FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Tamil NenjaN on October 23, 2016, 09:52:16 PM

Title: நமக்காக காத்திருக்கும் பொழுது..!!
Post by: Tamil NenjaN on October 23, 2016, 09:52:16 PM
விடியலுக்கு இன்னும்
சில கணங்கள்
புற்தரைகள் எங்கும்
பனித்துளிகள்

சூரிய ஒளியின் வரவுக்காய்
மரங்கள் தரும் வரவேற்பு
மண்தரையெங்கும்
பூக்களின் சிதறல்

பட்சிகள் பறக்க
செந்நிறத்தில் வானம் வெளுக்க
குங்குமமும், சந்தனமும்
தேனில் கலந்த அற்புதக்காட்சி

அதிகாலைகள் தோறும்
அற்புதங்கள்தான்
ரசித்து மகிழ்ந்தால்
வாழ்வெங்கும் ஆனந்தங்கள்தான்..

சோர்வுகள் விரட்டி
இலக்குகள் நோக்கி
விரைந்தால் வாழ்வில்
வெற்றிகள் எல்லாம்
காத்திருக்கும் நம்
காலடியில்...

காலைப் பனியாய்
துயரங்கள்
தூரமாய் ஒதுங்கும்...

வாழ்க்கை என்பது
மகத்தானதாய் மலரும்..

எழுந்திரு தோழா..
நாளைய பொழுது
நமக்காக காத்திருக்கின்றது...
Title: Re: நமக்காக காத்திருக்கும் பொழுது..!!
Post by: SweeTie on October 24, 2016, 05:51:26 AM
உங்கள் முதல் கவிதை போல் தெரிகிறதே.   நன்று.  வாழ்த்துக்கள்
Title: Re: நமக்காக காத்திருக்கும் பொழுது..!!
Post by: ரித்திகா on October 24, 2016, 09:06:43 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg0.liveinternet.ru%2Fimages%2Fattach%2Fc%2F5%2F88%2F369%2F88369794_4360286_0_45f8e_9e50e27e_XL.gif&hash=34b21e891755017cb1b73ca596dc6d18da1a3309)

~ !! வணக்கம் தோழர் தமிழ் நெஞ்சன் ... !! ~

முதலில் .... FTC Forum இற்கு  தங்களை அன்புடன் வரவேற்கிறேன் ....
பெயரில் , நெஞ்சில்  தமிழை சுமந்து வந்துள்ளீர் ....
அழகான பெயர் ....தமிழ் நெஞ்சன் ....
இங்கு தங்களின் முதல் படைப்பு....
அற்புதம் .....
காத்திருந்த பொழுது இனிய பொழுதாக
விடியட்டும் .....
கவிப்பயணம் இங்கு மென்மேலும் தொடரட்டும் .....
வாழ்த்துக்கள் தமிழ் ....
~ !! நன்றி !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg0.liveinternet.ru%2Fimages%2Fattach%2Fc%2F5%2F88%2F369%2F88369794_4360286_0_45f8e_9e50e27e_XL.gif&hash=34b21e891755017cb1b73ca596dc6d18da1a3309)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.silvitablanco.com.ar%2Fwinnie_pooh_3%2Fanipoohpig.gif&hash=810455e618457498f24ff147468b8747c60b7a09)
நான் தோழி
~ !! ரித்திகா !! ~

Title: Re: நமக்காக காத்திருக்கும் பொழுது..!!
Post by: இணையத்தமிழன் on October 24, 2016, 12:33:48 PM
அருமையான கவிதை நண்பா இன்னும் பல கவிதைகள் தம் எழுதிட எம்மனமார்ந்த வாழ்த்துக்கள்