போல் என் முகத்தில் புன்னகையிட..
நான் சந்தோசமாய் வீட்டிக்கு ஓடிட..
காரின்னுளே உள்ள சிறுமி கோபமாய்ப் பார்த்திட...
அன்பாய் ஆசையாய் இன்பமாய் நான் வீட்டுக்கு சென்றிட ...
ஈகையாய் உதவியாய் ஊக்கமாய் பெற்றோர்கள் பார்த்திட...
எளிமையாய் ஏக்கமாய் ஐயமாய் மனதில் கவலையாகிட..
ஒளிந்திட ஓரத்தில் ஔவியமாய்ப் பேசிட ..
இன்று போல் இன்பமாய் கடந்திட ..
இறைவனிடம் வேண்டிட ..
இன்பத்தில் இறைவன் அனுக்கிரமிட ..
இன்பமாய் மகிழ்ந்திட....
முற்றும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_0p8EMBjJORg%2FTQenUI0b-dI%2FAAAAAAAAFr4%2FRBI4_svdy-M%2Fs400%2Fbarrinhafgty.gif&hash=b31d78f3b22efac82c531bb2033fddd82f697d7c)
பேபி வணக்கம் ....
மீண்டும் அழகானப் படைப்பை
வழங்கியுளீர் .......அற்புதம் ....
ஒரு கொத்து பூவில் அச்சிறுவனின்
சந்தோசம் வெளிவந்தது .....
அருமை அருமை .....
வாழ்த்துக்கள் அக்கா .....
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் .....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_0p8EMBjJORg%2FTQenUI0b-dI%2FAAAAAAAAFr4%2FRBI4_svdy-M%2Fs400%2Fbarrinhafgty.gif&hash=b31d78f3b22efac82c531bb2033fddd82f697d7c)
(https://myriamir.files.wordpress.com/2015/05/barrros.png?w=150&h=79)
~ !! ரித்திகா !! ~
மலர் ஏந்திய மழலையின் உணர்வில்.
கவிதையின் ஆளம் வெளிப்படுகிறது.
ஓர் மனம் மறுத்திட இனொரு மனதின்
தவிப்பை அழகாக உணர்த்திவிட்டீர்கள்.
இறுதியில் ரோஜா பூக்களுடன் வாடிக்கிடந்த
அந்த மலரும் பூத்துவிடுவது அழகை சேர்க்கிறது.
வாழ்த்துக்கள் என் அன்பிற்கினிய தமக்கை.
(https://s12.postimg.org/ymnjae4p9/imageedit_4_3778707880.gif)
என் அருமை தோழர் பிரபா ,தோழி ஸ்வீட்டி, ரீதி செல்லம், குட்டி ரொம்ப நன்றி .என் மனம் ஆனந்தத்தில் உள்ளது.. என்னை எழுத வைத்தது அந்த சிறுமி.ஏக்கத்தில் ஒரு கனவு. எழுத வேண்டும் எண்ணம் , நன்றி அனைவர்க்கும்.எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.