ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 121
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F121.jpg&hash=f3fbf5a0dde8ce91688149314b3bfa5816b05688)
சுயநலம் மேலோங்க இதயம் சுருங்கி
தன் வருவாய் பெருக்க
தான்தோன்றியாய் வாழ்வோரை
கண்கூடாக காணும் போதும்
சில மனித நேயமிக்க சகிப்புத்தன்மை
கொண்ட இதயங்களை எல்லா இடத்திலும்
இன்றும் காண்கையில் அவர்களது
செயல்களில்அன்னை
தெரசாவை காண்கிறேன் ....!
ஊதியம் குறைவு என்றாலும்
அதில் நிறைவு கண்டு வாழ
பழகி குடும்பம் விட்டு பிரிந்து
என்னேரமும் தனக்கும் ஏதும்
ஆபத்து நிகழலாம் என்று அறிந்தே
அழைத்தால் போதும் நான் நிற்பேன் அங்கு
துணிச்சலாய் தேவை அறிந்து
தீர்வு காணும் அவனும் என் நண்பனே ....!
அண்டை வீடு பிள்ளை கொஞ்சம்
அசூயையாய் இருந்தாலே
அள்ளி அணைக்க தயங்கும் இதயங்கள் பல
அனைவருக்கும் கருணை இருக்கு ,
எழுத்து பேச்சு வடிவில். ஆனால்
செயலில் இறங்குபவர் சிலர் மட்டுமே
யார் வீடு பிள்ளையோ, ஆணோ; பெண்ணோ
ஆபத்து என்றால் அவனை பொறுத்த வரை அது ஒரு உயிர்
அது காக்கும் பொருட்டு போராடும்
ஒவ்வொருவரும் நிஜ கதாநாயகனே ..!
நாட்டு மக்களுக்காக உழைக்க
பல பணிகள் இருந்தாலும்
அதிகார துஷ்பிரயோகம்
இல்லாத, மனிதனுக்காக மட்டுமின்றி
அனைத்து ஜீவராசிகளுக்குமாய்
இயற்கை தாண்டவம் ஆடும் போதும்
தீவிர வாதத்தின் காட்டு மிராண்டி
தனத்தினாலும் நடக்கும் கொடுமைகளில்
மக்களை காக்கும் பொருட்டு
இன்னுயிர் துறந்த பலரும்
தியாகத்தின் திரு உருவே ...!