FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: BlazinG BeautY on October 01, 2016, 11:01:13 PM

Title: எறும்பு
Post by: BlazinG BeautY on October 01, 2016, 11:01:13 PM

சின்ன  சிறு எறும்பே ...
சுறு சுறுப்பின் சிகரமே ...
உன்னை கண்டால்  பொறாமை கொள்கிறேன் ...

சிறு துளையிலும்  நுழைவாய் ...
அது உனக்கு சுலபமே...
பெரிய துவரம் உங்களுக்கு கால் தூசு..

உன்னை போல் ஒற்றுமை யாரிடத்திலும் இல்லை ..
ஒன்றாக அனைத்தும் செய்வீர் ..
கோடை காலம் வெயில் காலம் உனக்கு தெரியேல்..
உன் குடும்பத்திக்காக உணவு சேர்ப்பீர்..
ஆறு சுவையிலும் இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு, கசப்பு,கரிப்பு,காரம்..
சுவைக்கும் போது இணைந்தே உண்பிர்..

களிறின் எதிரி நீயே ஆகும்...
பெரிய உருவமும் உன்னை பார்த்தால்..
பயந்து நடு நடுங்கும்..
பயமே வராதது ஏன்? ..

நான்
எதையும் செய்வேன் என்ற  உறுதியான என்னமா..
நாங்கள் ஒன்று சேர்த்தால்  பெரிய மலை என்ன ,
மலையும்  கற்களாய்  மாறும்..
கற்கள் மணலாய் மாறும்...
எங்களின் நம்பிக்கை,
எங்கள்  மனோபலம்
ஒற்றுமை எங்கள் அடையாளம்...

நன்றி ..
Title: Re: எறும்பு
Post by: thamilan on October 01, 2016, 11:18:39 PM
உங்கள் பெயரை போலவே உங்கள் கவிதையும் அழகாக இருக்கிறது தோழி.
தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்
Title: Re: எறும்பு
Post by: SweeTie on October 02, 2016, 08:40:21 PM
ஓவியம் உயிராகிறது  நிகழ்ச்சிக்கு எழுதி இருக்கலாம்.  நன்றாகவே இருக்கிறது . வாழ்த்துக்கள்
Title: Re: எறும்பு
Post by: BlazinG BeautY on October 03, 2016, 05:19:25 AM
தோழர் தோழிக்கு  நன்றி... .. எழுதிட்டேன்..நெட் சதி செய்தது... 
Title: Re: எறும்பு
Post by: ரித்திகா on October 04, 2016, 12:42:39 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvb.elmstba.com%2Fimgcache%2Falmstba.com_1368447309_905.gif&hash=b0b09fd2961de198772dd6355e14b374e5cd00fc)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fjeanporter.cmswiki.wikispaces.net%2Ffile%2Fview%2Fanimated_hands_clapping.gif%2F261471642%2Fanimated_hands_clapping.gif&hash=77a4757ffca10609f6ddc63384e2b09369a08409)


(https://openclipart.org/image/2400px/svg_to_png/181965/Cartoon-Ant.png)

அக்கா அருமையான கவிதை ....
கவிதைப் பணி  தொடரட்டும் ...
பாராட்டுக்கள் குவியட்டும் ....
வாழ்த்துக்கள் அக்கா ....!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvb.elmstba.com%2Fimgcache%2Falmstba.com_1368447309_905.gif&hash=b0b09fd2961de198772dd6355e14b374e5cd00fc)