FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 02, 2016, 11:06:21 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: Forum on October 02, 2016, 11:06:21 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 120
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F120.jpg&hash=1fbaf3a56d19da0f40d4101ac61a987da4907c96)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: ரித்திகா on October 02, 2016, 02:02:07 PM
வண்ண வண்ண விளக்குகள்
கண்களைக் கூசச்செய்ய ....
அங்கும் இங்கும் கூடாரங்கள்
அமைத்திருக்க ....

மழலைகள் நண்பர்கள் உறவினர்கள்
என கூட்டங்கள் அலைமோத ....
சின்னஞ்சிறு குழந்தைகள் ஹே ஆஹ்
என கூச்சலிட்டு அங்கும் இங்கும்
ஓடி பிடித்து விளையாடிட  .......

வானத்தை தொட்டு நிற்கிறதா என்ற
சிறு சந்தேகத்தில் அண்ணாந்துப்  பார்க்க
பளிச்சிடும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு
நான்தான் ராஜா என்பது போல் கம்பிரமாக
நிற்கும் ரங்கராட்டினம் ......

சிரிப்பொலிகளும் பேச்சுக்குரல்களும்
அவ்விடமே சந்தோஷ மிகுதியில்
மிதந்துக்  கொண்டிருக்க ...
இவை அனைத்தையும்
இமைக்க மறந்து பார்க்கும்
என் இரு விழிகள் ....

வயதால் வளர்ந்தாலும்
மழலை குறும்புகளைச் செய்ய
மனதில் ஏக்கங்கள் நிறைந்திருக்க
என் மனமோ ஆயாசமாக
பெருமூச்சு எடுத்து விட ....
ஒரு நிமிடம் கண்களை
மூடித்திறக்க ...இதுவும்
கடந்து போகுமென்ற எண்ணம் ....

எது கடந்தால் என்ன ??
கடக்கவிட்டால் என்ன ??
வயதால் வளர்ந்தால் என்ன ??
துள்ளி ஓடும் குழந்தையாக
மாறிடு ...ஓடி  விளையாடிடு
என்று மனம் குரங்கு பிடியாய் இருக்க ....
மனதிற்கே அடிபணிந்தேன் ....
முகமெங்கும் புன்னகை மலர்ந்தேன்
குறும்பு மிக்க சிறுமியாக மாறினேன் ...
ஓடினேன் ஆடினேன் ....

சில பார்வைகளும் வாய்களும்
கேலி பேசத்தான் செய்தது ....
யார் பார்த்தல் என்ன ...
பேசினால் என்ன ....
பேசும் வாய் பேசத்தான் செய்யும்
அதைக் கண்டு அஞ்சுபவள் நான் இல்லை ...

பிறந்து வளர்ந்து இத்தனை வருடங்களில்
எதோ ஒன்றைத் தொலைத்தேனே
என்று நான் தேடியத்  தேடலுக்கு
விடை கிடைத்தது ...
என் மனம் சாந்தமும் கொண்டது ...

மழலைப் பருவம்
கிடைக்கப் பெறாத வரம் ....
வயதால் வளர்ந்தாலும்
மனத்தால் குழந்தையாகவே
இருந்திட வேண்டும் ....
ஆசைத்திற ராட்டினம் ஏறி
சந்தோஷமாக விளையாடிட வேண்டும்   

குறும்பு சிரிப்புடன்
விடைபெறுகிறேன்
நான் தோழி
~ !! ரித்திகா !! ~

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: thamilan on October 02, 2016, 05:09:33 PM
திருவிழா வந்திருச்சி
தூங்கும் குழந்தை மிரண்டு எழும்பும் அலறலில்………..
ஒருவர் பேசுறது
மற்றவருக்கு கேட்காத வகையில்…………..   
எந்த ஒலிபெருக்கியில்
என்ன பாட்டு  போகுது என்று புரியாத அளவுக்கு………..
வீதியெங்கும் ஒலிபெருக்கிகள்

