FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 22, 2016, 11:16:53 PM
-
இடியாப்பம் சௌமீன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2FP1010759.jpg&hash=8685adce945f1291668b605bad59d46235fc6653)
எண்ணெய் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு,
சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
நீளமாக கீறிய பச்சைமிளகாய் – 4,
மெலிதாக நீளமாக நறுக்கிய
(வெங்காயம் – 1/2 கப்,
கேரட் – 1/2 கப்,
பீன்ஸ் – 1/2 கப்,
குடைமிளகாய் – 1/2 கப்,
கோஸ் – 1/2 கப்),
நீளமாக நறுக்கிய (வெங்காயத்தாள், லீக்ஸ்,
செலரி – தலா 2 கப்),
தயார் செய்த இடியாப்பம் – 10.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பாதி வெங்காயத்தாளை போட்டு வதக்கவும். பிங்க் கலர் வந்ததும் பச்சைமிளகாய், காய்கறிகள், பாதி அளவு லீக்ஸ் மற்றும் செலரி, உப்பு, சோயா சாஸ் முதலியவேகளைக் கலந்து மூடி வைக்கவும். நன்கு வெந்த பின் இடியாப்பம் கலந்து மீதி லீக்ஸ் மற்றும் செலரி, வெங்காயத்தாள் கலந்து சுடச்சுட பரிமாறவும். தேவைப்பட்டால் சில்லி சாஸுடன் பரிமாறலாம்.