FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 23, 2016, 06:52:55 AM

Title: பூக்காரன்...
Post by: Maran on October 23, 2016, 06:52:55 AM



பூக்காரன்...


உப்புக்குவியலென
நறுமணம் வீசும்
முல்லை மொட்டுக்கள் .

நாரில் கோர்க்க நேரமேது?
நாழி நாலு ரூபாய்
கொட்டிக் கொடுக்கும் பூக்காரன்.

அகம் வெந்து முகம் வாடி
அளந்து  கொடுக்கிறான்
ஒரு ரூபாய், அரை ரூபாய்க்கும் .

பாலித்தீன் பைகள் நிரம்பி வழிய
பஸ் பயணிகளிடம்
உருகும் சின்ன குரல்கள்
"சார் ... ரெண்டு ரூவாதான் "

ஆசையும், லாபமும்தான்
அழகுபார்க்க யார்...?
வயதான அம்மாவைத் தவிர.

கூந்தல்களை காணும்போது
நினைவில் வருவது
வெறும் பூக்கள் மட்டுமல்ல...




Title: Re: பூக்காரன்...
Post by: ரித்திகா on October 23, 2016, 10:29:18 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fbagacum.b.a.pic.centerblog.net%2F4136c0c8.png&hash=62062afdd6ee8934ace2a998a7f9a9f1e576ec55)


வணக்கம் தோழர் மாறன் ....
அழகான கவிதை ....!!!
கவிப்பயணம் மென்மேலும் தொடரட்டும் ...!!!
வாழ்த்துக்கள் !!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fbagacum.b.a.pic.centerblog.net%2F4136c0c8.png&hash=62062afdd6ee8934ace2a998a7f9a9f1e576ec55)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_lj_y7Z_fw94%2FTDRM-p-QH_I%2FAAAAAAAAB0U%2F31sNo_q9cVM%2Fs400%2Fflower%252Banimated%252B43453.gif&hash=372da2d96db82930dcef2d41fa607a94998dc3ea)
~ !! ரித்திகா !! ~

Title: Re: பூக்காரன்...
Post by: PraBa on October 23, 2016, 02:38:57 PM
சிந்தனை வெகுசிறப்பு
Title: Re: பூக்காரன்...
Post by: Maran on October 23, 2016, 06:20:57 PM



நன்றி தோழி ரித்திகா... என் சிறந்த கவிதைகளை இங்கு பதிவிடுவது இல்லை தோழி. கடலில் போட்ட மணல் போல கலந்துவிடும். கவிஞர்களையும், கவிதையையும் மதித்து கொண்டாடுவதில்லை என்பதால்... அதற்குரிய அங்கீகாரத்தையும், பாராட்டையும் தரும் வாசகர் வட்டம் இங்கில்லை.

என் கவிதையை ரசித்துப் பாராட்டிய என் தோழிக்கு என் இதயம் நிறைந்த நன்றி.





மிக்க மகிழ்ச்சி நண்பா பிரபா... கவிதையை ரசித்து கருத்திட்ட உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.



Title: Re: பூக்காரன்...
Post by: SweeTie on October 23, 2016, 06:53:09 PM
வெகு சிறப்பான கவிதை.   நீங்கள் சொல்வதும் எனக்கு சரியாகத்தான்  தெரிகிறது.  கருத்துள்ள, நயம் கொண்ட   கவிதைகள் மதிக்கப்படவில்லை  என்றால்   கவிஞன்  மனம்  வேதனையடைகிறது.    இருப்பினும்  உங்கள் கவிதைகளை   விரும்பி  ரசித்துப் படிக்கும்  ஒரு சில என்னைப்போன்ற  தோழிகளும்  இருக்கத்தான் செய்கிறோம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.    வாழ்த்துக்கள்.
Title: Re: பூக்காரன்...
Post by: AnoTH on October 24, 2016, 10:06:07 AM
ஆழ்ந்த கருத்துக்கள். தினசரி பயணத்தில்
எத்தனையோ நபர்களை சந்திக்க நேர்ந்தாலும்
வீதி வழியே கடந்துசெல்கின்ற பூக்காரனைப்போன்ற
எத்தனையோ நபர்களை நாம் மறந்துவிடுகிறோம்.
வாடியது அவர்கள் உடலும் மனமுமாக இருக்கலாம்
ஆனால் துளிர்க்கிறது அவர்கள் உழைப்பு எனும்
பாதை அந்தப்பூக்கள் வழியாக.

-வாழ்த்துக்கள் உங்கள் வாசகர்களில் ஒருவன்-
Title: Re: பூக்காரன்...
Post by: Maran on October 24, 2016, 04:20:24 PM



தோழி இனியா... உங்களின் அன்பு மழையில் நனைந்தேன், மகிழ்ச்சி, மிக்க நன்றி.




நண்பா அனோத்... ரசனையுடன் கருத்திட்டு என்னை உற்சாகத்தில் ஆழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. உங்கள் ஆதரவில் மிக்க மகிழ்ச்சி.



Title: Re: பூக்காரன்...
Post by: GuruTN on October 25, 2016, 02:58:10 PM
கவிதை ஒன்றை நான் எழுத முயன்ற பொது ஏற்பட்ட தடுமாற்றத்தினாலும், சொற்களின் தேடுதலினாலும் நாம் நேசிக்கும் நம் தாய் மொழியில் ஒரு வரி எழுத இவ்வளவு சிந்தனையும் நேரமும் தேவை படுகின்றதே என்று வியந்தே போனேன். மறுமுறை ஒரு கவிதை எழுத கருதும் தோன்ற வில்லை, சொற்களும் பிடிபடவில்லை... பூக்காரன் வந்து போகும் ஓரிரு நிமிட வேளையில் நம்தம் சிந்தனைகளை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்... இது போன்ற தலைப்புகளை கருத்தில் கொண்டு வருவதே கடினமாக உள்ளது...

உங்கள் சிறந்த கவிதைகளை இங்க பதிவு செய்வதில்லை என்று அவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டீர்கள்... என்னை போன்ற தேடுதலும், ஆர்வமும் கொண்டோருக்கு, இது போன்ற கவிதைகள் கற்றுக்கொடுக்கும் கருத்துகள் ஏராளம்... ஒரு அன்பு வேண்டுகோள், இனி பகிர்ந்து கொள்ள யோசனைகள் வேண்டாம்.. அன்பு வாழ்த்துக்கள்...

-குரு
Title: Re: பூக்காரன்...
Post by: Maran on October 27, 2016, 03:08:23 AM




ரசித்துப் படித்து ரசமாக இருக்கிறதென்று கூறி மகிழ்வளித்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா குரு!

உங்கள் ஆதரவு வார்த்தைகளில் நான் மெய்மறந்தேன் நண்பா!!  :) மகிழ்ச்சி.  :)