FTC Forum
Entertainment => Love & Love Only => Topic started by: RemO on February 03, 2012, 10:58:55 PM
-
மனதில் உள்ள காதலை சொல்லாமல் காதலிப்பது கருவை சுமப்பதற்கு சமம். தேர்வு எழுதினால் தோற்றுப்போய் விடுவோமோ என்ற அச்சத்தினாலேயே எத்தனையோ பேர் தேர்வையே ஒத்திப் போட்டு விடுகின்றனர். ஆனால் எத்தனை நாள்தான் கருவை சுமந்துகொண்டிருப்பது. ஒருநாள் பிரசவித்துதானே ஆகவேண்டும். சரியான தருணத்தில் சரியாக சொல்லப்படுகின்ற காதல் மட்டுமே வெற்றி பெருகின்றன என்கின்றனர் எக்ஸ்பர்ட்டுகள்.
காதலை சொல்லும் தருணம்
காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல் தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக காதலை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிகரமாக்க முடியும்.
காதலை உறுதிப்படுத்துங்கள்
நாம் காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோமா? என்பது முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.
நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.
அப்பொழுது உங்களுக்குப் பிடித்த விசயத்தைக் கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகி விடும்.
நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. காதலை சொல்வதிலும் கூட ஒரு கவித்துவம் இருக்கவேண்டும். 14 ரோஜாப் பூக்களைக் கொண்ட ஒரு பூங்கொத்து தயாரித்திடுங்கள் பின்னர் அதை உங்கள் மனம் கவர்ந்தவருக்கு கொடுத்திடுங்கள். (பிப்ரவரி 14 காதலர் தினமில்லையா.. அதனால்தான் இந்த 14 ரோஜாக் கணக்கு)
மெழுகுவர்த்தி ஒளியில் இரவு விருந்து
மனங்கவர்ந்தவரோடு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். மெல்லிய விளக்கொளியில் அமர்ந்து உணவு அருந்தும் தருணத்தில் அழகாய் தயாரித்த வாழ்த்து அட்டையை ரோஜாப்பூவோடு கையில் கொடுங்கள்.
கேக் பாக்ஸில் காதல் வரிகள்
உங்களவருக்கு கேக் பிடிக்கும் என்றால் விசயம் ரொம்ப எளிதாகிவிட்டது. அழகாய் ஒரு கேக் ஆர்டர் செய்யுங்கள். உங்கள் விருப்பத்தை கவிதையாய் வடித்து அந்த பெட்டியில் வைத்து இனிப்போடு தெரிவியுங்கள் உங்கள் காதலை.
அழகான மோதிரம்
இளம் மாலை நேரத்தில் பூக்கள் அடர்ந்த சோலையில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அழகான ஒரு மோதிரம் பரிசளியுங்கள். அது அவருக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக அணிந்துகொள்வார்.
மந்திர வாழ்த்து
நேரில் சொல்ல கூச்சமாகவோ, அச்சமாகவோ இருக்கிறதா கவலை வேண்டாம். இசை கார்டு வாங்கி பரிசளியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கலாம். இரவுப் பொழுதில் யாருக்கும் தெரியாமல் அதை பிரிக்கச் சொல்லலாம். உங்களவர் அந்த கார்டை பிரிக்கும் போது ஐ லவ் யூ என்ற வார்த்தைகள் ஒலிக்கட்டும். அது உங்களின் நேசத்தை அவருக்கு உணர்த்தும். அப்புறம் பாருங்கள் உங்களுக்கான காதல் நேரம் தொடங்கிவிட்டது.