வண்ண விளக்குகள் கண்சிமிட்டும்
வாணவேடிக்கை கலகலக்கும்
பஞ்சுமிட்டாய்காரன் தொடக்கம்
பலூன்காரன் வரை
வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும் 

குழந்தைகள் குதூகலத்துக்கு அளவே இல்லை
குமரிகள் கூட்டத்துக்கும் குறைவே இல்லை
பலப்பல நிற தாவணிகளில் 
தலைமுழுவதும் பூந்தோட்டங்களாக
பருவ மங்கைகள்
பூக்கைளை சுற்றும் வண்டுகளாக
மீசை முளைத்து பாதியும்
முளைக்காமல் பாதியுமாக
கட்டிளம் காளையர்கள்

சிநேகிதர்களுடன் பேசி சிரிப்பது போல
பார்வையால் கதை பேசும்
காதலர் கூட்டங்கள் ஒரு புறம்
படிய மாட்டாளா  என
காதல் கணை தொடுக்கும்
காளையர் கூட்டம் மறுபுறம்

வானுயர்ந்து நிற்கும் ரங்கராட்டினம் 
அதில் தலைகீழாக சுற்ற
முண்டியடிக்கும் குழந்தைகள்
வாய் நிறைய வெற்றிலை மென்று
வழியெல்லாம் துப்பிடும் கிழவிகள்
திருவிழாவை தீர்த்ததோடு கொண்டாடும் கிழவர்கள்

திருவிழா வந்தால்  தனி சிறப்பு
தெருவெங்கும் மகிழ்ச்சியின் கதகதப்பு
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: MyNa on October 02, 2016, 06:02:37 PM
இப்படியே உறைந்துவிடாதா  இந்த நொடி ..

எட்டியவரை  கண்கவர் வண்ணங்கள்
கேட்கும் திசை  எல்லாம்  சிரிப்பு  சத்தம்
ஆங்காங்கே ஆனந்தமாய் ஓடியாடும்  சிறுமிகள்
சுதந்திரமாய்  சுற்றி திரியும் சிறுவர்கள்  என

இப்படியே  உறைந்துவிடாதா  இந்த நொடி ..

கம்பீரமாய் வீற்றிருக்கும் கூடாரத்தினுள்
உணவுகள் வரவேற்று காத்திருக்கையில்
சிறியவர் பெரியவர் என வயது பாகுபாடின்றி
அனைவரும் அன்பை பரிமாறி கொள்கையில்

இப்படியே உறைந்துவிடாதா இந்த நொடி ..

வேலை பளு , மன உளைச்சல்
என ஏதும் இல்லாமால் தன்னையே மறந்து
ஒருகணம்  குழந்தைகளோடு குழந்தைகளாக
தாய் தந்தையர்கள்  மாறி மகிழ்ந்திட

இப்படியே உறைந்துவிடாதா  இந்த நொடி .
.

மனதில் பாரமும்  கண்ணில் ஈரமும்  சுமந்து
ஓய்ந்து  போன  உள்ளங்களின் வாழ்க்கை
ஒரு  நாள்  எந்த கவலையும் இன்றி
இதே  போல் வண்ண  மயமாய்  இருக்கையில்

இப்படியே உறைந்துவிடாதா இந்த நொடி..


பசுமையான நினைவுகளுடன் அன்றைய ஏக்கம்
இன்றும் மனதில் உறைந்துகிடக்க
வராதோ ஓவியத்தில் உள்ள அந்த நாள்
மீண்டும் என் வாழ்வை வண்ண மயமாக்க ..


மைனா தமிழ் பிரியை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: DaffoDillieS on October 02, 2016, 08:10:46 PM
அழகிய கனாக்காலம்..
ஊர் பூனும் விழாக்கோலம்..
கண்கவர் ரங்கராட்டினம்..
பூரித்துப் போகும் என் மனம்..

