(https://s16.postimg.org/svfwg23j9/imageedit_17_4296713419.gif)
மகிழ்ச்சியான இந்நாளில்
ஆட்டம் , பாட்டம் ,
கொண்டாட்டம்.
இவைகளுக்கு
மத்தியில் எங்கேயோ
கேட்கும் குரலின்
உணர்வை நாமும் உணரலாம்
வாருங்கள் தோழர்களே !என்ன சத்தம் ?
என்றுமில்லாக் கொண்டாட்டம் ?
கோவில் மணியோசை கேட்க.
சிறுவர்களின் ஓட்டமும் நிலத்தை அதிரவைக்க
பட்டாசுக்கள் வானுயர்ந்து செல்ல
சகோதரர்கள் வீதி வீதியாய்
துவிச்சக்கர வண்டியில்
சாகசம் காட்டிட,
சகோதரிகள் வீடு வீடாக
இனிப்பு அளித்து இன்பம் கொள்ள.
தாத்தாக்களும் பாட்டிமாரும்
ஆசீர்வதித்திட,
இப்படி எங்கும் மகிழ்ச்சி.
இன்று.........
திரையரங்குகள் திணறிப்போகும்...
பறவைகள் பதறி ஓடும்...
புத்தாடைகள் புதுமை செய்யும்...
கடல் அலையைக்காண கூட்டம்
அலை மோதும்.
இவ்வாறு எங்கும் உற்சாகமிக்க
சமூகத்தின் மகிழ்ச்சியை
இன்று என்னால் உணர்ந்திட முடிகிறது.
இந்த தருணத்தில் என் மனதோ.....
ஏங்குகிறது மாற்றத்தை விரும்ப,
தவிக்கிறது வாய்விட்டு சிரிக்க,
ஆனால் என் நிழலின்
மடி சாய்ந்து ஆதரவற்று நிற்கின்றேன்
சூழ்நிலையில் சிக்கிய அநாதை என்பதால்.
நான் வேண்டிக்கொள்வது
இவைகள் தான்
கதிரவன் ஓய்ந்து விடாதீர்கள்
பறவைகள் அச்சம் கொள்ளாதீர்கள்
அனைவரும் இவ்வாறே உறைந்துவிடுங்கள்.
இந்த நொடியை இரசித்திட
அன்னை, தந்தை , பிள்ளைகள்
இவ்வாறு அழகிய காட்சியை
கண்டிட.
புத்தாடைகள் வாசனை
இனிப்பின் சுவை
இவைகளை உணர்ந்திட
எனக்கும் இந்த நாளை
பார்த்துக்கொண்டிருக்கும்
வாய்ப்பை எண்ணி
வேண்டிக்கொள்கிறேன்
நன்றி
என் நாளை புதுமை ஆக்கிய
தீபாவளி திருநாளுக்கு. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
கோகுல கண்ணனோ ..
குழலிசையின் மைந்தனோ..
அசுரனை வதம் செய்தவரோ...
வெற்றி நாயகன் கிருஷ்ணரோ..
தீயவனின் விண்ணப்பத்தால்...
தீப ஒளி .. தீபாவளி ..
வெற்றி வாகை சூடி ..
வாழ்த்தினர் பலர்..
சகோதிரி வீட்டுக்கு செல்ல..
எண்ணெய் குளியல்..
இனிப்பு வழங்கி..
திருநாளை கொண்டாடினர்...
முன்னோர்கள் காட்டிய..
எண்ணெய் குளியல்..
புத்தாடை அணிந்து ,
பிரார்த்தனை முடித்து ..
இன்பமாய் தொடங்கிற்று
தாத்தா பாட்டி
பெற்றோர்கள் ஆசிர்வதிக்க..
கூப்பிட்டார் தாத்தா
புன்னைகையும் பரிசுமாய்....
அப்பா சிறிய
உறையில் பணம் ..
அம்மா செல்லமாய்
ஒரு முத்தம்..
ஒற்றைக்கண் திறந்தால்..
பட்டாசு , மத்தாப்பு ..
கனவில் மிதந்தேன் ..
