FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ~DhiYa~ on October 05, 2016, 01:00:32 PM

Title: நட்பு
Post by: ~DhiYa~ on October 05, 2016, 01:00:32 PM
அன்பென்ற சொல்லுக்கு
அர்த்தம் கொடுத்தாய்
அழியாத நினைவுகளை
அள்ளிக்கொடுத்தாய்!!
 
அழிந்த அதிசயங்கள்
இவுலகில் பல உண்டு
அழியாத அதிசயமாய்
நீயே வந்தாய் !!

வலிகளை தாங்க
வழி சொல்லி கொடுத்தாய்
ஆனால் என் விழிகளுக்கு தெரியவில்லை
உன் பிரிவின் வலிகளை தாங்கிக்கொள்ள....

அன்பென்ற நூலை
ஆழமாக தைத்துவிட்டாய்
என் இதயத்தில்
நீ பிரிந்தால் பிரிவது நூல் அல்ல
என் இன்னுயிர்த்தானே...
என்னுயிர் நண்பா.!!! .!!!   (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F8jrD35X.jpg&hash=d56f54949d2b67cc56300cbe5bf7e25a6c38fddc) (http://www.freeimagehosting.net/commercial-photography/)    (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FR1pUKCp.gif&hash=aab387e4b95b7a23e73302152688c4faebdd4b3b) (http://www.freeimagehosting.net/commercial-photography/)    ~DHIYA~
Title: Re: நட்பு
Post by: இணையத்தமிழன் on October 05, 2016, 01:50:46 PM
உன் நட்பை கண்டு நானும் பொறாமை கொண்டேன் உன் நண்பன் மீது
Title: Re: நட்பு
Post by: Maran on October 05, 2016, 07:40:38 PM


கண்ணீரின்  மதிப்பை அறியாத  காதலின் மத்தியில் துடைத்து செல்லும் நட்பு வரம்!!



அழகான கவிதை தோழி தியா...  :)

மிக எளிமையாய் சொல்லிவிட்டீர்கள்  தோழி... அடிக்கடி சண்டை போட்டு பிரிந்து அந்த உறவே சகித்து போய் இருந்த போதிலும், நிரந்தர பிரிவை மட்டும் எதிர் பார்க்காத நட்பு ஒரு வரமே..!!




எதையும் எதிர் பார்க்காமல் ஒரு நட்பு வந்தால் இது கடைசி வரை நீடிக்குமா என்று பயம் மட்டும் தான் வருது...  :)  :)


Title: Re: நட்பு
Post by: EmiNeM on October 08, 2016, 05:57:25 PM
Beautiful touch.. Keep writing.