அந்தி சாய்ந்த இனிய பொழுதில்..
சூரியனுக்கீடாய் ஒளிரும் மின்விளக்குகள்..
அங்காடிகளில் மொய்ச்சும் ஜனத்திறள்..
சொல்லொன்னா வியப்புரும் என் கண்கள்..

புத்தாடையனிந்து வலம் வரும் நேரம்..
காண்போரை லயிக்க வைக்கும் ஊர்க்கோலம்....
சித்தம் சிலிற்க வைக்கும் பூக்களின் நறுமணம்..
சில்வண்டுகள் பூக்கூடைகளில் போடும் ரீங்காரம்


நாவூறும் திண்பண்டங்கள்..
வயது பாராமல் ஆடிக்களிக்க பற்பல விளையாட்டுகள்..
சலசலக்கும் வளையல் கடைகள்..
மனதை வசீகரிக்கும் வண்ண வண்ண மலர்கள்..
இனிதினிதாய்ப் பழச்சாறுகள்..

மக்களை ஈர்க்கும் டென்டு கொட்டாய்..
என்னைச் சிறுபிள்ளையாக்கும் பஞ்சுமிட்டாய்..
குழந்தைகள் யாவரும் உற்சாகமாய்..
ஆடவரும் பெண்டிரும் அழகழகாய்..

சாதி மதம் பணக்காரன் ஏழை பாராமல்..
அனைவரும் ஒன்றாய்க் கூடும் இந்நொடி..
இதயத்தை லேசாக்கி..
துன்பங்களை மறக்கடித்து..
என்னுள்ளேயே திருவிழாக்கோலம் உண்டாக்கக் கண்டேனே..!!!!!


--நன்றிகள்--



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: BreeZe on October 02, 2016, 08:39:47 PM



வருடம் ஒரு முறை வந்தாலும்
திருவிழா வசந்த நாள் தான்
திருவிழா வந்தாலே
தித்திக்கும் மனமெல்லாம்

திருவிழா வந்தால்
ஓட்டையாவது என்னவோ
அப்பாவின் பாக்கட்டுகள் தான்
பட்டுப் புடவை என்ன
விதவிதமான அலங்காரப்பொருட்கள் என்ன
இமிடேஷன் நகைகள் என்ன
வாங்கி தாரா விட்டால்
அப்பா அப்பளம் தான்

நாய் கூட துணைக்கு யாரும் வரமாட்டார்களா
என தேடி நடக்கும்
ஓய்ந்த வீதிகள் எல்லாம் வர்ணமயமாகும்
நகரத்து வீதி போல அமளி துமளி படும்

திருவிழா அன்று ஒலிபெருக்கிகள்
நீயா நானா என
போட்டி போட்டுக் கொண்டு கதறும்

மாலையானதும் வர்ண விளக்குகள்
கிராமத்தையே சொர்க்கலோகம் ஆக்கிவிடும்
பந்தல்கள் கட்டி
பழரசமும் சர்பத்துகளும்
இலவசமாக விநியோகிக்கப் படும் 

தனியே பாடசாலைக்குப் போகவே அனுமதிக்காத வீட்டில்
அன்று தான் சுதந்திர நாள்
நண்பிகள் அனைவரும் சீவி சிங்காரித்து
பட்டுப்புடவை தரையை தழுவ
விதவிதமாக பூக்கள்
கூந்தலை அலங்கரிக்க
நான் ராஜகுமாரியாக
எனது அந்தப்புரத்து தோழிகளுடன்
ஊர்வலம் புறப்படுவோம்
ஊர் பசங்களுக்கும் அன்று தான்
ஜொள்ளு விடும் நாள்
இருக்கும் கறுப்புக் கலர் போக
முகமெல்லாம் வெள்ளையடித்து
மேலுக்கும் கீழுக்கும்
சம்மந்தமில்லாத உடையணிந்து
தங்களை கதாநாயகர்களாக நினைக்கும்
கோமாளிகள் பின்தொடர
கிராமத்தை வலம் வருவதே
பேரானந்தம்