சொக்கி விழுந்தேன்.
நண்பன் தூங்க...
எப்போது வந்தாய்
கேட்டன கண்கள்..
இப்போதுதான் தோழா ..
மழைச்சாரலில் பயணம்..
தோழர் தோழியர்
வீட்டிக்கு சென்றோம்..
பலவிதமான இனிப்பு,
முறுக்கு அதிரசம்..
பரிசுகளும் பட்டாசுமாய்
பெரியப்பா வந்தார்...
கண்முன்னே மிதக்க.
மின்னிற்று கண்ணில்...
என் எண்ணமோ
பட்டாசு மத்தாப்பு ..
தேடினேன் தேடினேன்
எங்கும் காணோம் ..
பகல் இரவாய்
மாற சில நிமிடங்கள்...
வந்தது இரவு..
மகிழ்ந்தது மனம்..
பட்டாசா மத்தாப்பா..
இரண்டையும் வெடித்தேன்..
இரவின் மேகங்களுக்கு
நடுவே மின்னியது..
பட்டாசும் மத்தாப்பும்..
தீப ஒளி தீபாவளியில்..
சந்தோசமாய் ஆனந்தமாய்..
இன்பமாய் முடிந்தது..
FTC குடும்பத்தினருக்கு தீப ஒளி வாழ்த்துக்கள்...
பச்சரிசி பதமா ஊறவைச்சி
இடிச்சி சலிச்சி எடுத்துவச்சி
சர்க்கரை பாகுவச்சி
பலகாரம் சுட்டகாலம்
மலையேறி போயாச்சு ...
அத்த மக்கா மாமா மக்கானு
ஒரே மல்லு துணி எடுத்து
ஆளுக்கு ஒரு சோடி
தச்சு போட்ட காலம்
மலையேறி போயாச்சு ....
ஒத்தால் ஓரகத்தி ஒண்ணாசேர்ந்து
நோன்பெடுத்து படையல் போட்டு
எல்லார்க்கும் பந்திவச்ச காலம்
மலையேறி போயாச்சு ....
சீயான் கொடுத்த அஞ்சுக்கே
இரு கை (இருக்கை )கொள்ளாத வெடிவாங்கி
இளவட்டங்கள் வெடிச்ச காலம்
மலையேறி போயாச்சு ..
.
பொறிக்க ,அரைக்க வகையா
இயந்திரம் இருந்தும் அடியெடுத்து
வைக்க அலுப்பா இருக்குனு இப்போ
தொலைக்காட்சியில் மூழ்கிபோயாச்சு ..
அண்டையில யார் இருக்கா
தெரியாது யாரென்றே
பலகாரம் பலசெய்து
யாருக்கு நான்கொடுக்க...
என்ற நினைப்பு இப்போ வந்தாச்சு ..
பலகார கடையில
தலைக்கு ஒண்ணுனு
கணக்கு போட்டு வாங்கி வந்து
சாமிக்கு படைச்சிட்டு
வீட்டுஆசாமி சாப்பிடவா தீபாவளி ..
கொசுவலய பிரிச்சு தச்சு
நித்தம் ஒரு பேரு வச்சி
விலையை கொஞ்சம் ஏத்திவச்சி
தலைவன் நெஞ்சடைச்சி போகவா தீபாவளி...
மதம் சாராமல் மகிழ்ச்சிக்குனு
சொல்லியே ஓசோனின் ஓட்டையை
தன் பங்கிற்காக பெருசாக்கவோ
இந்த தீபாவளி ...
பொழுது போக்க நாலுபடம் வந்துருக்கு
தலைவன் படம் அதிலொன்னு
சாமிக்கும் பிள்ளைக்கும் வாங்காத பாலை
கட்டவுட்டுக்கு ஊத்த அணிவகுத்து
நிற்கும் அம்மாஞ்சியை பார்க்கவோ இந்த தீபாவளி ....
இந்த வெட்டி செலவை காண்கையிலே
மன்னித்தே விட்டுருக்கலாம்
கடவுள் நரகாசூரனை என்று
முனகும் மூத்ததலைமுறை .....