FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 07, 2016, 11:56:04 PM

Title: உன் ஞாபக நதிக்கரையில்
Post by: thamilan on October 07, 2016, 11:56:04 PM
இனியவளே
உன் ஞாபக நதிக்கரையில்
நடந்து போகிறேன்.....

நினைவுத் தூறல்கள்
என்நெஞ்சில் விழுகின்றன..........

கடலை அந்த
அந்திவானம் முத்தமிட முனைகின்ற
மாலைப்பொழுது........

தொலைபேசி சிணுங்கியது
சந்திக்க வேண்டும் என்கிறாய்
சிந்திக்காமல் நானும்
சந்தோசமாய்
சரி என்றேன்........

கடற்கரைக்கு வரச்  சொல்கிறாய்
அண்ணா சமாதிக்கு அருகில்
காத்திருக்கச் சொல்கிறாய்.......

"எதையும் தாங்கும் இதயம்
இங்கே உறங்குகின்றது"
வாசகம் என்னை வாசிக்கிறது.......

  நேசிக்கிறவளை பற்றி
யோசிக்கிற பொழுது
பின்னால் இருந்து
தலையை தடவிக் கொடுக்கின்றன
உன் மயில் இறகு விரல்கள்........

"வந்து நீண்ட நேரம்
ஆகிவிட்டதா"

காத்திருப்பது சுமையல்ல
சுகம் என்றேன் .......

அவசரமாக
கொஞ்சம் அலட்சியமாக
என் விரல் பற்றி நடக்கிறாய் .........

நான் கடந்து போவது
கூட தெரியாமல்
காதல் பரிட்சையை
காப்பியடிக்காமல் எழுதிப்  பார்க்கும்
நவீன ஆதாம் ஏவாள்களுக்கிடையில்
கடற்கரை மணலில்   
எதிரெதிரே அமர்கிறோம் நாம்…..

முகம் பார்க்கிறாய்
மூச்சிக் காற்று
என் முகம் சுடுகிறது.......

விழிகளால் விசாரிக்கிறேன்

திருமணத்துக்கு
தேதி குறித்துவிட்டதாகச் சொல்கிறாய்
வேறு ஒருவனுடன்.....

இறப்புக்கு நாள் குறிப்பது
எனக்கு மட்டுமாகத்தான் இருக்கும்
என்றேன் நான்.......

நீ காதலை
நட்பாக்க முயட்சிக்கிறாய்........

கல்லறைக்கு வரச் சொன்னது
எனது காதலுக்கு
கல்லறை கட்டத்தானா ?!!!!!!!!
என்கிறேன்

நீ
மெளனித்திருக்கிறாய்........

அமிலம் விழுந்தது போல
என் கண்களில்
வெப்ப நீரோட்டம்........

உன் நிழல்
என்னைத் தொடுகிறது ......

கண்துடைத்துப் பார்க்கிறேன்

தூரத்தில் நீ
துயரத்தில் நான்........

நடந்தது  செல்கிறாய்
என்னை விட்டு வெகுதூரம்
கடந்து செல்கிறாய்........

நான்
கடற்கரை மணலை
கையில் அள்ளி என்னும் முயற்சியில்
தோற்றுப் போனேன்
என் காதலைப் போலவே......
 
Title: Re: உன் ஞாபக நதிக்கரையில்
Post by: LoLiTa on October 08, 2016, 09:52:42 AM
Tamil super super!! Kavinyane!
Title: Re: உன் ஞாபக நதிக்கரையில்
Post by: Maran on October 08, 2016, 11:28:14 AM


என்ன தமிழன் நண்பா!! கடைசில உங்களை மண்ண அள்ள விட்டுட்டாங்க னு சொல்லவரீங்க போல...  :)  :)

காற்றில் பிறக்கும் கீதம்
என் இதயத்தில் பிறக்கும்
உன் ராகம்.!!
உனக்காகவே நானும்
வாழ்ந்திடுவேனே
என்னாலும்..!!
என்று பாட்டுப் பாடிடுப் போக வேண்டியதான்.  :)  ;)
சும்மா நகைச்சுவைக்காக சொன்னேன்.  :P  :)



காயங்களை ஆற்றும் சக்தி காலத்திற்கு இருந்தாலும், அதன் வடுக்கள் வலியை ஞாபகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.  :)


Title: Re: உன் ஞாபக நதிக்கரையில்
Post by: EmiNeM on October 08, 2016, 05:23:11 PM
இதயம் பாரமாகி போனது ...
Title: Re: உன் ஞாபக நதிக்கரையில்
Post by: thamilan on October 08, 2016, 05:49:07 PM
EMI மச்சி இன்னொரு பெண்ணை காதலிச்சா பாரம் நீங்கி இதயம் லேசாகிடும் .

மாறன் நண்பா மண்ண எண்ண விட்டதோட  சந்தோசப்படுவோம் . விட்ட பொண்ணுங்க திங்கவும் வச்சிடுவாங்க


Lolita நன்றி அம்மணி