ரங்கராட்டினம்
அதில் உட்கார்ந்து உற்சத்துக்குப் போனதும்
இந்த உலகத்துக்கே நானே ராணி
என்று ஒரு கர்வம் மனதில் தோன்றும்

ஒருவரை ஒருவர்
விரட்டிய படி குழந்தைகள் ஓட
பாட்டி  தாத்தாக்கள் கை பிடித்தபடி
பாலகர்கள் நடை பயில
கூச்சலும் கும்மாளமுமாக
அந்த நாளே குதூகலமாகும்
முடிந்த பிறகு மறுபடி வராத என
மனது ஏங்கும் 


பதிப்புரிமை
BreeZe


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: இணையத்தமிழன் on October 02, 2016, 08:39:53 PM

காலையில் வாசல் தெளித்து
வண்ண  கோலங்களிட்டு !
அறுசுவை உணவு படைக்க
வெறிச்சோடிக் கிடந்த வீதிகள்
அனைத்தும் விழாக்கோலம் பூண

விருந்தினர் அனைவரும் வீட்டில் இருக்க
மழலைகள் மகிழ்ச்சியில் துள்ளி விளையாட
பாட்டோ பட்டையைக்கிளப்ப
பாவையர் அனைவரும் பட்டுடுத்தி
இளைஞர்கூட்டத்தை தன் வசம் இழுக்க !
 
கடைதெருவோ கலகலக்க
அந்தி பொழுதிலே ஆதவன் மறைய
தெருக்களில் வண்ணவிளக்குகள் பல்லிளிக்க !
ராட்டினங்கள் கம்பிரமாய் நிற்க

பெருசுகள் ஊர்கதை பேச
காளையர் கண்கள்  கன்னிப்பெண்களை நோக்க
ஜவ்வுமிட்டாயும் ஜிகிர்தண்டாவும் ருசி பார்க்க
பகையை மறந்து  ஊரே ஒன்று கூடிட

வானவேடிக்கையுடன் ஊர்கூடி தேரிழுக்க
புடைசூழ அசைந்தாடி வந்ததாம் தெய்வம்
                                      -இணைய தமிழன்
                                       ( மணிகண்டன் )
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: AnoTH on October 02, 2016, 10:14:46 PM
இங்கு அனுமதி தடை ! இங்கு அனுமதி உண்டு !


மனதை உலுக்கிப் புன்னகையை
மறக்கச்  செய்யும் கவலைக்கு
இங்கு அனுமதி தடை.

அற்புத உடலைக் கட்டிப்போட்டுவிடும்
சோர்வுக்கு இங்கு அனுமதி தடை.

இளப்புகளை எண்ணி விழியில்
வடிந்தோடும் கண்ணீர்த்   துளிகளுக்கு 
இங்கு அனுமதி தடை.

எமது  மூளையை நிலைப்படுத்தாமல்
விடும் சிந்தனைகளுக்கு இங்கு
அனுமதி தடை.

சமூக வாழ்வியலில் கலந்து வாழ
மறுக்கும்  தனிமை விரும்பிகளுக்கும்
இங்கு அனுமதி தடை.


தன் கவலைகளை சிறிது நேரம்
மறந்து சுதந்திர காற்றைச் சுவாசிக்க
ஏங்கும் மனதிற்கு அனுமதி உண்டு.

தனிமையில் இருந்து மீண்டு
சமூக ஒன்றியத்தில் கலக்க
முனையும் ஆர்வத்திற்கு
அனுமதி உண்டு.

புதிய புதிய விளையாட்டுக்களை
மகிழ்ந்து வரவேற்கத்  துடிக்கும்
குழந்தைக்கு அனுமதி உண்டு.

