FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 22, 2016, 11:02:34 PM
-
ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு இட்லி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2Furu.jpg&hash=29dee6b9c2262bf8e0bfc975e8d93c8d081eb352)
இட்லி மாவு – 1 கப்,
உருளைக்கிழங்கு – 1,
நீளமாக நறுக்கிய வெங்காயம் – 1,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க…
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 3,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 4-5 நிமிடம் வேகவைத்து, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். இட்லி தட்டில் எண்ணெயை தடவி, 1/4 கரண்டி மாவை ஊற்றி, 1 டீஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலா வைத்து,மேலே 1/4 கரண்டி மாவு ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.