FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 15, 2016, 03:03:31 PM

Title: முரண்களால் ஆனது உலகம்
Post by: thamilan on October 15, 2016, 03:03:31 PM
ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை
நல்லதை நாம் அறிய
தீமை என்று ஒன்றிருக்க வேண்டும்

துன்பம் என்று ஒன்றில்லாவிட்டால்
இன்பத்தை நாம் எப்படி உணர்வது
இன்பத்தின் சுவை
துன்பத்தால் அறியப்படுகிறது
வெளிச்சத்தின் ஒளி
இருளால் அறியப்படுகிறது

எதிரும் புதிரும்
ஒன்றானதே உலகம்
இரவும் பகலும் ஒன்றினையும் போது
நாள் பிறக்கிறத்து
எதிரும் நேரும் ஒன்றினையும் போது
மின்சாரம் பிறக்கிறது
கருப்பும் வெள்ளையும் ஒன்றினையும் போது
ஓவியம் பிறக்கிறது
ஆணும் பெண்ணும் ஒன்றினையும் போது
குடும்பம் பிறக்கிறது
 
தொடக்கம் என்று ஒன்றிருந்தால் தான்
முடிவு என்று ஒன்றிருக்கும்
பிறப்பு என்று ஒன்றிருந்தால் தான்
இறப்பு என்று ஒன்றிருக்கும்
விழிப்புக்கு சக்தியை ஊட்டத்தான்
உறக்கம் வருகிறது

வாழ்க்கைக்கு ஆர்வம்  ஊட்டத்தான்
மரணம் 
வாலிபத்தை அனுபவிக்கத்தான்
வயோதிபம்
நிழலின் அருமை தெரியத்தான்
வெயில்
பிறப்பின் மேன்மை அறியத்தான் 
இறப்பு
உடலின் ஆரோக்கியத்தை உணர்த்தத்தான்
நோய்
விடுதலையின் ஆனந்தத்தை உணர்த்துவது
அடிமைத்தனம்

பரத்தை தான்
பத்தினியின் மேன்மையை உணர்த்துகிறாள்

முட்டாள் தான்
அறிஞனின் உயர்வுக்கு காரணம்
இருள் தான்
நட்சத்திரங்களை பிரகாசிக்க செய்கின்றன
நரகம் தான்
சொர்கத்தின் மேன்மையை அர்த்தப்படுத்துகிறது

முரண்களால் ஆனதே உலகம்
ஒன்றில்லாவிட்டால்
மற்றது இல்லை

Title: Re: முரண்களால் ஆனது உலகம்
Post by: AnoTH on October 22, 2016, 01:44:12 PM
எந்த ஒரு பின்னணிக்கும் ஓர் காரணமிருக்கும்.
அவை பெரும்பாலும் முரண்களால் உருவான
காரணங்களாகவே திகழ்கின்றது.
உங்களின் ஒவ்வொரு கவிதையிலும்
ஒரு சிறந்த சிந்தனையையும்
தனித்துவத்தன்மையையும்
என்னால் உணர்ந்துவிட முடிகிறது
அனைத்து  வரிகளுமே பிடித்த காரணத்தினால்
சுட்டிக்காட்ட இயலவில்லை வாழ்த்துக்கள்
இனிய சகோதரன் தமிழன்.
Title: Re: முரண்களால் ஆனது உலகம்
Post by: SweeTie on October 22, 2016, 07:52:06 PM
எதிரும் புதிருமாய்  ஒரு கவிதை.  வாலிபத்தை அனுபவிக்கத்தான்
மரணம் ..
.. வாலிபத்தை  அனுபவிக்கத்தான்  ஒரு வயோதிபம்  என்பதுதான்  பொருத்தம்.   கவிதை சிறப்பு.   கருப்பு புள்ளி வேண்டாமே. ....வாழ்த்துக்கள்.
Title: Re: முரண்களால் ஆனது உலகம்
Post by: thamilan on October 23, 2016, 05:17:45 PM
ஸ்வீட்டி
தவறை சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. நான் note book ல இந்த கவிதையை எழுதுறப்போ வயோதிபம் என்று தான் எழுதி இருக்கிறேன். இங்க type பண்ணுறப்போ தவறி விட்டேன்


ANOTH சகோதரா
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி
Title: Re: முரண்களால் ஆனது உலகம்
Post by: ரித்திகா on October 24, 2016, 09:44:08 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmbiz.qpic.cn%2Fmmbiz%2FkqiaX6bFJJwbWWasWQlAVDUGp9qpnU7FSIfFKykib13Y8lCNcj9bdiaz20ZrFHibXnbDH07YPJmyrG9Y3QFFlZ1TYQ%2F0&hash=a20262ffef9518db78cbfd7c1a24a7ed9adee456)

வணக்கம் தமிழன் ....
 
அழகான படைப்பு ....
வரிகள் அனைத்தையும் ரசித்தேப்  படித்தேன் ....!!!
கவிப்பயணம் தொடரட்டும் !!!
வாழ்த்துக்கள் ....நன்றி ....!!!!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmbiz.qpic.cn%2Fmmbiz%2FkqiaX6bFJJwbWWasWQlAVDUGp9qpnU7FSIfFKykib13Y8lCNcj9bdiaz20ZrFHibXnbDH07YPJmyrG9Y3QFFlZ1TYQ%2F0&hash=a20262ffef9518db78cbfd7c1a24a7ed9adee456)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.silvitablanco.com.ar%2Fwinnie_pooh%2Fwinnie_pooh_12%2Fgif020.gif&hash=fa2a963bf9056617b5b52a9f5973f2ac98bc8760)
~ !! ரித்திகா !! ~