தன்னம்பிக்கை வளர்த்து
ஆபத்துக்களை எதிர்கொள்ளும்
ஆளுமைக்கு அனுமதி உண்டு.

முகத்தில் வாடிக் கிடக்கும்
விழிகளை மலரச் செய்யும்
புன்னகைக்கும் இங்கு அனுமதி உண்டு.

இவையெல்லாம் இலவசம்

சொல்லும் கட்டளைகளுக்கமைய 
அடிமை வாழ்வை
மேற்கொள்ளும் உடலே !

உனக்கான  சில தருணம் இது.
நீ சுதந்திரமாக ஆட்டம் காணத்
துடிக்கும் வேளை இது.

சோம்பல் முறித்து எழுந்து விடு
புன்னகையால் அன்பான
நட்பைப் பெற்று விடு
உயிரின் ஓசையை உணர்ந்து விடு

களியாட்டக் கொண்டாட்டத்தில்
புதிய உலகை உருவாக்கிவிடு. 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: பவித்ரா on October 03, 2016, 04:41:35 AM
சிறு கிராமம் முதல் பெரிய நகரம் ,
வளர்ந்த நாடு வரை
அனைத்து மக்களையும்
மகிழ்விப்பது என்னவோ கேளிக்கையும்
வான வேண்டிகையும்
பொருட்காட்சிகளும்
சில பயம் கலந்த பயணங்களும்  தான் ...

அனைவரும் கண்டிப்பாக இதை
கடந்து வந்தவர்களே நாகரிகம் வளர்ந்து பல புதிய
தொழில் நுட்பத்தில் பொருட்காட்சியகம்
பல விதமான ராட்டினங்கள்
வந்தாலும் அவர் அவர் பயணித்தது
காலத்துக்கும் மறக்காத கல்வெட்டு ...

சொந்த பந்தங்கள் சேர்ந்து
அவர் அவர் செய்து  வரும் பலகாரம்
பகிர்ந்து பின் அதோடு நிற்காமல்
அங்கு விற்கும் பஞ்சி மிட்டாயில் துவங்கி
சுத்தமில்லாத சமைத்து கொடுக்கும் அனைத்தையும்
பிள்ளைகளுக்காக வாங்கி உண்டு
பிள்ளைகளோடு பிள்ளையாய்
ராட்டினத்தில் ஏற
பணம் கொடுத்து நாம் வாங்கும்
ஒரு வித பயம் கலந்த மகிழ்ச்சி
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது ...


முதல் பல் முளைத்த மழலையர் முதல்
பல் இழந்த பெரியவர் வரை
ஆச்சரியமாக ஒரு வித பீதி கலந்த
சந்தோஷத்துடன் ரசிப்பது பார்க்க அழகே !
இடை இடையே வயது பெண்களை கண்ணால்
வலை வீசி  துரத்தும் வாலிபரும்
அந்த பெண்களுக்கு காவலாய் வந்து
எதிர் வரும் பெண்ணை ஓரக்கண்ணால்
பார்க்கும் உத்தமரும் பார்க்க வெட்கம்
கலந்த சிரிப்பே மேலோங்கும் ...

இதன் அடிப்படை கரணம்  என்னவோ
இன்று ஒரு நாலாவது ஒன்று கூடி
சந்தோஷமாக இருந்து விட்டு வறுவோமே
என்ற  மனதின் ஏக்கமே  வாழ்க்கையை
ஒரு வழி பயணமாக பார்த்து
கடந்து போனவர்களை பற்றி கவலை படாமல்
சுகமான  நினைவுகளை சுமந்து
இருப்பவர்களுடன் சந்தோஷமாக
வாழுங்கள் .....
Title: ஆனந்தம்...
Post by: BlazinG BeautY on October 03, 2016, 06:07:37 AM
சிறுவர்கள்  பள்ளிப்  பாடங்கள் கனத்திட  ...
தந்தை  வேலை சுமைகள் ஏந்திட ..
தாய் இல்லத்தில் கடமைகளை நிறைவேற்றிட..
நொந்து நூலாய் போனார்
3 தலை முறை  மூதாட்டியார்..

