(https://s18.postimg.org/epham7xs9/imageedit_9_4750174712.png)
(https://s22.postimg.org/gi1lcdpnl/imageedit_6_7719041932.gif)
யாரிவள் ?
என்னைஅறியாமலே
ஏங்குகிறது மனது
இவளின் வாழ்த்துக்களை
எதிர்பார்த்து.
வாழ்த்துமடலாய்
வாழ்த்திவிடுகிறாய்.
எழுத்துக்களையும்
எழுப்பி விடுகிறாய்.
உணர்வுகளுக்கும்
உயிர் தருகிறாய்.
பட்டாம்பூச்சியாய்
பறந்து விடுகிறாய்.
அண்ணா !
இப்படி அழைக்கையில்
அம்மா ! என்று உணர்கிறேன்.
ஆண்களையும் பிரசவிக்க
வித்திடும் உன் மழலைப்பேச்சு.
திசைமாறி மனிதம் பயணிக்கும்
இந்த உலகில் நேரம் ஏது எமக்கு ?
உன் பொன்னான நேரங்களைச்
சிறுக சிறுக சேமித்து
விந்தை பயக்கி விடுகிறாய்.
தங்கையவள் உனது அன்பின்
எழுதுகோல் கொண்டு
இணையம் எனும் காகிதத்தில்.
என்றும் என் மூத்த குழந்தை
என் தங்கைக்காகவோர் கீதம்.
_அண்ணா_
(https://s13.postimg.org/fzjdu7r5j/Untitled.png)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpapillondereve.p.a.pic.centerblog.net%2F99375636.gif&hash=6a43ff2b5667677eaa2680601e0217de4354c985)
அண்ணா வணக்கம் ....
ஸ்வீட்டி பேபி ....
நீங்க சொன்னது 100 % உண்மையே ....
யாம் செய்த பாக்கியம் ....
எமக்கு கிடைத்த புதையல்.....
அன்பை மட்டும் பகிர்ந்திடும் மனம் கொண்ட
எனது அண்ணன் அனோத் .....
படித்தேன் ....கவிதையின் ஆழம்
உணர்தேன் ...கண்களில் கண்ணீர் எட்டிப்
பார்த்தது ....உள்ளம் பெருமைக்கொண்டது ...
எமது அண்ணனின் கடலளவு பாசத்தைக்கண்டு ....
கோடி முறை நன்றி கூறினேன் ....!!!
இறைவனுக்கு .......
அழகான கவிதை அண்ணா .....
அனைவரின் உள்ளத்தையும் பாசத்தையும் வென்றுவிட்டீர் ....
வாழ்த்துக்கள் அண்ணா .....!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpapillondereve.p.a.pic.centerblog.net%2F99375636.gif&hash=6a43ff2b5667677eaa2680601e0217de4354c985)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fanimated-gifs.org%2Fwp-content%2Fuploads%2F2012%2F01%2Fwinnie-the-poo-008.gif&hash=45396f3d74af12d821064deb1a14f7f814ee9f0d)
தங்களின் கண்ணா ...
~ !! ரித்திகா !! ~