FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 14, 2016, 09:40:12 PM

Title: ~ சேமியா பிரியாணி ~
Post by: MysteRy on October 14, 2016, 09:40:12 PM
சேமியா பிரியாணி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FFOOD%2FSemiya-Biriyani-Veg-tamil.jpg&hash=41afd53a538b5d60d38bfc9427273cd048ec5876)

தேவையான பொருட்கள்:

சேமியா – 1 பாக்கெட் (வேக வைத்தது)
பீன்ஸ் – 5 (நறுக்கியது)
கேரட் – 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)
காலிஃப்ளவர் – சிறிது
பச்சை பட்டாணி – 1/4 கப்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 4-5 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
பட்டை – 2
பிரியாணி இலை – 1

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் காலிஃப்ளவர், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயமானது நன்கு வதங்கியதும், அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் அனைத்து காய்கறிகளையும், அத்துடன் ஊற வைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து, மசாலாவுடன் காய்கறிகள் ஒன்றுசேர பிரட்டி, 10 நிமிடம் மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
பின்பு கொத்தமல்லி மற்றும் புதினாவையும் சேர்த்து வதக்கி, அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு, தயிர் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் அதில் வேக வைத்துள்ள சேமியாவை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சேமியா பிரியாணி ரெடி!!!