இன்னல்களை தொல்லைகளை மறந்திட...
சுமைகளை மறந்து ..
மனம் போனது இன்பத்தை தேடி ...
வந்தது கேளிக்கை கூத்து  ..
சிறு வயது முதல் வயதானவர்கள் வரை
ஈர்த்தது காந்தமாய்..

அங்கும் இங்கும் வண்ணக் கோலங்கள்..
அங்கங்கே அங்காடிகள் ...
அழகு ராட்டினங்கள் சில ..
அலை மோதியது  கண்கள்..

அப்பா பணப்பையில் இருந்து
பணம் இறைத்திட   ..
அம்மா பிள்ளைகளுடன் இணைத்திட..
மூதாட்டியார் அவர்களை பார்த்து  இன்பத்தில் திளைத்திட..
கொண்டதே கோலா கோலம்..

அங்கங்கே விளையாட்டுகள்..
பரிசிகளை பார்த்து  திளைத்தார் சந்தோஷத்தில்..
அழகு ராட்டினங்கள் பல விதம்..
அதில் ஏறி செல்கையில் ...
சந்தோசம் ஒரு புறம்..
பயம் ஒரு புறம்...
மறந்ததே இன்னல்கள் துன்பங்கள்..

அங்கிருந்து வீடு சேர்கையில்..
இன்பம் போனது அதனுடன்..
பழைய வாழ்கை நிலைக்கு தள்ளிற்று ..
கணம்,சுமை, கடமை..கவலை..
மனம் எதிர் பார்க்கிறது ..
இன்னும் ஒரு வருடத்திற்கு..
விரைவில் வருவாய் எங்களுக்காக..
காத்திருக்கிறோம் உனக்காக...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 120
Post by: JEE on October 03, 2016, 01:55:58 PM
திரு விழாவால் என்ன பயன்?
அதற்கு என்ன சொல்வது?................

வண்ண விளக்குகளுடன்
ஊரெங்கும்  பளிச்பளிச்சென்று மின்ன
பெரியோர் முதல் சிறியோர்   வரை
கொண்டாடும் திருவிழா......

காதைப்பிளக்கும் ஒலிபெருக்கிகள்
காதைக் கிழியச்செய்யும் மேளம்
காதிற்கினிய பாட்டுக்கச்சேரி,
இசைக்குழுக்கள் வில்லுப்பாட்டு........

முதியோர்  தங்கள் தங்கள் மலரும்
நினைவுகளை மீட்பதும்
கடாவெட்டி  தங்கள் தங்கள்  மக்களை
உணவு உண்ணவைப்பதும்.........

பற்பல கலை நிகழ்ச்சிகளை
ரசித்தால்  என்ன? என்று
இளையோர்  தங்கள் தங்கள் மலரும்
நினைவுகளை உருவாக்கலும்........

இதுதான்  திருவிழா......

பல்வேறு ஊர்களில், நாடுகளில்
திரைகடலோடியும் திரவியம் தேடுவோர்
ஒன்று கூடி நண்பர்களைச் சந்திக்கும்
ஊர்பற்று  இவ்விழாவின் சிறப்பு.......


உற்றார் உறவினரை  நலம் விசாரித்து
ஒருவருக்கொரு குறையெனில் நேச
கரத்தால் தாங்கி உதவிடவும்
குடும்ப பற்று  இவ்விழாவின் சிறப்பு.........

ஆவி ஆத்மா  சரீரம் மூன்றிற்கும் நல்
ஆகாரம் செவ்வனே பெறுவோர்
ஆனந்தகளிப்புடன் மகிழ்வுடன்இருக்க
பெறுவது தானே  இவ்விழாவின் சிறப்பு.......

வாழ்க வளமுடன்..............