(https://s14.postimg.org/rsgx7y77l/imageedit_1_8780250493.jpg)
பிறந்தோம் ஒருதாய்ப் பிள்ளைகளாய்,
வளர்ந்தோம் நகமும் சதையுமாய்,
ஒரே வளர்ச்சி.... ஒரே வாழ்க்கை..........
தாயின் அன்பு பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
தந்தையின் ஊக்கம் தடையின்றிப் பயணிக்கிறது.
என் முகமறிந்து சொல்லும் உன் விழிகள்
தாயிடம் தம்பியவன் என் உணர்வுகளை.
உனக்கே உரித்தான அன்பைப்
பகிர்ந்தெடுக்க பிறந்துவிட்டேனோ !
செல்லமாக என்னை பார்க்கையில்
மௌனமாயிருந்து விடுகிறாய்.
சிறார்களுடன் சிறுவனாய் மாறுகையில்
உணர்ந்துவிடுகிறாய் இவனும் சிறுவன் என்று.
உனக்குள் எத்தனையோ உணர்வுகள்.
சரியான பாதையை நீ தாண்டி வந்ததனால் தான்
இன்று நானும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப்பெற
முடிகிறது. வழிகாட்டியாய் செல்லும் உன் மௌனத்தில்
உருவாக்கிவிடுகிறாய் வாழ்க்கை எனும் படிக்கட்டுகளை
நான் இலகுவாகக் கடந்து செல்ல.
(https://s11.postimg.org/c1ubmzxyr/Untitled.png)